மத்திய அமைச்சரவை
இந்தியா போர்ட்ஸ் க்ளோபல் லிமிடெட் நிறுவனத்துக்கு டிபிஈ விதிமுறைகளில் விலக்கு அளிக்கும் முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
26 FEB 2020 3:43PM by PIB Chennai
இந்தியா போர்ட்ஸ் க்ளோபல் நிறுவனத்துக்கு இடஒதுக்கீடு கண்காணிப்பு கொள்கைகள் தவிர்த்து, டிபிஈ விதிமுறைகளில் இருந்து விலக்கு அளிப்பதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
ஜவஹர்லால் நேரு துறைமுகப் பொறுப்புக்கழகம், தீன்தயாள் துறைமுகப் பொறுப்புக்கழகம் (முன்பு காண்ட்லா துறைமுகப் பொறுப்புக்கழகம்) ஆகியவை சேர்ந்து உருவாக்கிய சிறப்பு நோக்க நிறுவனமான ஐபிசிஎல், 2013 ஆம் ஆண்டின் நிறுவனங்கள் சட்டத்தின்கீழ், ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. ஈரானில் உள்ள ஷாகித் பெஹஸ்தி சாபஹர் துறைமுகத்தை உருவாக்கி பராமரிப்பதற்கான நிறுவனமாகிய இது, மத்திய கப்பல் துறை அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் இயங்கும்.
சாபஹர் துறைமுகம், நாட்டின் முக்கியமான முதல் அந்நியத் துறைமுகத் திட்டம் என்பதால், அதனை நிர்வகிக்கும் நிறுவனமாக ஐபிஜிஎல்-ஐ அனுமதிப்பது அவசியத் தேவையாகும். மத்திய கப்பல் துறை அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம் ஆகியவற்றின் அறிவுறுத்தலின்படி இந்த நிறுவனம் இயங்கும்.
*****
(Release ID: 1604456)
Visitor Counter : 161
Read this release in:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam