மத்திய அமைச்சரவை

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மத்தியச் சட்டங்களைக் கடைப்பிடிப்பதற்கான உத்தரவு பிறப்பிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 26 FEB 2020 3:44PM by PIB Chennai

மத்திய அரசின் ஜம்மு-காஷ்மீர் மாற்றியமைத்தல் சட்டம் 2019-ன்     96-ஆவது பிரிவின்கீழ், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மத்தியச் சட்டங்களை கடைப்பிடிப்பதற்கான உத்தரவைப் பிறப்பிக்க, பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. 

ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைத்தல் சட்டம் 2019 நடைமுறைக்கு வந்தபின்னர், முன்பிருந்த ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஜம்மு-காஷ்மீர், லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களாக 2019 அக்டோபர் 31 முதல் மாற்றியமைக்கப்பட்டது.

31.10.2019-க்கு முன்னர், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தவிர, நாடு முழுவதும் அனைத்து மத்திய சட்டங்களும் பொருந்துபவையாக இருந்தன. தற்போது ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கும் இந்தச் சட்டங்கள் பொருந்தும். இந்திய அரசியல் சட்டத்துக்கு ஏற்ற வகையில், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகத்தை சுமூகமாக நடத்திச் செல்ல மத்திய சட்டங்களை அங்கு அமல்படுத்துவது அவசியமாகும்.

இந்தச் சட்டப்பிரிவின்படி, ஜம்மு-காஷ்மீரில் சட்டங்களை மாற்றியமைப்பதற்கும், திருத்துவதற்கும் மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, 37 மத்திய சட்டங்களை ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு பொருந்தும் வகையில் மாற்றியமைக்கவோ, பின்பற்றவோ மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்க இன்று ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.     

*****


(Release ID: 1604457) Visitor Counter : 245