பிரதமர் அலுவலகம்

“தேர்வு குறித்த விவாதம் 2020”-ல் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் பிரதமர் கலந்துரையாட உள்ளார்

Posted On: 19 JAN 2020 11:06AM by PIB Chennai

தேர்வு குறித்த விவாதம் 2020”-ல் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் பிரதமர் திரு.நரேந்திர மோடி 2020 ஜனவரி 20 அன்று கலந்துரையாட உள்ளார். பள்ளி மாணவர்களுடன் பிரதமர் 3-வது ஆண்டாகக் கலந்துரையாடும் தேர்வு குறித்த விவாதம் 2020 ஜனவரி 20 அன்று காலை 11 மணிக்கு புதுதில்லியில் உள்ள தல்கோத்ரா மைதானத்தில் நடைபெற உள்ளது. தேர்வு குறித்த மனஅழுத்தத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி, தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் கேள்விகளுக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி பதிலளிப்பதோடு அவர்களுடன் கலந்துரையாடுவார்.

 

இந்த தனித்துவமான நிகழ்வில் பங்கேற்க வேண்டும் என்பது மட்டுமின்றி பிரதமரிடமிருந்து சிறந்த ஆலோசனைகளைப் பெற வேண்டுமென்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடையே மிகுந்த ஆர்வமும், உற்சாகமும் காணப்படுகிறது.  தொலை நோக்கில் சிறந்த பயன்களை உத்தரவாதப்படுத்த மாணவர்கள் மனஅழுத்தமின்றி தெளிவான சூழலில் மாணவர்கள் தேர்வு எழுதுவதை உறுதிப்படுத்த பிரதமர் ஆர்வம் காட்டுகிறார்.

 

பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடும் தேர்வு குறித்த விவாதத்தின் முதலாவது நிகழ்ச்சி 2018 பிப்ரவரி 16 அன்று புதுதில்லியில் உள்ள தல்கோத்ரா மைதானத்தில் நடைபெற்றது.

பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடும் தேர்வு குறித்த விவாதத்தின் இரண்டாவது நிகழ்ச்சி 2019 ஜனவரி 29 அன்று புதுதில்லியில் உள்ள தல்கோத்ரா மைதானத்தில் நடைபெற்றது.

***



(Release ID: 1599793) Visitor Counter : 127