பிரதமர் அலுவலகம்

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு மக்களவையில் பிரதமர் மோடி ஆற்றிய பதிலுரை

Posted On: 06 FEB 2020 7:55PM by PIB Chennai

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு எனது நன்றியறிதலை தெரிவிக்கும் வகையில் இந்த அவையின் முன் நிற்கிறேன். மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்கள் புதிய இந்தியா குறித்த தொலைநோக்கை தனது உரையில் இங்கே வழங்கியிருந்தார். 21ஆம் நூற்றாண்டின் மூன்றாவது தசாப்தத்தில் மாண்புமிகு குடியரசுத் தலைவரின் இந்த உரையானது நம் அனைவருக்கும் இந்த தசாப்தத்திற்கான வழிகாட்டுதலை வழங்குவதாகவும், நாட்டின் குடிமக்கள் அனைவரின் மத்தியிலும் நம்பிக்கையைத் தோற்றுவிப்பதாகவும் அமைந்துள்ளது.

குடியரசுத் தலைவரின் உரை மீதான விவாதத்தில் இந்த அவையின் அனுபவம் வாய்ந்த மாண்புமிகு உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியதோடு, தங்கள் சொந்த கருத்துக்களையும் வழங்கியிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவருமே தங்களுக்கேயுரிய வகையில் இந்தத் விவாதத்திற்கு சுவையூட்ட முயற்சி செய்தனர். திரு. ஆதிர் ரஞ்சன் சவுத்திரி, டாக்டர் சசி தரூர், திரு. ஒவைசி, திரு. ராம்பிரதாப் யாதவ், திருமிகு பிரீதி சவுத்திரி, திரு. மிஸ்ரா, திரு. அகிலேஷ் யாதவ் போன்ற பலரும் இந்த விவாதத்தில் பங்கேற்றனர். அவர்கள் அனைவரது பெயரையும் நான் இங்கு குறிப்பிடவேண்டுமெனில் அது நிறைய நேரத்தை எடுத்துக் கொள்ளும். என்றாலும் அவர்கள் ஒவ்வொருவருமே தங்களுக்கே உரிய வகையில் தங்கள் கருத்துக்களை இங்கே எடுத்துரைத்தனர். அரசு மேற்கொண்டு வரும் இந்த வேலைகள் அனைத்திலுமே ஏன் இந்த அவசரம் என்ற கேள்வியும் இதன் மூலமாக எழுந்தது. இவை அனைத்தையுமே ஏன் ஒன்றாக, ஒரே நேரத்தில் செய்ய வேண்டும்?

தொடக்கத்திலேயே திரு சர்வேஷ்வர் தயாள்ஜி அவர்களின் ஒரு கவிதையை இங்கே எடுத்துக் கூற விரும்புகிறேன். அந்தக் கவிதை நமது கலாச்சாரத்தையும் எமது அரசின் தன்மையையும் எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது என்றே நான் கருதுகிறேன். அதே உத்வேகத்தோடுதான் வழக்கமான பாதையில் இருந்து விலகிச் செல்லவும், வேகமாக முன்னேறிச் செல்லவும் நாங்கள் முயற்சி செய்கிறோம்.  எப்படியிருப்பினும் சர்வேஷ்வர் தயாள்ஜி தன் கவிதையில் எழுதியிருந்தார்:

நடந்து நடந்து தேய்ந்து போன பாதையில் நடப்போர் பலவீனமானவர்களாக, திசை மறந்து போனவர்களாகவே இருக்கின்றனர்;

இதுவரையில் உருவாக்கப்படாத பாதையில் பயணத்தைத் தொடரும் நாங்கள்தான் மிகவும் அழகானவர்கள்.

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,

இப்போது மக்கள் ஒரு அரசாங்கத்தை மட்டுமே மாற்றியுள்ளனர், அது அவர்களின் நலன்களையும் மாற்றும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. ஒரு புதிய பார்வையுடன் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை காரணமாக, இங்கு வந்து சேவை செய்ய எங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் நாங்கள் அதே வழியில் நடந்திருந்தால், நீங்கள் நடந்துகொண்ட விதம், நீங்கள் பழகிய விதம், ஒருவேளை 70 ஆண்டுகளுக்குப் பிறகும் 370 வது பிரிவு இந்த நாட்டில் அகற்றப்பட்டிருக்காது. நீங்கள் சென்ற அதே வழியில் சென்றிருந்தால், முத்தலக்கின் வாள் இன்னும் முஸ்லிம் சகோதரிகளை பயமுறுத்திக் கொண்டே இருக்கும். நாங்களும் உங்கள் வழியில் சென்றிருந்தோமானால், ஒரு சிறுமியின்மீது பாலியல் வன்கொடுமை  செய்வோருக்கு மரண தண்டனை விதிக்கும் வாய்ப்பு இருந்திருக்காது. உங்கள் சிந்தனையை நாங்கள் பின்பற்றியிருந்தால், ராம் ஜன்ம பூமி இன்றும் சர்ச்சையிலேயே சிக்கியிருந்திருக்கும். உங்கள் அணுகுமுறையைப் பின்பற்றியிருந்தால், கர்த்தார்பூர் நடைபாதை ஒருபோதும் கட்டப்பட்டிருக்காது.

உங்கள் அணுகுமுறை மட்டுமே இருந்திருக்குமானால், வங்கதேசத்துடனான எல்லை குறித்த சச்சரவுக்கு இந்தியா தீர்வு கண்டிருக்காது.

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,

மாண்புமிகு அவைத் தலைவரைப் பார்த்து அவரது பேச்சை நான் கேட்கும்போது, ​​முதலில் நான் கிரண் ரிஜிஜூவை வாழ்த்த விரும்புகிறேன். அதற்குக் காரணம் அவர் மேற்கொண்ட கட்டுடல் இந்தியா இயக்கம். கட்டுடல் இந்தியா இயக்கத்தை மிகவும் உற்சாகமான வகையில் அவர் ஊக்குவிக்கிறார். அது குறித்து  உரைகளையும் அவர் வழங்குகிறார். இந்த உரைகளோடு கூடவே அவர் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்கிறார். இது கட்டுடல் இந்தியாவை பலப்படுத்துவதால், அதை ஊக்குவித்த மாண்புமிகு உறுப்பினர்களுக்கு நன்றி கூற விரும்புகிறேன்.

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,

நாடு ஒவ்வொரு கணமும் சவால்களை சந்தித்துக் கொண்டே இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. சில நேரங்களில் சவால்களைப் பார்க்காத நேரத்தையும் நாடு கண்டிருக்கிறது. சவால்களைத் தேர்ந்தெடுக்கும் திறன் இல்லாத அத்தகையவர்களையும் நாங்கள் பார்த்துள்ளோம். ஆனால் இன்று இந்தியாவிடம் இருந்து உலகம் என்ன எதிர்பார்க்கிறதுநாம் சவால்களை எதிர்கொள்ளாவிட்டால், நமது தைரியத்தை காட்டாவிட்டால், அனைவரையும் அழைத்துச் செல்லும் வேகத்தை அதிகரிக்காவிட்டால், அநேகமாக நாடு பல பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கும்.

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,

இதற்குப் பிறகும் கூட, நாங்கள் காங்கிரஸின் வழியிலேயே செல்ல வேண்டுமென்றால், ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகும், எதிரி சொத்துக்கள் குறித்த சட்டத்திற்காக நாடு காத்திருக்க வேண்டியிருக்கும். 35 ஆண்டுகளுக்குப் பிறகும், நவீன போர் விமானங்களுக்காக நாடு காத்திருக்க வேண்டியிருக்கும். 28 ஆண்டுகளுக்குப் பிறகும், பினாமி சொத்துச் சட்டம் நடைமுறைக்கு வந்திருக்காது. 20 ஆண்டுகளுக்குப் பிறகும், பாதுகாப்புப் படைத் தலைவர் நியமிக்கப்பட்டிருக்க மாட்டார்.

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,

எங்கள் அரசாங்கத்தின் மிகவேகமான நடவடிக்கைகளின் காரணமாகவும், ஒரு புதிய பாதையைப் பின்பற்றுவதன் மூலம் பழைய பாதையில் இருந்து விலகிச் செல்வதே எங்கள் நோக்கம். அதனால்தான், சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு, நாடு நீண்ட காலம் காத்திருக்கத் தயாராக இல்லை, காத்திருக்கக் கூடாது என்பதை நாம் நன்கு புரிந்துகொள்கிறோம். எனவேதான் எங்கள் வேகமும் பெரிதாகிறது. உறுதியும் முடிவு செய்யும் திறனும் இருக்க வேண்டும். தே நேரத்தில் உணர்திறன் மற்றும் தீர்வு காணும் திறனும் இருக்க வேண்டும். நாங்கள் மிக வேகமாகத்தான் பணியாற்றினோம். அந்த  வேலையின் விளைவு என்னவென்பதை, நாட்டு மக்கள் ஐந்து ஆண்டுகளில் கண்டிருக்கிறார்கள். அதைப் பார்த்தபின்னர் அதே வேகத்தில் தொடர்ந்து செல்ல, அதிக வலிமையுடன் மீண்டும் எழுந்து நிற்க எங்களுக்கு ஒரு வாய்ப்பையும் மக்கள் எங்களுக்கு அளித்திருக்கிறார்கள்.

எங்களது செயல் வேகமானதாக இல்லாதிருந்தால், 37 கோடி மக்களின் வங்கிக் கணக்குகள் இவ்வளவு குறுகிய காலத்தில் தொடங்கப்பட்டிருக்காது. இத்தகைய வேகம் இல்லாதிருந்தால், 11 கோடி மக்களின் வீடுகளில் கழிப்பறை பணிகள் முடிந்திருக்காது. வேகம் இல்லாமல் இருந்திருந்தால், 13 கோடி குடும்பங்களில் எரிவாயு அடுப்புகள் ஒளிர்ந்திருக்காது.  2 கோடி புதிய வீடுகள் ஏழைகளுக்காக கட்டப்பட்டிருக்காது. இந்த வேகம் துரிதமான ஒன்றாக இல்லாதிருந்தால், டெல்லியில் நீண்ட காலமாக சிக்கிக்கொண்டிருந்த, 1700 க்கும் மேற்பட்ட சட்டவிரோத காலனிகளில் வசிக்கும், 40 லட்சத்திற்கும்  அதிகமான மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக இருந்தது. அந்த வேலை முழுமையடையாமலே இருந்தது. இன்று அவர்கள் தங்கள் வீட்டிற்கான உரிமையைப் பெற்றிருக்கின்றனர்.

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,

வடகிழக்கு குறித்தும் இங்கு விவாதிக்கப்பட்டுள்ளது. அரசியல் சமன்பாடுகளை மாற்றும் திறனைப் பெறுவதற்கு வடகிழக்கு பல தசாப்தங்களாக காத்திருக்க வேண்டியிருந்தது. இப்போது அந்த நிலைமை இல்லை. அதனால்தான் அரசியல் ரீதியான முடிவுகள் எடுக்கப்படும்போது இப்பகுதி எப்போதும் ஓரங்கட்டப்படுகிறது. எங்களைப் பொறுத்தவரை, வடகிழக்கு என்பது வாக்குகளின் அடிப்படையில் எடைபோட வேண்டிய பகுதி அல்ல. இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டு உணர்வுடன் தொலைதூர பிராந்தியத்தில் வசித்து வரும், இந்திய குடிமக்களைப் பொறுத்தவரை, இந்தியாவின் வளர்ச்சிக்கு தகுந்த முறையில் அவர்களின் திறன்களை பொருத்தமான வகையில் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. அங்கு வாழும் ஒவ்வொரு குடிமகன் மீதும் மிகுந்த நம்பிக்கை வைத்து முன்னேறுவது எங்கள் முயற்சியாகும். இதன் காரணமாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் வடகிழக்குப் பகுதி மக்களைப் பொறுத்தவரையில், டெல்லி வெகு தொலைவில் இருப்பதாகத் தோன்றியது. இன்று டெல்லி அவர்களின் தலைவாசலில் நிற்கிறது. வடகிழக்கிற்கான அமைச்சர் தொடர்ந்து அலுவலகத்திற்கு வருகை தந்தார். 2-ம் நிலை, 3-ம் நிலையில் உள்ள சிறிய நகரங்களில் ஓர் இரவு தங்கி அங்குள்ள மக்களுடன் உரையாடி அவர்களின் நம்பிக்கையையும் அவர் வென்றெடுத்தார். அது மின்சாரத்தைப் பற்றியதாக இருந்தாலும் சரி, ரெயிலைப் பற்றியதாக இருந்தாலும் சரி, விமான நிலையத்தைப் பற்றியதாக இருந்தாலும் சரி அல்லது மொபைல் இணைப்பு பற்றியதாக இருந்தாலும் சரி. அவர்களது 21 ஆம் நூற்றாண்டின் வளர்ச்சித் தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சித்தோம்.

இந்த அரசாங்கத்தின் பதவிக்காலத்தில் நம்பிக்கை தரக்கூடிய முடிவுகள் எடுக்கப்படுவதைக் காணலாம். போடோக்கள் குறித்தும் இங்கே விவாதம் நடைபெற்றது. நாடாளுமன்றத்தில் இத்தகைய விவாதம் இப்போதுதான் முதல் முறையாக நடந்தது என்று கூறப்பட்டது. இது முதல்முறையாக நடந்தது என்றும் நாங்கள் ஒருபோதும் சொல்லவில்லை. பல பரிசோதனைகள் நடந்துள்ளன. இன்னும் பல பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன என்றுதான் நாங்கள் சொல்கிறோம். ஆனால் நடந்தவை அனைத்துமே அரசியலை அடிப்படையாகக் கொண்டே நடைபெற்றது. இதற்கு முன்பு எதைச் செய்தாலும் அது அரை மனதுடன் செய்யப்பட்டது. என்ன செய்தாலும், அது வெறும் சம்பிரதாயமான ஒன்றாகவே இருந்தது. அதன் காரணமாகவே, ஒப்பந்தங்கள் காகிதத்தில் மட்டுமே இருந்தன; புகைப்படம் வெளியிடப்பட்டது; கைதட்டல்கள் கிடைத்தன என்று மிகுந்த பெருமையுடன் இன்றும் பேசப்படுகிறது.

ஆனால் இந்தக் காகித ஒப்பந்தம் போடோ ஒப்பந்தத்தின் சிக்கல்களை பல ஆண்டுகளுக்குப் பிறகும் தீர்க்கவில்லை. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சமூக வாழ்க்கைக்கு தொடர்ந்து ஆபத்தை விளைவிக்கும் பல வகையான நோய்கள், தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில் எட்டப்பட்ட ஒப்பந்தம் வடகிழக்கு மற்றும் நாட்டின் சாமானியர்களுக்கு நீதியைக் கொடுப்பவர்களுக்கும் ஒரு செய்தியாகும். எங்களுடைய செயல்கள் மீண்டும் மீண்டும் விளம்பரப்படுத்தப்படுவதற்கும், பரப்புவதற்கும் நாங்கள் முயற்சிப்பதும் இல்லை. இருந்தாலும் கூட நாங்கள் மிகவும் கடுமையாக உழைக்கிறோம்; முயற்சி செய்கிறோம்.

