மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ,அதன் தன்னாட்சி நிறுவனங்கள், துணை அலுவலகங்கள் 3 வார காலத்துக்கு மூடப்படிருக்கும்

இடுகை இடப்பட்ட நாள்: 25 MAR 2020 12:05PM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சகம் 24.3.2020 அன்று பிறப்பித்த உத்தரவுக்கு இணங்க, மத்திய மனித மேம்பாட்டு அமைச்சகம் ,தனது அனைத்து அலுவலகங்கள், அதன் கட்டுப்பாட்டில் உள்ள  தன்னாட்சி பெற்ற நிறுவனங்கள், அதன் துணை அலுவலகங்கள் ஆகியவை 3 வார காலத்துக்கு மூடியிருக்கும் என்று அறிவித்துள்ளது. இருப்பினும், அனைத்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் வீடுகளில் இருந்தவாறு பணியாற்றுவார்கள் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஒதுக்கீடு தொடர்பான நிதி விஷயங்கள், குறிப்பாக ஊதியம், ஓய்வூதியம் ஆகியவை தவறாமல் வழங்கப்பட்டுள்ளதா என்பதை அந்தந்த பிரிவுகள் மற்றும், மண்டல தலைமைப்பொறுப்பில்  உள்ளவர்கள் உறுதி செய்வர்.

 

மத்திய இடைநிலை கல்வி வாரியம், தேசிய திறந்தநிலை கல்வி நிறுவனங்கள்தேசிய தேர்வு முகமை போன்றவை தேர்வுப் பட்டியலை மாற்றியமைக்க வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கல்வி ஆண்டின் மாற்று நாட்காட்டியைத் தயாரிக்குமாறு, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் மற்றும் தன்னாட்சி பெற்ற அமைப்புகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

.

*****


(வெளியீட்டு அடையாள எண்: 1608088) வருகையாளர் எண்ணிக்கை : 212
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Bengali , Assamese , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam