பிரதமர் அலுவலகம்

டுவிட்டர் கணக்கு பராமரிப்பை பெண் சாதனையாளர்களிடம் ஒப்படைத்தார் பிரதமர்

Posted On: 08 MAR 2020 2:07PM by PIB Chennai

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, பெண் சாதனையாளர்கள் அவர்களது வாழ்க்கைப் பயணம் குறித்த அனுபவங்களை, தமது சமூக ஊடகக் கணக்குகள் வாயிலாக பகிர்ந்து கொள்வார்கள் என பிரதமர் திரு.நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

     இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் தங்களது வாழ்க்கைச் சரித்திரத்தை பிரதமரின் டுவிட்டர் மூலம் பகிர்ந்து கொள்கின்றனர்.  வாழ்க்கையின் அனைத்துத் தரப்பையும் சேர்ந்த இந்தப் பெண்கள் பகிர்ந்து கொள்ளும் அனுபவங்கள், மிகச்சிறந்தவை என்பதோடு, அனைவரையும் ஊக்குவிக்கும்.

 

போர் வீரராக இருங்கள், ஆனால் மாறுபட்டவராக இருங்கள்!

தண்ணீரைக் காக்கும் வீரராக இருங்கள்.

தண்ணீர் பற்றாக்குறையைப் பற்றி நீங்கள் எப்போதாவது சிந்தித்துப் பார்த்ததுண்டா? நாம் ஒவ்வொருவரும் கூட்டாக செயல்பட்டு, நமது வருங்கால குழந்தைகளுக்காக தண்ணீர் பாதுகாப்பை உருவாக்குவோம்.

நான் எத்தகைய முயற்சிகளை மேற்கொண்டேன் என்பதை இங்கு காணலாம். @kalpana_designs pic.twitter.com/wgQLqmdEEC @narendramodi  மார்ச் 8, 2020

 

ஏற்றுக்கொள்வதுதான் நமக்கு நாமே வழங்கும் மிகச்சிறந்த பரிசு. நமது வாழ்க்கையைக் கட்டுப்படுத்த நம்மால் முடியாது, ஆனால் வாழ்க்கைக்கான நமது பழக்கவழக்கங்களை கட்டுப்படுத்த நம்மால் முடியும். நமது சவால்களை நாம் எவ்வாறு எதிர்கொண்டோம் என்பதே, ஒவ்வொரு நாளின் முடிவிலும் நமக்கு முக்கியம். என்னைப் பற்றியும், எனது பணிகள் பற்றியும் முழுமையாக அறிந்துகொள்வீர். @MalvikaIyer #SheInspiresUs pic.twitter.com/T3RrBea7T9  @narendramodi  மார்ச் 8, 2020

 

சிந்திப்பதற்காக உணவு வேண்டும் என்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள்.  ஏழைகளின் சிறப்பான எதிர்காலத்திற்காக பணியாற்ற வேண்டிய தருணம் இது.

ஹலோ, நான் @சினேகாமோகன்தாஸ். வீடற்றவர்களுக்கு உணவு அளிக்கும் பழக்கத்தைக் கொண்ட எனது தாயால் ஈர்க்கப்பட்டு, இந்திய உணவு வங்கி என்ற இந்த முன்முயற்சியை நான் தொடங்கியிருக்கிறேன்.  #SheInspiresUs pic.twitter.com/yHBb3ZaI8n @narendramodi  மார்ச் 8, 2020

 

*****

 



(Release ID: 1605719) Visitor Counter : 156