மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

சமூக இடைவெளியைப் பேணும் காலத்தில் ஆன்லைன் கற்றலில் ஈடுபட்டு இந்த காலத்தை ஆக்கபூர்வமான முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு கோரிக்கை

Posted On: 25 MAR 2020 9:11PM by PIB Chennai

கொவிட்-19 பரவாமல் கட்டுப்படுத்தலுக்கு நாம் கூட்டாக மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சமூக இடைவெளியைப் பேணும் வகையில் வீடுகள் / விடுதிகளுக்குள்ளே நாம் இருந்து இதில் பங்கேற்றுள்ள காலத்தில், இந்த காலத்தை ஆன்லைன் கற்றல் மூலம் ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) கடிதம் எழுதியுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், யு.ஜி.சி. மற்றும் அதன் பல்கலைக்கழக மையங்களுக்கு இடையிலான மையங்கள் (ஐ.யு.சி.கள்) - தகவல் மற்றும் நூலக நெட்வொர்க் (INFLIBNET)  மற்றும் கல்வித் தொடர்பியல் கூட்டமைப்பு (CEC), ஆகியவற்றின் சார்பில் ஏராளமான தகவல் தொழில்நுட்ப முன்முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. அவை டிஜிட்டல் தளங்களாக உருவாக்கப்பட்டு, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக, கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் தங்களுடைய கற்றல் விஷயங்களை அதிகரித்துக் கொள்வதற்கு அணுகுவதற்கு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. அவற்றின் சில தகவல் தொழில்நுட்ப முன்முயற்சிகள் மற்றும் அவற்றுக்கான இணையதள தொடர்புச் சுட்டிகள் கீழே தரப்பட்டுள்ளன:

1. ஸ்வயம் ஆன்லைன் கல்வித் திட்டங்கள் https://storage.googleapis.com/uniquecourses/online.html சிறந்த கற்பித்தல் ஆதாரவளங்களை இதில் அணுகலாம். முன் ஸ்வயம் தளம்  மூலம் அளிக்கப்பட்ட இந்த வசதிகளை இப்போது எந்தப் பதிவும் இல்லாமல், கற்பவர்கள் யாரும் இலவசமாக இதை அணுக முடியும்.  ஸ்வயம் தளத்தில் (swayam.gov.in) ஜனவரி 2020 செமஸ்டருக்குப் பதிவு செய்த மாணவர்கள் / கற்பவர்கள் வழக்கம் போல இதில் தொடர்ந்து கற்கலாம்.

2. MOOCகள்: http://ugcmoocs.inflibnet.ac.in/ugcmoocs/moocs_courses.php hosts ஸ்வயம் இளநிலை பட்ட வகுப்பு மற்றும் முதுநிலை பட்ட வகுப்பு (தொழில்நுட்பம் அல்லாதது) கற்றலுக்கான விஷயங்களைக் கொண்டதாக, தொகுத்து வைக்கப்பட்ட பாடத் திட்டங்களைக் கொண்டதாக இருக்கும்.

3. e-PG Pathshala epgp.inflibnet.ac.in - இதில் உயர் தரத்திலான, பாடத்திட்ட அடிப்படையிலான, கலந்துரையாடும் மின்னணு பாடங்களில் 23,000 தொகுப்புகள் (மின்னணு வரி வடிவம் மற்றும் வீடியோ) இடம் பெற்றுள்ளன. 70 முதுநிலை பட்ட வகுப்பு பிரிவுகளில் சமூக அறிவியல், கலைகள், நுண்கலைகள், மானுடவியல், இயற்கை & கணித அறிவியல் பிரிவுகளில் இவை உள்ளன.

4. இளநிலை பட்ட வகுப்புகளுக்கு மின்னணு - பாட விவரங்கள்: 87 இளநிலை பட்ட வகுப்புகளுக்கு 24,110 மின்னணு பாட விவரத் தொகுப்புகள் சி.இ.சி. இணையதளத்தில் http://cec.nic.in/ இடம் பெற்றுள்ளன.

