நிதி அமைச்சகம்

பொருளாதார ஆய்வறிக்கை 2019-20-ன் முக்கிய அம்சங்கள்

Posted On: 31 JAN 2020 1:27PM by PIB Chennai

நாடாளுமன்றத்தில் 2019-20-ம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி மற்றும் நிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பொருளாதார ஆய்வறிக்கை 2019-20-ல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களை கீழே காணலாம்:

வளத்தை உருவாக்குதல்: கணிக்க முடியாத சந்தை தன்மைக்கு உரிமை அளிப்பது

 • பொருளாதார வரலாறு அடிப்படையில் நான்கில் மூன்று பங்கு காலத்துக்கு சர்வதேச பொருளாதார சக்தியாக இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
 • பொருளாதாரத்தில் விலையின் பங்களிப்பை கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம் விளக்குகிறது (spengler, 1971)
 • வரலாற்றுப்பூர்வமாக, சந்தையின் கணிக்க முடியாத தன்மையை இந்திய பொருளாதாரம் நம்பியுள்ளது. இது, நம்பகத்தன்மையின் ஆதரவுடன் உள்ளது.
 • சந்தையில் கணிக்க முடியாத தன்மை என்பது, பொருளாதார பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மையை வெளிப்படுத்துகிறது.
 • நம்பகத்தன்மை என்பது நெறிமுறைகள் மற்றும் தத்துவரீதியான பரிமாணத்திலானது.
 • தாராளமயமாக்கலுக்குப் பிறகு, இந்தியப் பொருளாதாரத்துக்கு ஆதரவு அளிக்கும் பொருளாதார மாதிரியின் அனைத்து காரணிகளும் நமது பாரம்பரிய சிந்தனைகளை வலியுறுத்துகிறது.
 • சந்தையின் கணிக்க முடியாத அம்சங்கள் மூலம், அளவில்லா பலன்கள் கிடைத்துள்ளதை ஆய்வறிக்கை விளக்குகிறது.
 • தாராளமயமாக்கலுக்குப் பிறகு, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் தனிநபரின் பொருளாதாரம் ஆகியவற்றின் குறிப்பிடத்தகுந்த உயர்வு என்பது, சொத்துக்களை உருவாக்குதலுடன் இணைந்துள்ளது.
 • மற்ற துறைகளைவிட, தாராளமயமாக்கப்பட்ட துறைகளில் குறிப்பிடத்தகுந்த அளவு வேகமான வளர்ச்சி இருப்பதை ஆய்வறிக்கை வெளிப்படுத்துகிறது.
 • நம்பகத்தன்மைக்கு கணிக்க முடியாத அம்சங்கள் ஆதரவு அளிக்க வேண்டியது அவசியம். இதனை 2011-13 காலகட்டத்தில் இருந்த நிதித்துறை செயல்பாடுகள் வெளிப்படுத்துகிறது.
 • 5 லட்சம் கோடி அமெரிக்க டாலர் அளவுக்கான பொருளாதாரமாக மாற வேண்டும் என்ற இந்தியாவின் விருப்பத்தை நிறைவேற்றுவது என்பது கீழ்க்காணும் அம்சங்களை சார்ந்தது என்று ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது:
  • கணிக்க முடியாத சந்தை தன்மையை வலுப்படுத்துதல்
  • நம்பகத்தன்மையுடன் இதற்கு ஆதரவு அளித்தல்
 • தொழில் துறைக்கு ஆதரவான கொள்கைகளை ஊக்குவித்து, கணிக்க முடியாத சந்தையை வலுப்படுத்துதல். இதற்காக:
 • புதிதாக வருபவர்களுக்கு சமமான வாய்ப்புகளை அளித்தல்
 • நேர்மையான போட்டி மற்றும் தொழில் செய்வதை எளிதாக்குவதற்கு வழிவகை செய்தல்
 • சந்தையின் மதிப்பை குறைக்கும் தேவையில்லாத கொள்கைகளை அரசின் தலையீடு மூலமாக நீக்குதல்
 • வர்த்தகம் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்குதல்
 • வங்கித்துறையை சிறப்பான முறையில் மேம்படுத்துதல்
 • நம்பிக்கை என்பது பொது சொத்து என்ற யோசனையை அறிமுகப்படுத்துதல், இது சிறந்த பயன்பாட்டின் மூலம், வலுப்படும்.
 • தரவுகள் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, சிறப்பான செயலாக்கத்தையும், வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கும் வகையிலும் கொள்கைகள் இருக்க வேண்டும் என்று ஆய்வறிக்கை பரிந்துரை செய்கிறது.

அடிமட்ட அளவில் தொழில்முனைவோர் திறன் மற்றும் சொத்துக்கள் உருவாக்கம்

 

 • உற்பத்தி வளர்ச்சி மற்றும் சொத்துக்கள் உருவாக்கத்தை ஊக்குவிக்கும் உத்தியாக தொழில்முனைவோர் திறன் திகழ்கிறது.
 • உலக வங்கியின் மதிப்பீட்டின்படி, புதிதாக உருவாக்கப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
 • இந்தியாவில் புதிய நிறுவனங்கள் தொடக்கம் என்பது 2014-ம் ஆண்டு முதல் பெருமளவில் உயர்ந்துள்ளது:

O 2014-18 காலகட்டத்தில் அமைப்புசார்ந்த புதிய நிறுவனங்களின் ஆண்டு வளர்ச்சி விகிதம் என்பது 12.2%-ஆக உள்ளது. இது 2006-2014 காலகட்டத்தில் 3.8%-ஆக இருந்தது.

o 2018-ம் ஆண்டில் 1.24 லட்சம் புதிய நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. கடந்த 2014-ம் ஆண்டில் 70,000-மாக இருந்த நிலையில், 80% வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

