பிரதமர் அலுவலகம்

இந்தியாவுக்கு பிரேசில் அதிபர் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட போது பரிமாறிக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் / உடன்பாடுகளின் பட்டியல்

Posted On: 25 JAN 2020 2:18PM by PIB Chennai

வரிசை

எண்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்/

உடன்பாடு

இந்தியத் தரப்பிலிருந்து பரிமாற்றம்

பிரேசில் தரப்பிலிருந்து பரிமாற்றம்

பரிமாற்றம்/அறிவிப்பு

1

இந்தியக் குடியரசுக்கும், பிரேசில் கூட்டமைப்புக் குடியரசுக்கும் இடையே உயிரி எரிசக்தி ஒத்துழைப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான்

சுரங்கங்கள் மற்றும் எரிசக்தித் துறை அமைச்சர் திரு பென்டோ அல்புகுர்கே

பரிமாற்றம் செய்து அறிவிக்கப்பட்டது

2

இந்தியக் குடியரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்திற்கும், பிரேசில் கூட்டமைப்புக் குடியரசின் சுரங்கங்கள் மற்றும்  எரிசக்தித்துறைக்கும் இடையே எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுத் துறையில் ஒத்துழைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான்

சுரங்கங்கள் மற்றும் எரிசக்தித் துறை அமைச்சர் திரு பென்டோ அல்புகுர்கே

அறிவிப்பு மட்டும்

3

இந்தியக் குடியரசுக்கும், பிரேசில் கூட்டமைப்புக் குடியரசுக்கும் இடையே முதலீட்டு ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக விரிவாக்கத்திற்கான ஒப்பந்தம்

வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர்

வெளியுறவு அமைச்சர் திரு எர்னெஸ்டோ அரவ்ஜோ

பரிமாற்றம் செய்து அறிவிக்கப்பட்டது

4

இந்தியக் குடியரசுக்கும், பிரேசில் கூட்டமைப்புக் குடியரசுக்கும் இடையே கிரிமினல் விஷயங்களில் பரஸ்பர சட்ட உதவிக்கான உடன்பாடு

வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர்

வெளியுறவு அமைச்சர் திரு எர்னெஸ்டோ அரவ்ஜோ

அறிவிப்பு மட்டும்

5

இந்தியக் குடியரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்திற்கும் பிரேசில் கூட்டமைப்புக் குடியரசின் இளம் சிறார்கள் துறைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

வெளியுறவுத் துறை இணையமைச்சர் திரு வி முரளிதரன்

வெளியுறவு அமைச்சர் திரு எர்னெஸ்டோ அரவ்ஜோ

அறிவிப்பு மட்டும்

6

இந்தியக் குடியரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்திற்கும்  பிரேசில் கூட்டமைப்புக் குடியரசின் சுகாதார அமைச்சகத்திற்கும்  இடையே சுகாதாரம் மற்றும் மருந்துத் துறையில் ஒத்துழைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

வெளியுறவுத் துறை இணையமைச்சர் திரு வி முரளிதரன்

வெளியுறவு அமைச்சர் திரு எர்னெஸ்டோ அரவ்ஜோ

பரிமாற்றம் செய்து அறிவிக்கப்பட்டது

7

இந்தியக் குடியரசின் ஆயுஷ் அமைச்சகத்திற்கும், பிரேசில் கூட்டமைப்புக் குடியரசின் சுகாதார அமைச்சகத்திற்கும் இடையே பாரம்பரிய மருத்துவ முறை மற்றும் ஹோமியோபதி துறையில் ஒத்துழைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

வெளியுறவுத் துறை இணையமைச்சர் திரு வி முரளிதரன்

வெளியுறவு அமைச்சர் திரு எர்னெஸ்டோ அரவ்ஜோ

அறிவிப்பு மட்டும்

8

இந்தியக் குடியரசுக்கும், பிரேசில் கூட்டமைப்புக் குடியரசுக்கும் இடையே 2020-2024 காலத்திற்கு கலாச்சார பரிவர்த்தனைத் திட்டம்

வெளியுறவுத் துறை செயலாளர் திரு விஜய் கோகலே

வெளியுறவு அமைச்சர் திரு எர்னெஸ்டோ அரவ்ஜோ

பரிமாற்றம் செய்து அறிவிக்கப்பட்டது

9

இந்தியக் குடியரசுக்கும், பிரேசில் கூட்டமைப்புக் குடியரசுக்கும் இடையே சமூக பாதுகாப்புக்கான உடன்பாடு

வெளியுறவு அமைச்சக செயலாளர் (கிழக்கு) திருமதி விஜய தாகூர் சிங்

வெளியுறவு அமைச்சர் திரு எர்னெஸ்டோ அரவ்ஜோ

பரிமாற்றம் செய்து அறிவிக்கப்பட்டது

10

இந்தியக் குடியரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் இந்தியன் கம்பியூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (சிஇஆர்டி-இன்), பிரேசில் கூட்டமைப்புக் குடியரசின் அதிபர் அமைச்சரவை, தகவல் பாதுகாப்பு,  நிறுவன பாதுகாப்புத் துறை, வலைப்பின்னல் நிகழ்வு செயல்பாட்டு மையத்தின் பொது ஒத்துழைப்பு இடையே சைபர் பாதுகாப்புத் துறையில்  ஒத்துழைப்புக்கான  புரிந்துணர்வு ஒப்பந்தம்

வெளியுறவு அமைச்சக செயலாளர் (கிழக்கு) திருமதி விஜய தாகூர் சிங்

வெளியுறவு அமைச்சர் திரு எர்னெஸ்டோ அரவ்ஜோ

பரிமாற்றம் செய்து அறிவிக்கப்பட்டது

11

இந்தியக் குடியரசுக்கும், பிரேசில் கூட்டமைப்புக் குடியரசுக்கும் இடையே அறிவியல் மற்றும்  தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான உடன்பாட்டை அமல்படுத்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புத் திட்டம் (2020-2023)

வெளியுறவு அமைச்சக செயலாளர் (கிழக்கு) திருமதி விஜய தாகூர் சிங்

அறிவியல், தொழில்நுட்பம்,  புதிய கண்டுபிடிப்பு மற்றும் தொடர்புத் துறை அமைச்சர் திரு மார்கோஸ் பாண்டிஸ்

பரிமாற்றம் செய்து அறிவிக்கப்பட்டது

12

இந்தியக் குடியரசின் சுரங்கங்கள் அமைச்சகத்தின் இந்திய புவியியல் ஆய்வு அமைப்புக்கும் பிரேசில் கூட்டமைப்புக் குடியரசின் சுரங்கங்கள் மற்றும் எரிசக்தி அமைச்சகத்தின் பிரேசில் புவியியல் ஆய்வு அமைப்புக்கும் இடையே புவியியல் மற்றும் கனிம வளங்கள் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

வெளியுறவு அமைச்சக செயலாளர் (கிழக்கு) திருமதி விஜய தாகூர் சிங்

சுரங்கங்கள் மற்றும் எரிசக்தித் துறை அமைச்சர் திரு பென்டோ அல்புகுர்கே

பரிமாற்றம் செய்து அறிவிக்கப்பட்டது

13

இன்வெஸ்ட் இந்தியா மற்றும் பிரேசில் வர்த்தக, முதலீட்டு ஊக்குவிப்பு முகமை (அப்பெக்ஸ் பிரேசில்) இடையே  புரிந்துணர்வு ஒப்பந்தம்

வெளியுறவு அமைச்சக செயலாளர் (கிழக்கு) திருமதி விஜய தாகூர் சிங்

அப்பெக்ஸ் பிரேசிலின் தலைவர் திரு செர்ஜியோ செகோவியா

பரிமாற்றம் செய்து அறிவிக்கப்பட்டது

14

இந்தியக் குடியரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வள அமைச்சகத்தின் கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறைக்கும் பிரேசில் கூட்டமைப்புக் குடியரசின் வேளாண்மை, கால்நடை, உணவு விநியோக அமைச்சத்திற்கும் இடையே கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறைகளில் ஒத்துழைப்பதற்கான கூட்டு விருப்பப் பிரகடனம்

வெளியுறவு அமைச்சக செயலாளர் (கிழக்கு) திருமதி விஜய தாகூர் சிங்

வேளாண்மை, கால்நடை, உணவு விநியோக அமைச்சத்தின் வேளாண்மை மற்றும் மீன்வளத் துறை செயலாளர் திரு ஜோர்கே செய்ஃப் ஜூனியர்

பரிமாற்றம் செய்து அறிவிக்கப்பட்டது

15

இந்தியக் குடியரசின் இந்திய எண்ணெய்க் கழகம், பிரேசிலின் சிஎன்பிஇஎம் இடையே உயிரி எரிசக்தி குறித்து  ஆய்வு செய்ய இந்தியாவில் இணைப்பு நிறுவனம் அமைப்பதற்கான ஒத்துழைப்புக்குப்  புரிந்துணர்வு ஒப்பந்தம்

இந்திய எண்ணெய்க் கழகத் தலைவர் திரு சஞ்சீவ் சிங்

அறிவியல், தொழில்நுட்பம்,  புதிய கண்டுபிடிப்பு மற்றும் தொடர்புத் துறை அமைச்சர் திரு மார்கோஸ் பாண்டிஸ்

பரிமாற்றம் செய்து அறிவிக்கப்பட்டது

(Release ID: 1600546) Visitor Counter : 218