5. ஸ்வயம்பிரபா: https://www.swayamprabha.gov.in/  32 டி.டி.எச். சேனல்களின் தொகுப்பாக உள்ளது. கலைகள், அறிவியல், வணிகவியல், பர்பார்மிங் ஆர்ட்ஸ், சமூக அறிவியல், மானுடவியல் பாடங்கள், பொறியியல், தொழில்நுட்பம், சட்டம், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழான உயர் தரத்திலான கல்வி பாடத் திட்டங்களின் அடிப்படையிலான விஷயங்கள், அனைத்து ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும்  வாழ்க்கை முழுக்க கற்பதில் ஆர்வம் உள்ள குடிமக்களுக்கு உதவும் வகையில் இதில் உள்ளன. இவை இலவச ஒளிபரப்புக்கு அனுமதிக்கப்பட்ட சேனல்கள். உங்கள் கேபிள் ஆபரேட்டர் மூலம் இதை நீங்கள் பெற முடியும். ஒளிபரப்பான விடியோக்கள் / விரிவுரைகள் ஸ்வயம்பிரபா இணையதளத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

6. CEC-UGC YouTube channel: https://www.youtube.com/user/cecedusat கல்விப் பாடத்திட்டத்தின் அடிப்படையிலான விரிவுரைகளை முழுக்க இலவசமாக இதில் வரம்பின்றி அணுக முடியும்.

7. தேசிய டிஜிட்டல் நூலகம் : https://ndl.iitkgp.ac.in/  பல்வேறு அமைப்பு முறைகளில் கல்விக்கான பாடங்களை ஏராளமாகக் கொண்ட டிஜிட்டல் அமைப்பு முறையாக இது உள்ளது. பிரதானமான இந்திய மொழிகளில் அனைத்து கல்வி நிலைகளிலும், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் காலம் முழுக்க கற்கும் ஆராய்ச்சியாளர்களையும் உள்ளடக்கியதாக, அனைத்து துறைகளிலும் உள்ளவர்களை உள்ளடக்கியதாக இது இருக்கும். வழக்கமான அணுகுதல் வசதிகளைக் கொண்டதாகவும், மாற்றுத்திறனாளி கற்பவர்களுக்கும் உகந்ததாக இது இருக்கும்.

8. Shodhganga : https://shodhganga.inflibnet.ac.in/ என்பதுஇந்திய மின்னணு ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் அறிக்கைகளின் டிஜிட்டல் தொகுப்புகளாக உள்ளது. இதில் 2,60,000 பதிவுகள் உள்ளன. ஆராய்ச்சி மாணவர்கள் தங்களுடைய பி.எச்டி கட்டுரைகளை இதில் பதிவு செய்து கொண்டு, தங்களுடைய பணியை எல்லோரும் அணுகும் வசதியை ஏற்படுத்தித் தரலாம்.

9. e-Shodh Sindhu https://ess.inflibnet.ac.in/ தொகுத்து வைக்கப்பட்ட 15,000 முக்கிய மற்றும் ஆய்வாளர்களால் ஆய்வு செய்யப்பட்ட சஞ்சிகைகள், நிறைய வாழ்க்கை சரிதங்கள், பல்வேறு வெளியீட்டாளர்கள் மற்றும் தொகுப்பாளர்கள் பல்வேறு துறைகளில் உருவாக்கிய தகவல் தொகுப்புகள் இதில் இடம் பெற்றிருக்கும். யு.ஜி.சி. சட்டத்தின் 12 (B) மற்றும் 2 (f) பிரிவுகளின் கீழ் வரும், மத்திய அரசால் நிதியளிக்கப்பட்ட தொழில்நுட்ப கல்வி நிலையங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்தவர்கள் தொகுத்த தகவல்கள் இதில் இருக்கும்.

10.Vidwan : https://vidwan.inflibnet.ac.in/ நிபுணர்கள், வாய்ப்புள்ள கூட்டு செயல்பாட்டளர்கள், நிதியளிக்கும் ஏஜென்சிகள், கொள்கை உருவாக்குபவர்கள் மற்றும் நாட்டில் உள்ள ஆராய்ச்சி அறிஞர்களைப் பற்றிய தகவல்களைக் கொண்டதாக இது இருக்கும். நிபுணர்களின் தகவல் தொகுப்பை விரிவுபடுத்த உதவியாக, வித்வான் முனையத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பரவலான பாடப் பிரிவுகள் மற்றும் பாடங்களில் நிபுணர்களால் தயாரிக்கப்பட்ட இந்த தகவல் தொழில்நுட்ப வசதிகள், அனைவருக்கும் அருமையான கற்றல் அனுபவங்களை அளிக்கும் என்று நம்பப்படுகிறது.

மேற்கொண்டு சந்தேகங்கள் இருந்தால் அல்லது விளக்கங்கள் தேவைப்பட்டால் UGC, INFLIBNET மற்றும்  CEC-ஐ பின்வரும் இமெயில்களில் தொடர்பு கொள்ளலாம்: eresource.ugc[at]gmail[dot]com, eresource.inflibnet[at]gmail[dot]com மற்றும் eresource.cec[at]gmail[dot]com

*****



(Release ID: 1608334) Visitor Counter : 197