மத்திய அமைச்சரவை

வடகிழக்கு சபையின் ஒதுக்கீடுகளில் 30 சதவீதத்தை வசதிகள் அற்ற பகுதிகள், உதாசீனப்படுத்தப்பட்ட சமுதாயப் பிரிவுகள், முன்னுரிமைத் துறைகளாக உருவெடுத்துள்ளவை ஆகியவற்றுக்கு முக்கிய கவனம் செலுத்தும் திட்டங்களுக்கு ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 29 JAN 2020 2:00PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கீழ்கண்டவற்றுக்கு ஒப்புதல் அளித்துள்ளது:-

  1. வடகிழக்கு மாநிலங்களில் வசதிகள் அற்ற பகுதிகள், உதாசீனப்படுத்தப்பட்ட சமுதாயப் பிரிவுகள், முன்னுரிமை துறைகளாக உருவெடுத்துள்ளவை ஆகியவற்றுக்கு முக்கிய கவனம் செலுத்தும் புதிய திட்டங்களுக்கு தற்போதுள்ள “வடகிழக்கு சபை திட்டங்களின்படி” வடகிழக்கு சபை (என்இசி)-யின் ஒதுக்கீடுகளில் 30 சதவீதத்தை ஒதுக்குதல். எஞ்சியுள்ள ஒதுக்கீடு தற்போதுள்ள மாநிலப் பகுதிக்கு 60 விழுக்காடு, மத்தியப் பகுதிக்கு 40 விழுக்காடு என்ற வகையில் பிரித்து அளிக்கப்படும்.
  2. மதிப்பீடுகளையும், அனுமதி அமைப்பு முறையையும் எளிமைப்படுத்துவதற்கென என்இசி நெறிமுறைகளை மாற்றியமைத்தல்.
  3. மாநிலப் பகுதியின் கீழ் வரும் திட்டங்களை 25 சதவீதம் வரையில் என்இசி-யில் சேர்க்கப்படாத அதே சமயம் உள்ளூர் தேவைகள் அடிப்படையில் முக்கியம் என்று கருதப்பட்ட திட்டங்களுக்கு மாநில அரசுகளின் பரிந்துரையின் கீழ் அனுமதித்தல்.

தற்போதுள்ள “என்இசி திட்டங்களின்” கீழ் வரும் திட்டங்கள் ஒடுக்கப்பட்ட, எளிதில் பாதிக்கப்படக் கூடிய வடகிழக்கு மாநிலங்களின் பின்தங்கிய பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு சமூகப் பொருளாதாரப் பயன்களை அளிக்கும். இதனால் விரைவாக முடிவு எடுத்தல், திட்டங்களை விரைவாக அமல்படுத்துதல் ஆகிய விளைவுகள் ஏற்படும்.

 

***



(Release ID: 1600941) Visitor Counter : 149