 • தொழில்முனைவோர் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் அம்சங்கள் குறித்து நிர்வாக கட்டமைப்பின் அடிமட்ட அளவில் ஆய்வறிக்கை ஆய்வுசெய்துள்ளது. இந்தியாவில் உள்ள 500-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது
 • புதிய நிறுவனங்கள் உருவாக்கம் என்பது உற்பத்தி, கட்டமைப்பு அல்லது வேளாண் துறைகளைவிட, சேவைகள் துறையில் குறிப்பிடத்தகுந்த அளவு அதிகமாக உள்ளது.
 • அடிமட்ட அளவில் தொழில்முனைவோர் திறன் ஏற்பட்டிருப்பதற்கு அவசியத் தேவை மட்டும் காரணமில்லை என்று ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.
 • மாவட்ட அளவில் புதிய நிறுவனங்களின் பதிவு 10% அதிகரித்திருப்பதன் மூலம், மாவட்ட ஒட்டுமொத்த உற்பத்தியை 1.8% அளவுக்கு அதிகரித்துள்ளது.
 • மாவட்ட அளவில் தொழில்முனைவோர் திறன் அதிகரிப்பதன் மூலம், அடிமட்ட அளவில் சொத்துக்களை உருவாக்குவதில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
 • இந்தியாவில் புதிய நிறுவனங்கள் உருவாக்கம் என்பது பலதரப்பட்ட மற்றும் மாவட்டம் முழுவதிலும் இடம்பெற்றிருப்பதுடன், பல்வேறு துறைகளிலும் தொடங்கப்பட்டுள்ளன.
 • ஒரு மாவட்டத்தில் உள்ள கல்வியறிவு மற்றும் கல்வி ஆகியவை உள்ளூர் தொழில்முனைவோர் திறனை குறிப்பிடத்தகுந்த அளவுக்கு ஊக்குவிக்கிறது:

o 70%-க்கும் அதிகமான கல்வியறிவு இருக்கும்போது, அது சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

o குறைவான கல்வியறிவு கொண்ட இந்தியாவின் கிழக்குப் பகுதியில் (2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 59.6% கல்வியறிவு) புதிய நிறுவனங்கள் உருவாக்கம் என்பது குறைவாக உள்ளது.

 • மாவட்ட அளவில் உள்ள கட்டமைப்பின் தரம், புதிய நிறுவனங்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
 • தொழில் செய்வதை எளிதாக்குதல் மற்றும் எளிதான தொழிலாளர் விதிமுறைகள் ஆகியவை புதிய நிறுவனங்களை உருவாக்குவதற்கு வழிவகை செய்கிறது, குறிப்பாக உற்பத்தி துறையில் நிறுவனங்களை உருவாக்க வழிவகை செய்கிறது.
 • எளிதாக தொழில் செய்வதை ஊக்குவித்தல் மற்றும் ஏற்கத்தக்க வகையிலான தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்துவது ஆகியவற்றின் மூலம், மாவட்ட அளவில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றும், அதனைத் தொடர்ந்து, மாநிலங்களில் உருவாக்க முடியும் என்றும் பொருளாதார ஆய்வறிக்கை பரிந்துரைக்கிறது.

வர்த்தகத்துக்கு ஆதரவு அல்லது சந்தைக்கு ஆதரவு

 • 5 லட்சம் கோடி அமெரிக்க டாலர்களைக் கொண்ட பொருளாதாரமாக மாற வேண்டும் என்ற இந்தியாவின் விருப்பம் நிறைவேற கீழ்க்காணும் அம்சங்கள் முக்கியமானது என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது:

o வர்த்தகத்துக்கு ஆதரவான கொள்கைகளை ஊக்குவிப்பதன் மூலம், சொத்துக்களை உருவாக்குவதில் சந்தையில் போட்டித் தன்மை உருவாகும்.

o “குறிப்பிட்ட சிலருக்கு” ஆதரவு அளிக்கும் கொள்கையை நீக்குதல். இந்த கொள்கைகள், குறிப்பிடத்தகுந்த தனியாருக்கு, குறிப்பாக சக்திவாய்ந்த நபர்களுக்கு ஆதரவாக இருக்கும்.

 • பங்குச்சந்தையின் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, தாராளமயமாக்கலுக்குப் பிறகு, “பழைய நிறுவனங்கள் நீங்கி, புதிய நிறுவனங்கள் உருவாவது” என்பது குறிப்பிடத்தகுந்த அளவு அதிகரித்துள்ளது:

o தாராளமயமாக்கலுக்கு முன்பாக, பங்குச்சந்தையில் உள்ள நிறுவனம், 60 ஆண்டுகளுக்கு நீடித்து இருக்கும். இது தாராளமயமாக்கலுக்குப் பிறகு, 12 ஆண்டுகளாக குறைந்துள்ளது.

o ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும், பங்குச்சந்தையில் உள்ள மூன்றில் ஒரு பங்கு நிறுவனங்கள் வெளியேறுகின்றன. இதன்படி, பொருளாதாரத்துக்குள் புதிய நிறுவனங்கள், பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன.

 • போட்டி நிறைந்த சந்தையை உருவாக்குவதில் குறிப்பிடத்தகுந்தத முன்னேற்றம் ஏற்பட்டபோதிலும், குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு ஆதரவான கொள்கைகள், பொருளாதாரத்தின் மதிப்பை சீர்குலைத்துள்ளன:

o பங்குச்சந்தையில் இணைக்கப்பட்ட நிறுவனங்களின் செயல்படாத தன்மை, 2007 முதல் 2010 வரையான காலத்தில் ஆண்டுக்கு 7% அளவுக்கு உள்ளன. இதன்மூலம், சாதாரண மக்களுக்கு இழப்பு ஏற்படுவதுடன், நிறுவனங்கள் இயல்புக்கு மாறான வருவாயைப் பெற்றுள்ளன.

O செயல்படாத சந்தையின் அளவு 2011-ம் ஆண்டு முதல் 7.5%ஆக உள்ளது. இது நிறுவனங்களுக்கு செயலாற்றும் திறன் இல்லாதது மற்றும் மதிப்பு குறைவதை வெளிப்படுத்துகிறது.

 • 2011-ம் ஆண்டு வரை, இயற்கை வளங்களை அளவுக்கு அதிகமாக ஒதுக்கீடு செய்வது போன்ற, குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு ஆதரவான கொள்கைகளால், அந்த நிறுவனங்கள் எந்தவொரு முதலீடும் இன்றி அதிக அளவில் ஆதாயம் அடைந்தன. 2014-ம் ஆண்டுக்குப் பிறகு, அனைத்து தரப்பினருக்கும் ஒதுக்கீடு செய்ததன் மூலம், அந்த நிலை முடிவுக்கு வந்துள்ளது.
 • அதேபோல, குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு கடன் வழங்கியதால், வேண்டுமென்றே கடனை திரும்ப செலுத்தாமல் விட்டனர். வங்கியின் சொத்துக்களை நிறுவனங்கள் தங்கள் பக்கம் திருப்பிக் கொண்டனர். இதன் காரணமாக, வங்கிகள் இழப்பை சந்தித்து, ஊரக மேம்பாட்டுக்கான மானியங்கள் பாதிக்கப்பட்டன.