ஆனால் இந்த முறை கையெழுத்தான           ஒப்பந்தத்திற்கு ஒரு தனித்தன்மை உள்ளது. அனைத்து ஆயுதக் குழுக்களும் ஒன்று கூடி, அனைத்து ஆயுதங்களோடும், தலைமறைவாக செயல்பட்டு வந்தவர்களும் இப்போது சரணடைந்துள்ளனர். இரண்டாவதாக சமாதான ஒப்பந்தத்தின் ஷரத்துக்கள் போடோ பிரச்சினை தொடர்பாக இனிமேல் கோரிக்கை எதுவும் இல்லை என்று கூறுகிறது. வடகிழக்கில்தான் சூரியன் முதலில் உதிக்கிறது. ஆனால் அவர்களுக்கு விடிவு வரவில்லை. அங்கு சூரியன் வருவது வழக்கம். ஆனால் அவர்களது வாழ்க்கையைச் சூழ்ந்திருந்த இருள் நீங்கவில்லை. இன்று என்னால் உறுதியாக கூற முடியும். அவர்களுக்கு இன்று ஒரு புதிய விடியலும் வந்துவிட்டது. ஒரு புதிய வெளிச்சமும் வந்துவிட்டது. உங்கள் கண்ணாடிகளை மாற்றும்போது அந்த வெளிச்சம் உங்கள் கண்களுக்குத் தெரியும்.

பேச்சுக்கு நடுவே எனக்கு ஓய்வு கொடுத்தமைக்காகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நேற்று, சுவாமி விவேகானந்தரின் தோள்களின் மீது நின்றபடி துப்பாக்கி தோட்டாக்கள் வெளிப்பட்டன. இங்கு பழைய சிறுகதையை நான் நினைவுகூ விரும்புகிறேன். ஒருமுறை சிலர் ரயிலில் பயணம் செய்தனர். ​​ரயில் வேகம் எடுக்கும்போது பாதையில் இருந்து ஒலி வருகிறது என்பது நம் அனைவரின் அனுபவமாகும். அங்கே ஒரு துறவி மகாத்மா அமர்ந்திருந்தார். அந்த பாதையில் இருந்து என்ன ஒலி வருகிறது என்று பாருங்கள், இந்த உயிரற்ற பாதையும் 'கடவுளே, எங்கள் இலக்கை அடைய எங்களுக்கு உதவுங்கள் என்று சொல்கிறது போல…’ ஆனால் இன்னொரு துறவி அவ்வாறு இல்லை என்று சொன்னார். 'ஆண்டவரே உங்கள் படைப்பு முழுமையானது என்று சொல்வதை நான் கேள்விப்படுகிறேன்.  ஒரு மதகுருவும் அங்கே அமர்ந்திருந்தார். வேறு எதையோ என்னால் கேட்க முடிகிறது என்று அவர் கூறினார். அவர் என்ன கேட்டார் என்று அந்த துறவிகள் அவரைக் கேட்டார்கள். கடவுளே உங்கள் கருணையால் நான் நீங்கள் சொல்வதைக் கேட்கிறேன் என்று சொன்னார்…  அங்கே அமர்ந்திருந்த ஒரு மல்யுத்த வீரர் அப்போது சத்துணவாக சாப்பிடுங்கள். உடற்பயிற்சி செய்யுங்கள் என்று தனக்குக் கேட்பதாகச் சொன்னார்...

மனதில் என்ன இருக்கிறதோ அதுதான் பேச்சில் பிரதிபலிக்கிறது என்று நேற்று விவேகானந்தரின் பெயரால் இங்கே கூறப்பட்டது ... அதைப் பார்க்க நீங்கள் தொலைதூரம் பார்க்கத் தேவையில்லை.  அது உங்களுக்கு மிக அருகில்தான் உள்ளது ..

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே, 

விவசாயிகளைப் பற்றி நான் உரையாடினேன். கடந்த காலங்களில் பல முக்கியமான படைப்புகள், பல புதிய வழிகள், புதிய சிந்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் மாண்புமிகு குடியரசுத் தலைவர் தனது உரையில் அதைக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இங்கே அதைப்பற்றி விவாதிக்க ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்ட விதம். இது அறியாமையா அல்லது வேண்டுமென்றா என்று எனக்குத் தெரியாது. சில விஷயங்கள் இதுபோன்றவை என்பதால், அறிவு இருந்தால், நாம் அதைச் செய்திருக்க மாட்டோம்.

ஒன்றரை மடங்கு விலைநிர்ணயம் என்பது விவாதிக்க வேண்டிய ஒரு தனிப் பொருள் என்பதை நாம் அறிவோம். எவ்வளவு நாட்களாக அது சிக்கிக்கொண்டிருக்கிறது. இது எங்கள் காலத்தில் அல்ல; ஆனால் அது விவசாயிகளுக்கு நாங்கள் பொறுப்பு ஏற்றோம். நாங்கள் அந்த வேலையையும் முடித்தோம். நீர்ப்பாசன திட்டங்கள் குறித்து 20-20 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்தன. இது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. யாரும் உங்களை கேள்வி கேட்கப் போவதில்லை. இவை தொடர்பான புகைப்படம் கிடைத்தது. ந்த வேலையையும்  முடித்து வைத்தோம். இதுபோன்ற 99 திட்டங்களை நாங்கள் மக்களிடம் ஒப்படைக்க வேண்டியிருந்தது. அவை முழுமையாக நிறைவேற்றப்படுவதற்கு 1 லட்சம் கோடிக்கு மேல் செலவு செய்ய வேண்டியிருந்தது. இத்திட்டங்களின் மூலம் இப்போது விவசாயிகள் பயனடையத் தொடங்கியுள்ளனர்.

இந்த ஏற்பாடு பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் செய்யப்பட்டது. விவசாயிகள் மத்தியில் தொடர்ச்சியான நம்பிக்கை உள்ளது. சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் பிரீமியம் விவசாயிகளிடமிருந்து வந்துள்ளது. ஆனால், இயற்கை பேரழிவு காரணமாக ஏற்பட்ட இழப்பின் கீழ், காப்பீட்டுத் திட்டத்திலிருந்து சுமார் 56 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயிகள் பெற்றுள்ளனர். விவசாயியின் வருமானம் அதிகரித்துள்ளது, இவை நமது முன்னுரிமைகள். இடுபொருட்களுக்கான செலவைக் குறைப்பதே முன்னுரிமை. முன்னதாக குறைந்தபட்ச ஆதரவு விலை என்ற பெயரில் என்ன நடந்தது?  பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் கொள்முதல் நாட்டில் 7 லட்சம் டன். இப்போது, ​​எங்கள் பதவிக்காலத்தில் இது 100 லட்சம் டன். இணையவழி பொது விவசாய சந்தைக்கான திட்டம் இன்று ஒரு டிஜிட்டல் வழிப்பட்ட உலகமாக மாறியிருக்கிறது. எங்கள் விவசாயி மொபைல் போனில் இருந்து உலகில் நிலவும் விலைகளைப் பார்க்கிறார், அதைப் புரிந்துகொள்கிறார். இ-நாம் திட்டத்தின் பெயரில், விவசாயிகள் தங்கள் சந்தையில் பொருட்களை விற்கலாம். சுமார் ஒரு கோடியே 75 ஆயிரம் விவசாயிகள் இந்த அமைப்பில் இப்போது இணைந்திருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த இ-நாம் திட்டத்தின் மூலம் சுமார் ரூ 1 லட்சம் கோடி மதிப்புள்ள வணிகத்தை விவசாயிகள் தங்கள் உற்பத்தியின் மூலம் செய்துள்ளனர். நாங்கள் கிசான் கடன் அட்டையை பிரபலப்படுத்தியுள்ளோம். கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, கோழி வளர்ப்பு போன்ற விவசாயம் தொடர்புடைய நடவடிக்கைகளை ஊக்குவித்தோம். சூரிய சக்தியை நோக்கி முன்னோக்கிச் செல்ல ஒரு முயற்சி இருக்க வேண்டும். சோலார் பம்புகள் பற்றி பேசுங்கள். இதுபோன்ற பல புதிய விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக இன்று அவர்களது பொருளாதார நிலைமையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

2014 இல் நாங்கள் வருவதற்கு முன்பு, விவசாய அமைச்சகத்தின் பட்ஜெட் ஒதுக்கீடு 27 ஆயிரம் கோடி. இப்போது து 5 மடங்கு அதிகரித்துள்ளது. ரூ. 27 ஆயிரம் கோடியிலிருந்து, நாங்கள் 5 மடங்கு, அதாவது சுமார் ரூ. ஒன்றரை லட்சம் கோடியை எட்டியுள்ளோம். பிரதமர் கிசான் சம்மன் திட்டத்தின் மூலம் நிதியுதவி நேரடியாக விவசாயிகளின் கணக்கில் செல்கிறது. இதுவரை சுமார் 45 ஆயிரம் கோடி ரூபாய் உழவர்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இடைத்தரகர் இல்லை. ஒன்றுக்கொன்று முரணான கோப்புகள் இல்லை. ஒரு கிளிக்கில் பணம் அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால், நாம் தொடர்ந்து அரசியல் செய்ய வேண்டும் என்றும் இங்குள்ள பல உறுப்பினர்களை நான் உறுதியாகக் கேட்டுக்கொள்கிறேன்எனக்குத் தெரியும், ஆனால் அரசியல் செய்வதற்காக விவசாயிகளின் நலன்களுடன் நாம் விளையாடுவோமா? விவசாயிகளின் பெயரில் உரத்த குரலில் பேசுவோர் தங்கள் மாநிலத்தில் இந்த விஷயத்தை ஆராயுமாறு மாண்புமிகு உறுப்பினர்களை நான் கேட்டுக்கொள்கிறேன் ... தங்கள் மாநில விவசாயிகள் பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்ட நிதியைப் பெறுவதை அவர்கள் ஒன்றுசேர்ந்து உறுதிப்படுத்தட்டும்.

அந்த அரசாங்கங்கள் இத்திட்டத்திற்குத் தேவைப்படும் விவசாயிகளின் பட்டியலை ஏன் கொடுக்கவில்லை? அவர்கள் ஏன் இந்த திட்டத்தில் சேரவில்லை? யாருக்கு தீங்கு ஏற்பட்டது? யார் இழப்பை சந்தித்தார்கள்? இழப்பு ஏற்பட்டது அந்த மாநில விவசாயிகளுக்குத்தான். மாண்புமிகு உறுப்பினர்களிடம் நான் ஒரு விஷயம் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அவர்கள் வெளிப்படையாக பேச முடியாமல் போகலாம். ஒரு சில இடங்களில் இதுபோல நிறையவே நடக்கும். ஆனால் அதே நேரத்தில், இவ்வளவு சொன்ன மாண்புமிகு உறுப்பினர்களிடம் நான் பேசுவேன் என்பதையும் அவர்கள் அறிவார்கள். அதீதமான பேச்சுக்கள், வாக்குகள் சேகரிப்பு மூலம் அதிகாரம்  கைப்பற்றப்பட்டது. ஆனால் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. சத்தியம் செய்து அதிகாரத்தைக் கைப்பற்றிய அந்த மாநிலங்களைப் பாருங்கள். அங்கு விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. குறைந்தபட்சம் இங்கு அமர்ந்திருக்கும் மாண்புமிகு உறுப்பினர்கள் அந்த மாநிலங்களின் பிரதிநிதிகளாகவும் இருப்பர்கள். இதற்குப் பின்பாவது அவர்கள் அந்த மாநிலங்களுக்கு விவசாயிகளுக்கு உரிமைகளை வழங்க தயங்கக்கூடாது என்று சொல்ல வேண்டும்.

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,

அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றபோது, ​​நான் ஒரு விரிவான கோரிக்கையை விடுத்தேன். எனது கருத்தை தெரிவித்தேன். அதற்குப் பிறகு பாராளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பு, நான் ஊடகங்களிடையே பேசும்போது, ​​நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பான பிரச்சினைகள் குறித்த வகையில் நாடாளுமன்றத்தின் அனைத்து விவாதங்களையும் அர்ப்பணிக்க வேண்டும் என்று நான் அப்போது கூட கூறியிருந்தேன். இந்த மன்றத்தின் முன் கருத்து, திறன் மற்றும் திறமை ஆகியவற்றின் கலவையை நாங்கள் கொண்டு வந்துள்ளோம், ஏனெனில் தேசிய, சர்வதேச பொருளாதார சூழ்நிலையிலிருந்து பயனடைய இந்தியா எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் திசைவழி என்ன? இந்த அமர்வு நீடிக்கும் வரை, நாங்கள் மீண்டும் சந்திக்கவிருக்கும் இடைவேளைக்குப் பின்னரும் கூட, புதிய பரிந்துரைகளுடன் விரிவாகப் பேச வேண்டும் என்று அனைத்து உறுப்பினர்களிடமும் நான் கேட்டுக்கொள்கிறேன், இதனால் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளின் நன்மைகளைப் பயன்படுத்தி நாடு முன்னேற முடியும். உங்கள் அனைவரையும் இதற்காக அழைக்கிறேன்.

ஆம். முக்கியமான பொருளாதார பிரச்சினைகள் குறித்த கூட்டுப் பொறுப்பு இது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். கடந்த காலத்தை நாம் மறக்க முடியாது. ஏனென்றால் இன்று நாம் எங்கு நிற்கிறோம் என்பதை அறிய, கடந்த காலத்தில் நாம் எங்கிருந்தோம் என்பதை அறிந்து கொள்வது அவசியம். இது உண்மைதான். ஆனால் இது ஏன் நடக்கவில்லை? எப்போது நடக்கும்? அது எப்படி நடக்கும் என்று எங்கள் மாண்புமிகு உறுப்பினர்கள் கேட்கிறார்கள். நீங்கள் விமர்சிக்கிறீர்கள் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் நீங்கள் விமர்சிக்கிறீர்கள் என்பதை நான் ஏற்கவில்லை. நீங்கள் என்னைப் புரிந்து கொண்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால், ஏதாவது நடக்க வேண்டுமானால் அவர் அதைச் செய்வார் என்று நீங்கள் நம்புகிறீர்கள்எனவே, நான் இந்த விஷயங்களை விமர்சனமாக எடுத்துக் கொள்ளவில்லை.

வழிகாட்டுதல், உத்வேகம் ஆகியவற்றையே நான் நம்புகிறேன். எனவே இந்த பரிந்துரைகள் அனைத்தையும் நான் வரவேற்கிறேன். அதை ஏற்க முயற்சிக்கிறேன். எனவே, முன்வைக்கப்பட்ட எந்தவொரு பரிந்துரைகளையும்  நான் குறிப்பாக வரவேற்கிறேன். இது ஏன் நடக்கவில்லை, எப்போது நடக்கும், எப்படி நடக்கும் என்பதற்கான நல்ல தொடக்கப்புள்ளிகள் இவை. நாம் அனைவரும் நாட்டைப் பற்றி சிந்திக்கிறோம். ஆனால் கடந்த காலத்தைப் பற்றிப் புரிந்து கொள்ளாமல் நிகழ்காலத்தைப் புரிந்துகொள்வது கடினம். கடந்த காலத்தைப் பற்றி நாம் அனைவரும் அறிவோம். செய்தித்தாள் தலைப்புச் செய்திகளில் ஆதிக்கம் செலுத்துவதற்கு ஊழல் பயன்படுத்தப்பட்டது. மேலும் சபையிலும் ஊழல் குறித்து கோபமான வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றன. அப்போது சொல்லப்பட்ட அதே விஷயம். தொழில்திறன் அற்ற வங்கி சேவையை யார் மறக்க முடியும்? பலவீனமான உள்கட்டமைப்பு கொள்கையை யார் மறக்க முடியும்? அந்த சூழ்நிலைகளுக்கு ஒரு திட்டவட்டமான திசையுடனும் நீண்ட கால இலக்குகளுடனும் தீர்வு காண்பதன் மூலம் அந்த சூழ்நிலையிலிருந்து வெளியேற நாங்கள் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டோம். அந்த முயற்சிகளின் விளைவாக இன்று நாம் நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்தி உள்ளோம். பணவீக்கத்தினை கட்டுக்குள் வைத்திருக்கிறோம். மேலும் பொருளாதார ஸ்திரத்தன்மையும் இருக்கிறது என்றே நான் நம்புகிறேன்.