சந்தையின் தன்மை குறைதல்: அரசு தலையீட்டால், பாதிப்புகளே அதிகம்

 • சிறப்பான நோக்கத்திலேயே அரசு தலையிட்டாலும் கூட, வளத்தை உருவாக்குவதில் சந்தையின் திறன் அடிக்கடி குறைந்துவிடுகிறது. இதன் காரணமாக, நோக்கத்துக்கு மாறான நிலையே ஏற்படுகிறது.
 • அரசின் தலையீடு சூழ்நிலைக்கு ஏற்ப அமையாமல் போன நான்கு உதாரணங்கள் உள்ளன:
 1. அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் (ECA), 1955:

O அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின்கீழ், பொருட்களை இருப்பு வைப்பதற்கு அடிக்கடி மற்றும் கணிக்க முடியாத வகையில், கட்டுப்பாடுகள் விதிப்பதால், கீழ்க்காணும் சூழல் ஏற்படுகிறது:  

தனியார் துறையினர் சேமிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கு ஊக்கத் தொகை வழங்குதல்.

வேளாண் சங்கிலியில் மாற்றம் ஏற்படுதல்.

வேளாண் பொருட்களுக்கு தேசிய சந்தை உருவாக்குதல்.

o 2006-ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் பருப்புகளை இருப்பு வைப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. 2009-ம் ஆண்டின் முதல் காலாண்டில் சர்க்கரை இருப்பு வைப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதேபோல, 2019-ம் ஆண்டு செப்டம்பரில் வெங்காயத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதன் காரணமாக, வெங்காயத்தின் ஒட்டுமொத்த மற்றும் சில்லரை விலை அதிகரித்தது.

O இந்தியாவுக்கு இன்றைய காலகட்டத்துக்கு அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் பொருத்தமானதா என்பது குறித்து நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம் ஆய்வுசெய்ய வேண்டியது அவசியம்.

o சோதனை நடத்தியபோதும், தண்டனை விதிப்பது குறைவாக உள்ளது மற்றும் விலையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்த சூழலில், அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் என்பது குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு ஆதரவானதாகவும், துன்புறுத்தலுக்கு பயன்படுத்தப்படுவதுமாகவே தோன்றுகிறது.

o பழமையான இந்த சட்டத்தை நீக்குவதற்கு உரிய ஆதாரங்கள் இருப்பதாக ஆய்வறிக்கை பரிந்துரை செய்கிறது.

 1. அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின்கீழ் மருந்துப் பொருட்களின் விலை கட்டுப்பாடு:

o மருந்துப் பொருட்கள் விலை கட்டுப்பாட்டு உத்தரவு (DPCO) 2013 மூலம், மருந்துப் பொருட்களின் விலையை ஒழுங்குபடுத்தியதால், ஒழுங்குபடுத்தப்பட்ட மருந்துப் பொருட்களின் விலை, ஒழுங்குபடுத்தப்படாத மருந்துகளுக்கு இணையாக உயர்ந்தது.

O அதிக செலவுபிடித்த மருந்துப் பொருட்களைவிட, குறைவான செலவுபிடித்த மருந்துகளின் விலை அதிகரித்தது. மேலும், சில்லரை கடைகளில் விற்பனை செய்யப்பட்டதைவிட, மருத்துவமனைகளில் விற்கப்படும் மருந்துகளின் விலை அதிகரித்தது.

o மருந்துப் பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் என்ற நோக்கில் மருந்துப் பொருட்கள் விலை கட்டுப்பாடு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அதற்கு மாறாகவே இது செயல்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

o அதிக அளவில் மருந்துப் பொருட்களை வாங்கும் அரசு, இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும். அனைத்து கொள்முதலையும் ஒருங்கிணைந்து, குறைந்த விலையில் மருந்துகளை வழங்குவதற்கு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக தனது வாங்கும் சக்தியை அரசு பயன்படுத்த வேண்டும்.

o அரசின் வாங்கும் சக்தியை வெளிப்படையான முறையில் பயன்படுத்தும் வகையில், உரிய வழிமுறையை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகம் உருவாக்க வேண்டும்.

 1. தானிய சந்தையில் அரசின் தலையீடு:

o உணவு தானிய சந்தையில் அரசின் கொள்கைகள் காரணமாக:

அரிசி மற்றும் கோதுமையை அதிக அளவில் கொள்முதல் செய்யும் மற்றும் பதுக்கும் அமைப்பாக அரசு மாறியது.

தனியார் வர்த்தகம் இல்லாத நிலை ஏற்பட்டது.

அரசுக்கு உணவு மானிய சுமை அதிகரித்தது

சந்தையில் திறன் இல்லாததன் காரணமாக, வேளாண் துறையின் நீண்டகால வளர்ச்சி பாதிக்கப்பட்டது.

o உணவு தானிய கொள்கை, சக்திவாய்ந்ததாக இருக்க வேண்டும். உணவு தானியங்களை அரசே கையாண்டு விநியோகம் செய்வதற்குப் பதிலாக, பண பரிவர்த்தனை/ உணவு கூப்பன்கள்/ ஸ்மார்ட் கார்டுகளாக மாற்ற அனுமதிக்க வேண்டும்.

 1. கடன் தள்ளுபடி:

o மாநிலங்கள்/ மத்திய அரசு வழங்கும் கடன் தள்ளுபடி குறித்த ஆய்வு:

கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யும்போது, பகுதியளவு கடன் தள்ளுபடி செய்வோரைவிட, குறைந்த அளவே பயன்படுத்துகின்றனர். சேமிப்பு, முதலீடு, உற்பத்தி ஆகியவை குறைவாகவே உள்ளது.

கடன் தள்ளுபடி செய்வது, கடன் கலாச்சாரத்தை பாதிக்கச் செய்கிறது.

கடன் தள்ளுபடி செய்வதால், அதே விவசாயிகளுக்கு கடன் வழங்குவதை குறைக்கிறது. இதன் காரணமாக, நோக்கம் நிறைவேறவில்லை.

 • கீழ்க்கண்ட பரிந்துரைகளை ஆய்வறிக்கை வழங்குகிறது:

o தலையீடு தேவையில்லாத பகுதிகள் மற்றும் சந்தையின் மதிப்பை குறைக்கும் பகுதிகளை அரசு முறையாக ஆய்வுசெய்ய வேண்டியது அவசியம்; ஆனால், அரசின் தலையீடு தேவையில்லை என்ற வாதத்தை முன்வைக்கக் கூடாது.

o மாறியுள்ள பொருளாதாரத்தில், வேறுபட்ட பொருளாதார அமைப்புகளில் மேற்கொள்ளப்படும் தலையீடுகள், அதன் முக்கியத்துவத்தை இழக்க வாய்ப்பு உள்ளது.

O இதுபோன்ற சூழலை நீக்கும்போது, போட்டி நிறைந்த சந்தையில் முதலீடுகள் மற்றும் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்.

இணைய மென்பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்குதல் மற்றும் வளர்ச்சி அடைதல்

 • சீனாவைப் போன்ற, தொழிலாளர் அடிப்படையிலான, ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான திட்டங்களை வகுப்பதற்கு ஏராளமான வாய்ப்புகளை இந்தியா பெற்றுள்ளதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
 • இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தில், “உலகுக்காக இந்தியாவில் தொகுத்து வழங்குவோம்” என்ற திட்டத்தை இணைப்பதன் மூலம், இந்தியாவால்:

o ஏற்றுமதி சந்தை மதிப்பை 2025-ம் ஆண்டில் 3.5%-ஆகவும், 2030-ம் ஆண்டில் 6%-ஆகவும் அதிகரிக்க முடியும்.

o நல்ல ஊதியத்துடன் கூடிய 4 கோடி வேலைவாய்ப்புகளை 2025-ம் ஆண்டிலும், 8 கோடி வேலைவாய்ப்புகளை 2030-ம் ஆண்டிலும் ஏற்படுத்த முடியும்.

 • 2025-ம் ஆண்டில் இந்தியாவை 5 லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றும் இந்தியாவின் முயற்சியில், இணைய மென்பொருட்களின் ஏற்றுமதியானது நான்கில் ஒரு பங்கு மதிப்பை அளிக்கும்.
 • இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள சீனா பயன்படுத்துவதைப் போன்ற உத்தியை ஆய்வறிக்கை பரிந்துரை செய்கிறது:

o தொழிலாளர்களை அடிப்படையாகக் கொண்ட துறைகளில், குறிப்பாக இணைய மென்பொருட்கள் துறைகளில் சிறப்பிடம் பெறுவது.

o இணைய மென்பொருட்களை தொகுக்கும் செயல்பாடுகளை தீவிரப்படுத்துவதற்காக லேசரைப் போன்று கவனம் செலுத்த வேண்டும்.

 o செல்வவளம் மிகுந்த நாடுகளின் சந்தைகளுக்கு ஏற்றுமதியை பிரதானமாக்க வேண்டும்.

O வர்த்தக கொள்கை என்பது வாய்ப்பை ஏற்படுத்துவதாக அமைவது கட்டாயமாக இருக்க வேண்டும்.

 • ஒட்டுமொத்த வர்த்தக சமநிலைத்தன்மையில் இந்தியாவின் வர்த்தக ஒப்பந்தங்களின் தாக்கம் குறித்து ஆய்வறிக்கை ஆய்வுசெய்தது:

o உற்பத்தி துறை பொருட்களுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 13.4% அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த வர்த்தகம் 10.9% அதிகரித்துள்ளது.

o இறக்குமதியைப் பொருத்தவரை, உற்பத்தி துறை பொருட்கள் அளவு 12.7% அதிகரித்துள்ளது மற்றும் ஒட்டுமொத்த வர்த்தகம் 8.6% அதிகரித்துள்ளது.

O ஒவ்வொரு ஆண்டும் உற்பத்தி துறை பொருட்களின் வர்த்தகம், இந்தியாவுக்கு 0.7% கூடுதலாக உள்ளது. ஒட்டுமொத்த வர்த்தகத்தில் இறக்குமதியைவிட ஏற்றுமதி அளவு 2.3% கூடுதலாக உள்ளது.

 

இந்தியாவில் தொழில் செய்வதை எளிதாக்கும் இலக்கு

 • எளிதாக தொழில் செய்வதற்கான வாய்ப்புகள் குறித்த உலக வங்கியின் தரவரிசையில், 2014-ம் ஆண்டில் 142—வது இடத்தில் இருந்த இந்தியா, 2019-ம் ஆண்டில் 63-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதன்மூலம், 79 இடங்கள் முன்னேற்றம் பெற்றுள்ளது.
 • தொழில் தொடங்குவதை எளிதாக்குதல், சொத்துக்களை பதிவுசெய்தல், வரி செலுத்துதல் மற்றும் ஒப்பந்தங்களை அமல்படுத்துதல் போன்ற குறியீடுகளில் இந்தியா இன்னும் பின்தங்கி உள்ளது.
 • இதுதொடர்பாக பல்வேறு ஆய்வுகளை ஆய்வறிக்கை மேற்கொண்டுள்ளது.

o ஏற்றுமதி வர்த்தகத்தைப் பொருத்தவரை, ஏற்றுமதியைவிட இறக்குமதிக்கான வசதி வாய்ப்புகள் சிறப்பாக உள்ளன.

o பெங்களூரு விமான நிலையம் மூலம் மின்னணு பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் முறைகள், இந்தியாவின் வர்த்தக வழிமுறைகள் எவ்வாறு உலகத்தரம் வாய்ந்ததாக இருக்க முடியும் என்பதை வெளிப்படுத்துகிறது.

 • இந்தியாவில் கப்பல்கள் பயணம் மேற்கொள்ளும் கால அளவு, கடந்த 2010-11-ம் ஆண்டில் 4.67 நாட்களாக இருந்தது. இது 2018-19ம் ஆண்டில் பாதியாக குறைந்து 2.48 நாட்களாக மாறியது.
 • தொழில் செய்வதை மேலும் எளிதாக்குவதற்கான பரிந்துரைகள்:

 

o மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகத்தில் உள்ள வர்த்தகத்துக்கான வசதிகளை ஏற்படுத்தும் பிரிவுக்கும், மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கத் துறை வாரியம், கப்பல் போக்குவரத்து அமைச்சகம், பல்வேறுபட்ட துறைமுக நிர்வாகங்கள் ஆகியவற்றுக்கு இடையே நெருங்கிய இணைப்பை ஏற்படுத்த வேண்டும்.

o சுற்றுலா அல்லது உற்பத்தி துறை போன்ற தனிப்பட்ட துறைகளில் ஒவ்வொரு பிரிவிலும் ஒழுங்குமுறை மற்றும் செயல்பாடுகளில் உள்ள தடைகளை அகற்றுவதற்கு அதிக அளவில் இலக்கு நோக்கிய செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதன் பொன் விழா: நிலைமையை ஆராய்தல்

 • வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதன் 50-ம் ஆண்டு 2019-ல் அனுசரிக்கப்பட்டதை ஆய்வறிக்கை புரிந்துகொண்டுள்ளது.
 • பொதுத்துறை வங்கிகளின் லட்சக்கணக்கான ஊழியர்களின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன. பொதுத்துறை வங்கிகளின் நோக்கம் நிறைவேறியுள்ளதா என்பதை ஆய்வுசெய்ய ஆய்வறிக்கை பரிந்துரைக்கிறது.
 • 1969-ம் ஆண்டுமுதல், நாட்டின் பொருளாதார வளர்ச்சி அளவுக்கு ஏற்ப, வங்கித் துறை வளர்ச்சி பெறவில்லை.
 • சர்வதேச அளவில் முன்னணி 100 வங்கிகளின் பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த ஒரு வங்கி மட்டுமே இடம்பிடித்துள்ளது. ஆனால், மற்ற நாடுகளைப் பொருத்தவரை பின்லாந்து வங்கிகள் 11-ல் ஒரு பங்கையும், டென்மார்க்கைச் சேர்ந்த வங்கிகள் 8-ல் ஒரு பாகத்தையும் பெற்றுள்ளன.
 • மிகப்பெரும் பொருளாதாரத்துக்கு, அதன் வளர்ச்சியை ஊக்குவிக்க சிறப்பான வங்கித் துறை அவசியமாகிறது.
 • இந்திய வங்கித் துறையில் 70% அளவுக்கு பொதுத்துறை வங்கிகளே உள்ளன. எனவே, பொருளாதாரத்துக்கு ஆதரவு அளிக்கும் பொறுப்பு பொதுத்துறை வங்கிகளிடம் உள்ளது:

o தனியார் துறையைவிட, பொதுத்துறை வங்கிகள் ஒவ்வொரு அளவீடுகளிலும் திறனற்றதாகவே உள்ளன.

o 2019-ம் ஆண்டில், பொதுத்துறை வங்கிகள் மேற்கொள்ளும் ஒவ்வொரு ரூபாய் முதலீட்டுக்கும் 23 காசுகள் இழப்பு ஏற்பட்டது. அதுவே, தனியார் வங்கிகளைப் பொருத்தவரை, 9.6 காசுகள் லாபம் பெற்றன.

o பொதுத்துறை வங்கிகளின் கடன் வளர்ச்சி என்பது, கடந்த பல ஆண்டுகளில் தனியார் வங்கிகளைவிட மிகவும் குறைவாகவே இருந்து வருகிறது.

·  பொதுத்துறை வங்கிகளை அதிக திறன்வாய்ந்ததாக மாற்றுவதற்கான வழிகள்:

o பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்களுக்கு தொழிலாளர் பங்கு உரிமை திட்டம் (ESOP)

o வங்கிகளின் அனைத்து பங்குதாரர்களுக்கும் இருப்பதைப் போன்ற ஆர்வத்தை தொழிலாளர்கள் மத்தியில் ஊக்குவித்தல். வங்கி வாரியங்களில் தொழிலாளர்களுக்கு பிரதிநிதித்துவம் அளித்தல்.

o சரக்கு மற்றும் சேவை வரிகள் இணையத்தைப் (GSTN) போன்ற அமைப்பை ஏற்படுத்துதல். இதில் அனைத்து பொதுத்துறை வங்கிகளின் தகவல்களும் தொகுக்கப்படும். கடன் பெறுவோரை, குறிப்பாக அதிக அளவில் கடன் பெறுவோரை கண்காணித்து, சிறப்பாக மதிப்பிடுவதை உறுதிப்படுத்தி கடன் வழங்கும் முடிவை மேற்கொள்வதில் பெருந்தகவல் மையம், செயற்கை நுண்ணறிவு, இயந்திர மதிப்பீடுகள் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல்.

வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் துறையில் நிலையற்ற நிதித்தன்மை

 • வங்கித் துறையில் தற்போது நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழலில், இந்தியாவில் வங்கி அமைப்பில் மறுமுதலீட்டில் உள்ள பாதிப்புகளுக்கான முக்கிய காரணிகள் குறித்து ஆய்வறிக்கை ஆய்வுசெய்தது.
 • மறுமுதலீட்டில் இடர்பாடுகளுக்கான முக்கிய காரணிகள்

o சொத்து கடன் மேலாண்மை இடர்பாடுகள்

o இணைந்திருக்கும் இடர்பாடுகள்.

o வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் நிதி மற்றும் இடர்பாடுகளை எதிர்கொள்ளும் திறன்

o மற்ற நிதி நிறுவனங்களில் குறுகிய காலத்துக்கு முதலீடு செய்வதை அதிக அளவில் சார்ந்திருத்தல்.

 • வீட்டுவசதி நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிஅல்லாத நிதி நிறுவனங்களின் (தங்களது துறைகளில் பிரதிநிதிகளாக இருப்பவை) மறுமுதலீட்டு அபாயங்கள் குறித்து மதிப்பிட்டு, அதன் திறனை ஆய்வறிக்கை கணித்துள்ளது.
 • இந்த ஆய்வில் கீழ்க்காணும் முடிவுகள் கிடைத்துள்ளன:

O வீட்டுவசதி நிதி நிறுவனங்கள், 2014-ம் ஆண்டுக்குப் பிறகு வீழ்ச்சியை சந்தித்து வந்துள்ளது. இந்தத் துறையின் ஒட்டுமொத்த நிலை, 2019-ம் நிதியாண்டு இறுதியில் மிகவும் மோசமாக இருந்தது.

o வங்கி அல்லாத சில்லரை நிதி நிறுவனங்கள் துறையின் மதிப்பீட்டைப் பொருத்தவரை, 2014-19 காலகட்டத்தில் சராசரியைவிட குறைவாகவே இருந்தது.

o வங்கி அல்லாத பெரிய அளவிலான சில்லரை நிதி நிறுவனங்கள் சிறப்பாக செயல்படுகின்றன. எனினும்,  நடுத்தர மற்றும் வங்கி அல்லாத சில்லரை நிதி நிறுவனங்களைப் பொருத்தவரை, ஒட்டுமொத்த காலத்தில் நடுத்தர நிறுவனங்கள் குறைவான மதிப்பீட்டையே பெற்றுள்ளன.

 • இந்த மதிப்பீடுகள், நிதி பிரச்சினைகள் ஏற்படுவதற்கான தொடக்ககால எச்சரிக்கையாகவே இருப்பதாக ஆய்வறிக்கை கருதுகிறது.
 • ஒவ்வொரு வீட்டுவசதி நிதி நிறுவனங்கள் மற்றும்  வங்கிஅல்லாத சில்லரை நிதி நிறுவனங்களின் செயல்பாடுகளை பங்குச்சந்தைகள் மேம்படுத்துகின்றன.
 • இந்த ஆய்வுகளின் அடிப்படையில், வங்கிஅல்லாத நிதி நிறுவனங்கள் துறைக்கு பல்வேறு பிரிவுகளிலும் கடன் தொகையை சிறப்பான முறையில் அதிகரிக்க வேண்டும் என்று ஆய்வறிக்கை பரிந்துரைக்கிறது. இதன்மூலம், நிதி செயலற்ற தன்மையை சிறப்பான முறையில் சரிசெய்ய முடியும்.

தனியார்மயமாக்கல் மற்றும் சொத்து உருவாக்கம்

 • மத்திய பொதுத்துறை நிறுவனங்களை தீவிர பங்குகள் விற்பனை மூலம், தனியார்மயமாக்குவதால் கிடைக்கும் பலன்கள் குறித்து ஆய்வறிக்கை ஆய்வுசெய்தது.
 • பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் நிறுவனத்தில் அரசின் 53.29 சதவீத பங்குகளை விற்பனை செய்வதன் மூலம், அரசுக்கு ரூ.33,000 கோடி கிடைக்கும்.
 • 1999-2000 முதல் 2003-04 வரையான காலத்தில் 11 பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கியதற்கு முன்னதாகவும், தனியார்மயமாக்கத்துக்குப் பின்னரும் ஏற்பட்ட சூழல் குறித்து ஆய்வுசெய்து அதன் முடிவுகளை ஆய்வறிக்கை வெளியிடுகிறது.

O தனியார்மயமாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களின் நிதி காரணிகளான நிகர வருவாய், சொத்துக்கள் மதிப்பு உயர்வு, பங்குகளின் பலன் ஆகியவை சராசரி அடிப்படையில், குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் பெற்றுள்ளன.

O தனியார்மயமாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களால், அதே வளங்களைப் பயன்படுத்தி அதிக அளவில் சொத்துக்களை உருவாக்க முடிந்தது.

 • பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய கீழ்க்காணும் காரணங்களுக்காக ஆய்வறிக்கை பரிந்துரை செய்கிறது:

O அதிக அளவில் லாபம் ஈட்டுதல்

o திறனை மேம்படுத்துதல்

o போட்டித்தன்மையை அதிகரித்தல்

o தொழில் நிபுணத்துவத்தை ஊக்குவித்தல்

இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கூடுதலாக குறிப்பிடப்பட்டுள்ளதா? இல்லை!

 • முதலீட்டாளர்கள் மற்றும் கொள்கைகளை வகுப்போருக்கு முடிவுகளை எடுப்பதற்கு முக்கிய காரணியாக ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி உள்ளது. எனவே, ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை மதிப்பிடுவதற்காக 2011-ம் ஆண்டில் திருத்தியமைக்கப்பட்ட வழிமுறை கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீட்டின் துல்லியத்தன்மை குறித்து அண்மையில் மேற்கொள்ளப்படும் விவாதங்கள் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
 • ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை மதிப்பீடு செய்வதில், நாடுகளுக்கு இடையே பல்வேறு கண்காணிப்பு மற்றும் கண்காணிப்பு அல்லாத வழிமுறைகள், நாடுகளைத் தாண்டிய மதிப்பீடு ஆகியவற்றில் மாறுபாடுகள் உள்ளன. இதேபோல, மற்ற காரணிகளை பிரிவுபடுத்துவது, மறுஆய்வுக்கான வழிமுறைகளை மட்டும் தனிமைப்படுத்துவது ஆகியவையும் உள்ளன.
 • 2011-ம் ஆண்டுக்குப் பிறகு, இந்தியாவில் பின்பற்றப்பட்ட வழிமுறைகள், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை 2.7% அளவுக்கு கூடுதலாக மதிப்பிட்டுள்ளன. 95—ல் 51 நாடுகளில் இதே காலகட்டத்தில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி தவறாக மதிப்பிடப்பட்டுள்ளன.
 • பிரிட்டன், ஜெர்மனி, சிங்கப்பூர் போன்ற பல்வேறு முன்னேறிய நாடுகள், முழுமையடையாத பொருளாதார கணக்கீட்டு மாதிரிகளை பின்பற்றி, தங்களது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை தவறாக மதிப்பிட்டுள்ளன.
 • மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில், அனைத்து கண்காணிக்கப்படாத வேறுபாடுகள் மற்றும் மாறுபட்ட அளவீடுகள் சரியாக பின்பற்றப்பட்ட இந்தியா அல்லது மற்ற நாடுகளில் வளர்ச்சி தவறாக மதிப்பிடப்பட்டுள்ளதாக எந்த நாடுகளாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
 • இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி தவறாக மதிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படும் கருத்துகளில் தரவுகள் அடிப்படையில் உண்மையில்லை.