நீங்கள் என் மீதுள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்தியதற்கு நான் உங்களுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நாங்கள் அதை செய்வோம். ஆனால், ஆமாம், ஒரு காரியத்தை நாங்கள் செய்ய மாட்டோம், அதை நடக்க விடமாட்டோம். அதாவது உங்கள் வேலையின்மையை நாங்கள் முடிவுக்கு கொண்டுவர மாட்டோம்.

ஜிஎஸ்டி குறித்து ஒரு முக்கியமான முடிவு எடுக்கப்பட்டது. கார்ப்பரேட் வரியைக் குறைத்தல், ஐபிசி அறிமுகம், அன்னிய நேரடி முதலீட்டை தாராளமயமாக்குதல் அல்லது வங்கிகளின் மறு மூலதனமயமாக்கல் ஆகிய எவையாக இருந்தாலும், பொருளாதாரத்திற்கு நீண்டகால வலுவான தன்மையை வழங்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நமது அரசாங்கம் எடுத்து வருகிறது. அந்த நடவடிக்கைகளிலிருந்து கிடைக்கும் லாபங்களை நம்மால் காண முடியும். எங்கள் அரசாங்கம் அந்தச் சீர்திருத்தங்கள் அனைத்தையும் செயல்படுத்துகிறது. அவை உங்கள் அரசாங்கத்தின் வல்லுநர்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்களால் கூட விரிவாக விவாதிக்கப்பட்டன. ஆனால் அவை ஒருபோதும் செயல்படுத்தப்படவில்லை. முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிப்பதற்கும் பொருளாதாரத்திற்கு வலிமை அளிப்பதற்கும் நாங்கள் பல முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளோம்.

ஜிஎஸ்டி வருவாய் 2019 ஜனவரி முதல் 2020 ஜனவரி வரை ஆறு முறை ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் பதிவாகியுள்ளது. நான் அந்நிய நேரடி முதலீட்டைப் பற்றி, கூறவேண்டுமெனில், 2018 ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் 22 பில்லியன் டாலர்களாக இருந்தது. இன்று, அதே காலகட்டத்தில் அந்நிய நேரடி முதலீடு 26 பில்லியன் டாலர்களை தாண்டியுள்ளது. நாடு மற்றும் நாட்டின் பொருளாதாரம் மீது அந்நிய முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது என்பதற்கு இது ஒரு சான்று. பொருளாதார துறையில் எல்லையற்ற வாய்ப்புகள் உள்ளன. இது வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கை, எனவே மக்கள் இங்கு முதலீடு செய்ய முன்வருகின்றனர். வதந்திகள் பரவினாலும் மக்கள் இங்கு முதலீடு செய்ய வருகிறார்கள் என்பது ஒரு பெரிய சாதனை.

மாபெரும் முதலீடு, சிறந்த கட்டமைப்பு வசதிகள், அதிகப்படுத்தப்பட்ட மதிப்புக் கூட்டல் ஏற்பாடுகள்; அதிகபட்ச வேலை வாய்ப்பு உருவாக்கம் என்பதே எமது தொலைநோக்காக அமைகிறது.

விவசாயிகளிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொள்கிறேன். ஒரு விவசாயி பயிரிடப்பட்ட கோடைகாலத்தில் வயலில் கால்களை அடியெடுத்து வைக்கிறான். அதுவரை அவர் விதைகளை நடவில்லை. அவர் விதைகளை சரியான நேரத்தில் நடவு செய்கிறார். கடந்த 10 நிமிடங்களாக என்னதான் நடந்தாலும் சரி, நான் வயலில் பயிரிட்டு வருகிறேன். இப்போது நீங்கள் தயாராக இருப்பதால், விதைகளை ஒவ்வொன்றாக நடவு செய்வேன்.

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,

முத்ரா, ஸ்டார்ட்அப் இந்தியா, ஸ்டாண்டப் இந்தியா போன்ற திட்டங்கள் சுயதொழில் செய்வதில் பெரிதும் உதவியுள்ளன. முத்ரா திட்டத்தைப் பயன்படுத்தி கோடிக்கணக்கான மக்கள் சம்பாதிக்கத் தொடங்கியுள்ளதோடு மட்டுமல்லாமல், ஒன்று, இரண்டு அல்லது மூன்று நபர்களுக்கு வேலை வழங்குவதிலும் வெற்றி பெற்றுள்ளனர். இது மட்டுமல்லாமல், வங்கிகளிடமிருந்து பணம் பெற்ற முத்ரா திட்ட பயனாளிகளில் 70 சதவீதம் பேர் எங்கள் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள். பொருளாதார ரீதியாக வசதியாக இல்லாத இந்த மக்கள் அனைவரும் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு தங்கள் பங்களிப்பை அளித்து வருகின்றனர். 28,000 க்கும் மேற்பட்ட புதிய தொழில்முனைவுகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன, இவை எனக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன. இவை இரண்டாம், மூன்றாம் நிலையில் உள்ள நகரங்களில் உள்ளன. நாட்டின் இளைஞர்கள் புதிய உறுதியுடன் முன்னேறி வருகிறார்கள் என்பதே இதன் பொருள். 22 கோடிக்கும் அதிகமான கடன்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. மேலும் கோடிக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

தொழில்முனைவோர் குறித்த உலக வங்கி தரவுகளின்படி இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. செப்டம்பர் 2017 முதல் நவம்பர் 2019 வரை, ஒரு கோடியே 49 லட்சம் புதிய சந்தாதாரர்கள் EPFO ​​நிகர ஊதியத்தில் சேர்ந்துள்ளனர். அவர்கள் எந்த வேலையும் செய்யாமல் பணத்தை டெபாசிட் செய்ய மாட்டார்கள். நேற்று, நான் ஒரு காங்கிரஸ் தலைவரின் பேச்சைக் கேட்டேன். ஆறு மாதங்களில் மக்கள் மோடியை குச்சியால் அடிப்பார்கள் என்று அவர் அறிவித்துள்ளார். இது கடினமான ஒன்று என்பது உண்மைதான், எனவே இதற்கு ஆறு மாதங்கள் போதுமானதுதான். அடுத்த ஆறு மாதங்களில், “சூரிய நமஸ்காருக்கானநேரத்தை அதிகரிப்பது என்று முடிவு செய்துள்ளேன். நான் கடந்த 20 ஆண்டுகளாக அவதூறுகளை கேட்டுக்கொண்டு வருகிறேன், நானே அவற்றின் ஆதாரமாக ஆகியுள்ளேன். சூரிய நமஸ்காரத்தின் மூலம் என் முதுகை நன்கு பலப்படுத்திக் கொள்வேன். அது குச்சியால் விழப்போகும் அடிகளைத் தாங்கும். இதை முன்கூட்டியே  அறிவித்ததற்காக நான் மிகுந்த நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஆறு மாதங்களில் எனது உடற்பயிற்சியை அதிகரிக்க எனக்கு போதுமான நேரம் கிடைக்கும்.

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,

நான்காம் (4.0) தொழில்புரட்சி மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் ஆகியவை பல கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வாய்ப்பைக் கொண்டுள்ளன. திறன் மேம்பாடு, திறன் பயிற்சி பெற்ற புதிய தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர் சீர்திருத்தங்களை உருவாக்குவதற்கான ஒரு முன்மொழிவை நாங்கள் சபையில் முன்வைத்துள்ளோம். இன்னும் பல திட்டங்கள் உள்ளன. நாட்டில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு எந்தவிதமான தடைகளும் ஏற்படாதவாறு இந்த அவை அவற்றையும் கருத்தில் கொள்ளும் என்று நான் நம்புகிறேன். இத்தகைய மாற்றங்களுக்கு உகந்த சூழ்நிலையில் ஒரு புதிய சிந்தனை செயல்முறையுடன் நாம் முன்வர வேண்டும். தொழிலாளர் சீர்திருத்தங்களை முன்வைக்க உதவுமாறு சபையின் அனைத்து மாண்புமிகு உறுப்பினர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். இதனால் வேலைவாய்ப்பை உருவாக்க புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரம் செய்வது எளிமையாவதோடு வாழ்க்கையும் எளிமையாகும். இந்தியப் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலர் மதிப்புள்ளதாக மாற்ற முடியும் என்று நான் நம்புகிறேன்.

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,

வரவிருக்கும் நாட்களில் 16 கோடி உள்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்துவதற்கான இலக்கு எங்களிடம் உள்ளது என்பது உண்மைதான். பொருளாதாரத்திற்கு வலிமையை வழங்குவதில் உள்கட்டமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை எங்கள் முந்தைய ஆட்சிக் காலத்தின்போது நீங்கள் கவனித்திருக்க முடியும். உள்கட்டமைப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது பொருளாதாரத்தை இயக்க உதவுகிறது. மேலும் வேலைவாய்ப்பையும் வழங்குகிறது. இது புதிய தொழில்களுக்கான வாய்ப்புகளையும் வழங்குகிறது. எனவே, உள்கட்டமைப்புக்கு ஒரு உந்துதல் கொடுக்க முடிவு செய்துள்ளோம். முந்தைய உள்கட்டமைப்பு கான்கிரீட் சிமென்ட் தொடர்பானது. முந்தைய உள்கட்டமைப்பு என்பது டெண்டர் செயல்முறை, இடைத்தரகர்கள். உள்கட்டமைப்பு குறித்து எந்தவொரு பேச்சும் எழும் போதெல்லாம் மக்கள் ஏதோ தவறாக நடக்கப் போகிறது என்ற உணர்வைப் பெறுகின்றனர்.

21 ஆம் நூற்றாண்டிற்கான நவீன இந்தியாவின் உள்கட்டமைப்பை உருவாக்குவது குறித்து இன்று நாம் வலியுறுத்தியுள்ளோம். எங்களைப் பொறுத்தவரை உள்கட்டமைப்பு என்பது கான்கிரீட் சிமென்ட் பற்றியது மட்டுமல்ல. உள்கட்டமைப்பு ஒரு புதிய எதிர்காலத்தை கொண்டு வருகிறது என்று நான் நம்புகிறேன். கார்கிலையும் கன்னியாகுமரியையும், கட்ச்சையும் கோஹிமாவையும் இணைக்கும் வலிமை உள்கட்டமைப்புக்கு மட்டுமே உள்ளது. உள்கட்டமைப்பு என்பது விருப்பங்கள் அல்லது சாதனையை உறுதிப்படுத்த உதவுகிறது.

மக்களின் கனவுகளுக்கு சிறகுகளைத் தரும் ஒரு விஷயம் எனில், அது உள்கட்டமைப்புதான். உள்கட்டமைப்பு மூலம் மட்டுமே மக்களின் படைப்பாற்றலை நுகர்வோருடன் இணைக்க முடியும். ஒரு பள்ளியுடன் ஒரு குழந்தையை இணைப்பது சிறியதாகத் தோன்றலாம், ஆனால் அது மீண்டும் உள்கட்டமைப்பு ஆகும். உள்கட்டமைப்பு ஒரு தொழிலதிபரை தனது நுகர்வோருடன் இணைக்கிறது. இது மக்களையும் இணைக்கிறது. உள்கட்டமைப்பு ஒரு கர்ப்பிணி தாயை ஒரு மருத்துவமனையுடன் இணைக்கிறது. எனவே, நீர்ப்பாசனம் முதல் தொழில் வரை, சமூக உள்கட்டமைப்பு முதல் கிராமப்புற உள்கட்டமைப்பு வரை, சாலைகள் முதல் துறைமுகங்கள் மற்றும் விமான வழித்தடம் முதல் நீர்வழிகள் வரை பல முயற்சிகளை நாங்கள் எடுத்துள்ளோம். இவை அனைத்தையும் கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடு கண்டிருக்கிறது. மக்கள் இவை அனைத்தையும்  பார்த்ததால்தான், இந்த நிலையை மீண்டும் அடைய எங்களுக்கு உதவியுள்ளனர். இதுதான் உள்கட்டமைப்பின் வலிமை.

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,

உள்கட்டமைப்பு துறையில் விஷயங்கள் எவ்வாறு நிகழ்கின்றன என்பதை நான் உங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு தர விரும்புகிறேன். உதாரணமாக டெல்லியை எடுத்துக் கொள்ளுங்கள். டெல்லி வழியாக ஆயிரக்கணக்கான லாரிகள் எவ்வாறு போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன என்பது அனைவருக்கும் தெரியும். டெல்லியைச் சுற்றி அதிவேக நெடுஞ்சாலையை 2009 க்குள் முடிக்க ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு  ஒரு தீர்மானத்தை எடுத்தது. 2014 ல் நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது, ​​அது காகிதத்தில் மட்டுமே இருப்பதைக் கண்டோம். நாங்கள் ஒரு திட்டத்தை தொடங்கினோம், இன்று புறவழி அதிவேக நெடுஞ்சாலை தொடர்பான பணிகள் நிறைவடைந்துள்ளன. இன்று, 40,000 க்கும் மேற்பட்ட லாரிகள் டெல்லிக்குள் நுழைந்து டெல்லிக்கு வெளியே செல்லவில்லை. டெல்லி மாசுபடுவதைத் தடுக்க இது ஒரு சிறந்த நடவடிக்கை ஆகும். ஆனால் உள்கட்டமைப்பின் முக்கியத்துவம் என்ன? 2009 க்குள் கனவைச் செயல்படுத்த இது 2014 வரை ஒரு துண்டுத் தாளாகவே இருந்தது. இதுதான் வித்தியாசம். இதைப் புரிந்துகொள்ள சிறிது நேரம் ஆகும்.

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,

ஒரு சில விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன். தரூர்ஜி அவர்கள் என்னை மன்னிக்க வேண்டும். அரசியலமைப்பை அவ்வப்போது காப்பாற்றுவது குறித்து ஒரு சிலர் இங்கு பேசியுள்ளனர். அரசியலமைப்பைக் காப்பாற்ற காங்கிரஸ் ஒரு நாளைக்கு 100 முறை பேச வேண்டும். அரசியலமைப்பை காப்பாற்றவும், அரசியலமைப்பை 100 முறை காப்பாற்றவும் காங்கிரசுக்கு இது ஒரு தாரக மந்திரமாக இருக்க வேண்டும். அரசியலமைப்பில் என்ன நடந்தது என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருந்தால், அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை நீங்கள் புரிந்து கொண்டிருந்தால், அதெல்லாம் அரசியலமைப்புச் சட்டத்தில் நடந்திருக்காது. எனவே, நீங்கள் அரசியலமைப்பைப் பற்றி பேசும்போதெல்லாம் உங்கள் தவறுகளை நீங்கள் உணரலாம். இது அரசியலமைப்பின் சக்தியை உணரவும் உதவும்.

மதிப்பிற்குரிய அவைத் தலைவர் அவர்களே, இதுதான் சரியான நேரம். அவசரநிலை காலத்தின்போது அரசியல் சாசன சட்டத்தை பாதுகாப்பது குறித்து நீங்கள் ஏன் பரிசீலிக்கவில்லை? இதே நபர்கள்தான் இப்போது அரசியல் சாசனம் குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். நீதித்துறையின் உரிமையையும் நீதித்துறையின் அதிகார வரம்பையும் பறித்தவர்கள், அரசியல் சட்டம் குறித்துப் பேசுகிறார்கள்.

வாழ்வதற்கான உரிமைகளைப் பறித்து விட்டதாகப் பேசியவர்கள்,  அரசியல் சட்டத்தை மீண்டும் எடுத்துரைப்பதோடு மட்டுமல்லாமல், அதைப் படிக்கவும் வேண்டும். அரசியல் சட்டத்தை மாற்றுவதற்காக மிக அதிகபட்ச தீர்மானங்களை கொண்டு வந்தவர்களுக்கு, அரசியல் சட்டத்தை பற்றிப் பேசுவதற்கு உரிமையில்லை. பலமுறை பல மாநில அரசுகள் கவிழ்க்கப்பட்டுள்ளன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பல அரசுகள் கலைக்கப்பட்டுள்ளன.

அமைச்சரவை ஒரு தீர்மானத்தை இயற்றியுள்ளது. ஜனநாயக ரீதியிலான, அரசியல் சட்ட ரீதியான  அமைச்சரவை - ஒரு தீர்மானத்தை இயற்றியுள்ளது. இதுபோன்ற ஒரு அமைச்சரவையால் இயற்றப்பட்ட ஒரு தீர்மானத்தை, ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கிழித்தவர்கள், அரசியல் சட்டத்தை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து கற்றுக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

‘அரசியல் சட்டத்தைப் பாதுகாப்போம் என்கிற மந்திரத்தை இவர்கள் சொல்வது அவசியம். பிரதமருக்கும், பிரதமர் அலுவலகத்துக்கும் அப்பாற்பட்டு,  தேசிய ஆலோசனைக் குழுவை அமைத்து,  அதன் மூலம் அரசை இயக்கிக் கொண்டிருந்தவர்கள் அரசியல் சட்டத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, அரசியல் சட்டத்தைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில், டெல்லியிலும், நாடு முழுவதிலும் என்ன நடந்துகொண்டிருக்கிறது? அனைத்தையும் நாடு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. புரிந்து கொண்டுதான் இருக்கிறது. நாட்டின் அமைதி ஒருநாள் தெரிய வரும்.

உச்சநீதிமன்றம் என்பது அரசியல் சட்டத்தின் முக்கிய அங்கம். எந்த ஒரு போராட்டமும் மக்களுக்கு இடையூறு விளைவிக்க கூடாது; எந்த ஒரு இயக்கமும் வன்முறையாக மாறக் கூடாது; என்று உச்சநீதிமன்றம் மீண்டும் மீண்டும் கூறி வந்துள்ளது.

அரசியல் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று கூறும் இதே நபர்கள்தான் - இதே கம்யூனிஸ்ட்காரர்களும், இதே காங்கிரஸ்காரர்களும் - தங்களது வாக்கு வங்கி அரசியலுக்காக மக்களைத் தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, ஒரு கவிஞர் கூறினார் “Khoob parda hai ki chilman se lage baithe hain. Khoob parda hai ki saaf chupte bhee nahin saamne aate bhee nahin” மக்களுக்கு அனைத்தும் தெரியும்.

மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, இந்த அவையில் சில தலைவர்கள் பயன்படுத்துகிற வாக்கியங்களும், பயன்படுத்துகின்ற மொழியும் மிகவும் வருத்தத்தை அளிப்பதாக உள்ளது. இங்கே அமர்ந்திருப்பவர்களில் பலர் மேற்குவங்கத்தில் கஷ்டப்பட்டவர்கள்தான். அங்கே என்ன நடக்கிறது என்பதை அவர்கள் விரிவாக கூறினார்களென்றால், நீங்கள் வேதனைப்படுவீர்கள், தாதா. அப்பாவி மக்கள் எவ்வாறு கொல்லப்படுகிறார்கள் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள்.

மதிப்பிற்குரிய அவைத் தலைவர் அவர்களே, காங்கிரஸ் காலத்தின்போது அரசியல் சட்டத்தின் நிலை என்னவாக இருந்தது என்று நான் அவர்களைக் கேட்க விரும்புகிறேன். மக்களின் நிலை என்னவாக இருந்தது? அரசியல் சட்டம் மிகவும் முக்கியமானது என்பதை நாம் அனைவரும் ஒப்புக் கொள்கிறோம். அப்படி நீங்களும் ஒப்புக் கொள்வீர்கள் என்றால் ஜம்மு காஷ்மீரில் இந்திய அரசியல் சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் உங்களை தடுத்தது யார்? ஜம்மு காஷ்மீரில் உள்ள என்னுடைய சகோதர, சகோதரிகளுக்கு, அரசியல் சட்ட உரிமைகளைத் தடுக்கின்ற பாவத்தைச் செய்தது யார்?

திரு சசி அவர்களே, நீங்கள் ஜம்மு-காஷ்மீரின் மருமகன். நீங்கள் அரசியல் சட்டம் பற்றி பேசுகிறீர்கள். நீங்கள் காஷ்மீரின் புதல்விகளைப் பற்றி யோசித்திருக்க வேண்டும். எனவே, அவைத்தலைவர் அவர்களே, ஜம்மு காஷ்மீர் தனது அடையாளத்தை தொலைத்து விட்டதாக மதிப்பிற்குரிய உறுப்பினர் ஒருவர் கூறினார். சிலருக்கு காஷ்மீர் வெறும் ஒரு துண்டு நிலம் என்று ஒருவர் கூறினார். மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, காஷ்மீரை வெறும் ஒரு துண்டு நிலமாக பார்ப்பவர்களுக்கு இந்த நாட்டைப் பற்றி எதுவுமே தெரியாது. அது அவர்களுடைய அறிவுத்திறனின் வறுமையை வெளிப்படுத்துகிறது. காஷ்மீர் இந்தியாவின் மகுடம்.

மதிப்பிற்குரிய அவைத் தலைவர் அவர்களே, காஷ்மீரின் அடையாளம் வெடிகுண்டு மற்றும் பிரிவினைவாதம் என்றாக்கப்பட்டது. காஷ்மீரின் அடையாளம் குறித்துப் பேசுபவர்கள் 1990ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் தேதி இருள் சூழ்ந்த இரவில், காஷ்மீரின் அடையாளத்தை புதைத்தவர்கள். சூஃபி பாரம்பரியமே காஷ்மீரின் அடையாளம். மான் லால்டெட், நந்த் ரிஷி, சையத் புல்புல் ஷா, மீர் சையது அலி ஹம்தானி ஆகியோர் காஷ்மீரின் பிரதிநிதிகள். அவர்களே காஷ்மீரின் அடையாளங்கள்.

மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, அரசியல் சட்டப் பிரிவு 370 அகற்றப்பட்டால் காஷ்மீர் பற்றி எரியும் என்று சிலர் கூறுகிறார்கள். இது என்னவிதமான தீர்க்கதரிசனம்? அரசியல் சட்டப் பிரிவு 370 வது பிரிவு நீக்கப்பட்டால், காஷ்மீர் பற்றி எரியும் என்று சொல்லும் இவர்களுக்கு -- நான் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். சிலர் சிறையில் உள்ளனர். இந்த அவை அரசியல் சட்டத்தைப் பாதுகாக்கும் அவை. இது அரசியல் சட்டத்திற்குக் கட்டுப்பட்ட அவை. இந்த அவையில் உள்ள மரியாதைக்குரிய உறுப்பினர்களின் ஆன்மாவைத் தொடுவதற்கு நான் முயற்சி செய்ய விரும்புகிறேன்.

மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதியன்று மெகபூபா முஃப்தி என்ன கூறினார்?

மெஹபூபா முஃப்தி கூறியது என்னவென்றால் --- அரசியல் சாசனத்திற்கு கட்டுப்பட்ட அனைத்து மக்களும் இதைக் கவனித்துக் கேட்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன் --

அவர் காஷ்மீரை இந்தியா வஞ்சித்து விட்டது என்று கூறினார் - இது மிகவும் தீவிரமான ஒரு விஷயம் - நாம் எந்த ஒரு நாட்டுடன் வாழத் தயார் என்று ஏற்றுக் கொண்டோமோ, அந்த நாட்டினால் நாம் வஞ்சிக்கப்பட்டு விட்டோம். 1947 ஆம் ஆண்டில் நாம் தவறாகத் தேர்ந்தெடுத்து விட்டோம் என்பது போல் தெரிகிறது. அரசியல் சட்டத்தை உயர்ந்ததாக கருதும் மக்கள் - இதுபோன்ற வார்த்தைகளை ஏற்றுக் கொள்ளலாமா? நீங்கள் அவர்களுக்காக பேசுங்கள். நீங்கள் அவர்களுக்கு ஆதரவளியுங்கள். அதேபோல திரு உமர் அப்துல்லா கூறியுள்ளார். 370-வது பிரிவு திரும்பப் பெறப்பட்டு விட்டால், ஒரு நிலநடுக்கம் ஏற்படும் என்றும் அதனால் காஷ்மீர் இந்தியாவிலிருந்து துண்டாகி விடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, 370-வது பிரிவை திரும்பப் பெறுவது என்பது காஷ்மீர் மக்களின் சுதந்திரத்துக்கு வழிவகுக்கும் என்று ஃபரூக் அப்துல்லா கூறியுள்ளார். 370-வது பிரிவு அகற்றப்பட்டால் இந்தியக் கொடியை ஏற்ற காஷ்மீரில் ஒருவர்கூட இருக்க மாட்டார்கள். அரசியல் சட்டத்தை ஏற்றுக் கொள்வதாகக் கூறும் எவரேனும் இதுபோன்ற எண்ணமுள்ள ஒரு நபருக்கு ஆதரவு கொடுப்பார்களா? இதற்கு யாராவது ஒப்புக் கொள்வார்களா? ஆன்மா என்று ஒன்று இருக்கும் அனைவரைப் பற்றியும் நான் இங்கு பேசிக் கொண்டிருக்கிறேன்.

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே. இவர்கள் காஷ்மீர் மக்கள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள். அதனால்தான் இவர்கள் இப்படிப் பேசுகிறார்கள். நாங்கள் நம்பிக்கை வைத்தோம் - . நாங்கள் காஷ்மீர் மக்கள் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம் - அந்த நம்பிக்கை இருந்ததால்தான் நாங்கள் 370-வது பிரிவை நீக்கினோம். இப்போது நாம் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறோம். இந்த நிலைமைகளை நாட்டின் எந்தப் பகுதியிலும் - அது காஷ்மீராக இருந்தாலும், வடகிழக்குப் பகுதிகளாக இருந்தாலும், கேரளாவாக இருந்தாலும் - வளர்ச்சி குறைவதற்கு - ஒருவரையும் அனுமதிக்க இயலாது. கடந்த சில தினங்களாக எங்களது அமைச்சர்கள் ஜம்மு-காஷ்மீருக்கு தொடர்ந்து பயணம் செய்து வருகிறார்கள். அந்த மக்களுடன் உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். மக்களுடன் உரையாடுவதன் மூலம் அங்குள்ள பிரச்சினைகளைத் தீர்க்க நாங்கள் முயன்று வருகிறோம்.

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே, ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சிக்காக, ஜம்மு-காஷ்மீரின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக, ஜம்மு-காஷ்மீர் மக்களின் நம்பிக்கைகளையும், எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வதற்கு நான் கடமைப்பட்டுள்ளேன் என்பதை இந்த அவையிலிருந்து நான் தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் அரசியல் சட்டத்திற்கு கடமைப்பட்டுள்ளோம். அர்ப்பணிப்புடன் உள்ளோம். ஆனால் அதே சமயம், லடாக் பற்றியும் சில அம்சங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

 

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே, நம் நாட்டில் தானாக இயற்கை முறையில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ள ஒரு மாநிலம் சிக்கிம். சிக்கிம் போன்ற சில சிறிய மாநிலங்கள், ஒரு வகையில், நம் நாட்டின் பல மாநிலங்களுக்கு உந்துசக்தியாக உள்ளன. இந்தப் பாராட்டுக்குத் தகுதியானவர்கள் சிக்கிமின் விவசாயிகளும், குடிமக்களும்தான். லடாக் -- என் மனதில் லடாக் பற்றிய காட்சி வெகு தெளிவாக உள்ளது என்று நான் நம்புகிறேன். நம் அண்டை நாடான பூடான் சுற்றுச்சூழலுக்காகப் பாராட்டப்படுவது போல லடாக் இருக்கவேண்டும். கரியமில வாயு வெளியேற்றம் குறைவான நாடாக பூட்டான் உலகில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளது. நம் நாட்டின் அனைத்து மக்களும், நாம் அனைவரும், சிக்கிமையும் கரியமில வாயு வெளியேற்றம் குறைவான  இடமாக மாற்ற வேண்டும் என்று உறுதியேற்க வேண்டும். நாட்டின் குறிப்பிடத்தக்க ஒரு அம்சமாக அதை உருவாக்குவோம். வருங்கால சந்ததியினருக்கு ஒரு முன்மாதிரியாக அது பலனளிக்கும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். லடாக்கிற்குச் செல்லும் போது, அவர்களுடன் இருக்கும் போது, ந்த முன்மாதிரியை உருவாக்குவதை நோக்கியே நான் சென்று கொண்டிருக்கிறேன்.

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே, இந்த அவையில் ஒரு சட்டம் இயற்றப்பட்டது. இரண்டு அவைகளிலும் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது. அவை நடைமுறைக்கும் வந்துவிட்டன. குடியுரிமை திருத்த சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான சில முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வருவதற்கு ஏன் இந்த அவசரம்? என்று சிலர் கேட்கிறார்கள். இந்த அரசு இந்து முஸ்லிம் என்று பாகுபாடு காட்டுவதாக மாண்புமிகு உறுப்பினர்கள் சிலர் கூறினார்கள்.

நாங்கள் இந்த நாட்டைப் பிரிப்பதாக சிலர் கூறினார்கள். இங்கு நிறைய பேசப்பட்டது. இங்கிருந்து நிறைய கூறப்பட்டு விட்டது. கற்பனையான ஒரு பயத்தை உருவாக்குவதற்காக முழு வீச்சில் முயற்சிக்கப்பட்டுவிட்டது. யாரெல்லாம் நாட்டைத் துண்டாட நினைக்கிறார்களோ, அவர்களுக்கருகே நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொள்பவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பாகிஸ்தானும் இதே வார்த்தைகளைத்தான் பல பத்தாண்டுகளாக பேசிக்கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் இதையே தான் பேசிக்கொண்டிருக்கிறது. இந்தியாவிலுள்ள முஸ்லிம்களைத் தூண்டி விடுவதற்கான எந்த ஒரு முயற்சியையும் பாகிஸ்தான் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் உள்ள முஸ்லிம்களைத் தவறாக வழி நடத்துவதற்கு பாகிஸ்தான் எல்லாவித விளையாட்டுகளையும் மேற்கொண்டு விட்டது அனைத்து உத்திகளையும் மேற்கொண்டு விட்டது. தனது பல்வேறு நிறங்களையும் காண்பித்து விட்டது.

இந்துஸ்தான் மக்களால், அதிகார அரியாசனத்திலிருந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டவர்கள், நாட்டு மக்களால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாத அளவிற்கான வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது எனக்கு ஆச்சரியமளிக்கிறது. இந்தியா மற்றும் ஜெய்ஹிந்த் என்ற கோஷங்கள் நம்முடைய முஸ்லிம் மக்களால் தான் நமக்கு அளிக்கப்பட்டது என்பது நமக்கு மீண்டும் மீண்டும் நினைவூட்டப்படுகிறது. பிரச்னை என்னவென்றால், காங்கிரஸ் மற்றும் அதன் கண்களுக்கு, இவர்கள் - இந்த மக்கள் எப்போதுமே முஸ்லிம்கள் – முஸ்லிம்கள் மட்டுமே. எங்களுக்கு எங்களின் பார்வையில் அ