உணவுப் பொருளாதாரம் – இந்தியாவில் ஒரு தட்டு உணவுக்கான பொருளாதாரம்

 • இந்தியா முழுவதும் ஒரு தட்டு உணவுக்காக சாதாரண மனிதன் செலுத்தும் தொகையை மதிப்பீடு செய்வதற்கான முயற்சி.
 • 2015-16 முதல் உணவுப் பொருட்களின் விலையில் ஏற்பட்ட மாற்றம்.
 • இந்தியா முழுமைக்கும் 2015-16 முதல் சைவ உணவுப் பொருட்களின் விலை குறிப்பிடத்தகுந்த அளவு குறைந்துள்ளது; ஆனால், 2019-20 காலகட்டத்தில் விலை உயர்ந்துள்ளது.
 • 2015-16-க்குப் பிறகு:
 • விலை குறைந்ததால், சைவ உணவு சாப்பிடும் ஒவ்வொரு குடும்பத்தினரும், சராசரியாக ஆண்டுதோறும் சுமார் ரூ.11,000ஐ சேமித்துள்ளனர்.
 • அதே காலகட்டத்தில், அசைவ உணவு சாப்பிடுவோர் சராசரியாக ஆண்டுக்கு சுமார் ரூ.12,000-ஐ சேமித்துள்ளனர்.
 • 2006-07 முதல் 2019-20 வரை:
 • சைவ உணவுப் பொருட்கள் கிடைக்கும் திறன் 29% அதிகரித்துள்ளது.
 • அசைவ உணவுப் பொருட்கள் கிடைக்கும் திறன் 18% அதிகரித்துள்ளது.

 

2019-20-ல் இந்தியப் பொருளாதாரத்தின் செயல்பாடு

 • 2019-20-ம் நிதியாண்டின் முதலாவது பாதியில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 4.8%-ஆக இருந்தது. சர்வதேச அளவிலான உற்பத்தி, வர்த்தகம், தேவை ஆகியவை குறைந்தபோதும் இந்தியா வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
 • உண்மையான நுகர்வு வளர்ச்சி, 2019-20-ன் இரண்டாவது காலாண்டில் மீட்டெடுக்கப்பட்டது. அரசின் முயற்சியால் இது ஊக்குவிக்கப்பட்டது.
 • 20180-19ம் நிதியாண்டின் இரண்டாவது பாதி காலத்தைவிட, 2019-20ம் நிதியாண்டின் முதல் பாதியில் வேளாண்மை மற்றும் அதுதொடர்பான நடவடிக்கைகள், பொது நிர்வாகம், பாதுகாப்பு மற்றும் பிற சேவைகளின் வளர்ச்சி அதிகமாக இருந்தது.
 • இந்தியாவின் மற்ற நாடுகளுடனான பொருளாதாரம் 2019-20-ம் நிதியாண்டின் முதல் பாதியில் மேலும் நிலைத்தன்மையைப் பெற்றது.
 • 2018-19-ம் நிதியாண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.1%-ஆக இருந்த நடப்பு கணக்கு பற்றாக்குறை, 2019-20-ம் நிதியாண்டின் முதல் பாதியில் 1.5%-ஆக குறைந்தது.
 • அந்நிய நேரடி முதலீடு சிறப்பாக இருந்தது.
 • துறைவாரியான முதலீட்டு வருகை மீண்டது.
 • அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரித்தது.
 • கச்சா எண்ணெய் விலை குறைந்ததன் மூலம், 2019-20-ம் நிதியாண்டின் முதல் பாதியில் ஏற்றுமதியைவிட இறக்குமதி அளவு குறிப்பிடத்தகுந்த அளவு குறைந்தது.
 • பணவீக்க அளவு ஆண்டு இறுதியில் குறையும் என எதிர்பார்ப்பு:
 • தற்காலிக உயர்வு காரணமாக, உணவுப் பணவீக்கம், 2019-20-ம் நிதியாண்டின் முதல் பாதியில் 3.3%-லிருந்து டிசம்பர் மாதத்தில் 7.35%-ஆக உயர்ந்தது.
 • நுகர்வோர் விலை குறியீட்டெண் மற்றும் ஒட்டுமொத்த விலை குறையீட்டெண் ஆகியவை டிசம்பர் 2019-20-ல் உயர்ந்தன. தேவை அதிகரித்ததன் காரணமாக, இவை உயர்ந்துள்ளன.
 • வளர்ச்சி சுழற்சி குறைந்துள்ள நிலையில், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறைந்துள்ளதை புரிந்துகொள்ள முடியும்.
 • நிதித்துறை உண்மையான துறையாக செயல்பட்டு வருகிறது (முதலீடு- வளர்ச்சி – நுகர்வு)
 • முதலீடு, நுகர்வு, ஏற்றுமதி ஆகியவற்றை அதிகரிக்கச் செய்ய 2019-20-ம் நிதியாண்டில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன:
 • கடன்மீட்பு மற்றும் திவாலாதல் (IBC) விதிகளின் கீழ், கடனை மீட்பதற்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டன.
 • கடன் கிடைப்பது எளிதானது. குறிப்பாக, நெருக்கடிக்கு உள்ளான ரியல் எஸ்டேட் மற்றும் வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் துறைக்கு எளிதில் கடன் கிடைத்தது.
 • தேசிய கட்டமைப்புக்கான நிதிஒதுக்கீடு 2019-2025 அறிவிக்கப்பட்டது.
 • 2019-20-ம் நிதியாண்டின் இரண்டாவது பாதியில் ஒட்டுமொத்த உற்பத்தி வளர்ச்சி அதிகரிக்கும் என ஆய்வறிக்கை மதிப்பிடுகிறது:
 • சிஎஸ்ஏ-வின் முதலாவது முன்கூட்டிய மதிப்பீட்டின்படி, 2019-20-ல் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 5%-ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
 • 2020-21-ல் பொருளாதாரம் வலுவான நிலையில் மீண்டெழுவதற்காக சீர்திருத்த நடவடிக்கைகள் அதிவேகமாக செயல்படுத்தப்படும்.

 

நிதி முன்னேற்றங்கள்

 • 2019-20ம் நிதியாண்டின் முதல் 8 மாதங்களில் வருவாய் வரவு, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தைவிட அதிக வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இதற்கு வரி அல்லாத வருவாய் அதிகரிப்பு காரணம்.
 • ஜிஎஸ்டி மாதாந்திர வசூல் தொகை 2019-20-ம் நிதியாண்டின், 5 மாதங்களில் தலா ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலாக உள்ளது (டிசம்பர் 2019 வரை)
 • நடப்பு நிதியாண்டில் வரிவிதிப்பு முறையில் பல்வேறு கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன:
 • நிறுவன வரி விகிதங்களில் மாற்றம்.
 • ஜிஎஸ்டி-யை எளிதாக செயல்படுத்துவதற்கான வழிமுறைகள்.
 • நிதி பொறுப்பு மற்றும் நிதிநிலை நிர்வாக சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புக்குள் மாநிலங்களின் நிதிப் பற்றாக்குறை உள்ளது.
 • மத்திய, மாநில அரசுகள் இணைந்து நிதி ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதை பொருளாதார ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.

வெளிநாட்டுத் துறை

•           பட்டுவாடாக்கள் நிலுவை (BoP):

•           இந்தியாவின் BoP நிலைமை 2019 மார்ச் இறுதியில் அன்னியச் செலாவணி கையிருப்பு 412.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற நிலையில் இருந்து, 2019 செப்டம்பர் இறுதியில் 433.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது.

•           (CAD) ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 2018-19ல் 2.1 சதவீதத்தில் இருந்து, 2019-20 முதலாவது அரையாண்டில் 1.5 சதவீதமாகக் குறைந்துள்ளது.

•           2020 ஜனவரி 10 ஆம் தேதி நிலவரப்படி அன்னியச் செலாவணி கையிருப்பு 461.2 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.

•           உலக வர்த்தகம்:

•           2019ல் உலகளவில் 2.9 சதவீத வளர்ச்சி காண்பது என உத்தேசிக்கப்பட்ட நிலையில், 2017ல் அது உச்சபட்சமாக 5.7 சதவீதத்தை எட்டியதற்குப் பிறகு, உலக வர்த்தகம் 1.0 சதவீதம் வளர்ச்சி அடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

•           இருந்தபோதிலும் உலக பொருளாதார செயல்பாடுகள் மீட்சி பெறும் போது 2020ல் இது 2.9 சதவீதம் அளவுக்கு மீளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

•           இந்தியாவின் பொருள் வணிக வர்த்தகம் 2009-14 முதல் 2014-19 வரையில் மேம்பட்டிருக்கிறது. 2016-17ல் கச்சா எண்ணெய் விலை 50 சதவீதத்துக்கும் மேல் குறைந்த பின்னணியில், இதன் பிற்பாதி காலகட்டத்தில் வணிகம் உயர்ந்துள்ளது.

•           அமெரிக்கா, சீனா, ஐக்கிய அமீரகம், சவுதி அரேபியா, ஹாங்காங் ஆகிய நாடுகள் இந்தியாவின் முதல் ஐந்து வர்த்தக பங்காளர் நாடுகளாக தொடர்கின்றன.

ஏற்றுமதிகள்:

 Exports:

•           அதிகம் ஏற்றுமதியாகும் பொருள்கள்: பெட்ரோலியப் பொருட்கள், விலைமதிப்புமிக்க கற்கள், ரசாயன மருந்து கூட்டு பொருள்கள் & உயிரியல் சார்ந்த பொருள்கள், தங்கம் மற்றும் இதர விலைமதிப்புள்ள உலோகங்கள்.

•           2019-20 (ஏப்ரல் - நவம்பர்) -ல் பெருமளவு ஏற்றுமதி செய்யப்பட்ட நாடுகள்: அமெரிக்கா, அதைத் தொடர்ந்து ஐக்கிய அமீரகம், சீனா மற்றும் ஹாங்காங்.

•           பொருள் வணிக ஏற்றுமதி, ஜிடிபியுடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளது. இது BoP நிலையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

•           உலக அளவில் வர்த்தகம் குறைந்ததால், 2018-19 முதல் 2019-20ல் முதல் அரையாண்டு காலம் வரையில் ஏற்றுமதிக்கும் ஜிடிபிக்குமான விகிதாச்சாரம் குறையும் அளவுக்கு தாக்கம் ஏற்பட்டது.

•           பெட்ரோலியம் அல்லாத பொருள்களின் ஏற்றுமதி வளர்ச்சி 2009-14ல் இருந்து 2014-19 வரையில் குறிப்பிடத்தக்க அளவுக்குக் குறைந்துள்ளது.

•           அதிகம் இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள்: கச்சா எண்ணெய், தங்கம், பெட்ரோலியப் பொருள்கள், நிலக்கரி, கற்கரி & எரிபொருள் கட்டிகள்.

•           சீனாவில் இருந்து அதிகபட்ச அளவுக்கு பொருள்களை இந்தியா இறக்குமதி செய்கிறது. அதற்கடுத்தபடியாக அமெரிக்கா, ஐக்கிய அமீரகம் மற்றும் சவூதி அரேபியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

•           ஜிடிபியுடன் ஒப்பிடும் போது வணிகப் பொருள் இறக்குமதி குறைந்துள்ளது. BoP-ல் நேர்மறை தாக்கத்தை இது ஏற்படுத்தியுள்ளது.

•           இறக்குமதி தொகுப்பில் கச்சா எண்ணெய் அளவு அதிகமாக இருப்பது, கச்சா எண்ணெயின் விலைகளுடன் சேர்ந்து இந்தியாவின் மொத்த இறக்குமதியுடன் தொடர்பை ஏற்படுத்துவதாக உள்ளது. கச்சா எண்ணெய் விலை உயரும்போது, மொத்த இறக்குமதியில் கச்சா எண்ணெயின் மதிப்பும் உயர்கிறது. அதன் மூலம் ஜிடிபி ஒப்பீட்டில் இறக்குமதி அளவு உயர்கிறது.

•           கணிசமான அளவு தங்கம் இறக்குமதி செய்யப்படுவதாலும், தங்கத்தின் விலைகளுக்கு ஏற்ப இந்தியாவின் ஒட்டுமொத்த இறக்குமதி அளவு மாறுபடுகிறது. இருந்தபோதிலும், 2018-19 மற்றும் 2019-20ன் முதல் அரையாண்டு காலத்தில் ஒட்டுமொத்த இறக்குமதியில், தங்கத்தின் இறக்குமதி அளவு ஒரே மாதிரியாக நீடித்தது. இறக்குமதி வரி உயர்வு காரணமாக இறக்குமதி குறைந்து விலைகள் உயர்ந்த போதிலும் அந்த அளவு அதே நிலையில் நீடித்தது.

•           பெட்ரோலியம் அல்லாத, தங்கம் அல்லாத பொருட்களின் இறக்குமதிகள் ஜிடிபி வளர்ச்சியுடன் நேர்மறையாக தொடர்பு கொண்டுள்ளன.

•           பெட்ரோலியம் அல்லாத, கச்சா எண்ணெய் அல்லாத பொருள்களின் இறக்குமதி, ஜிடிபி வளர்ச்சி அதிகரித்த