பிரதமர் அலுவலகம்

ஐரோப்பிய உயர்நிலைப் பிரதிநிதியும், துணைத் தலைவருமான மேன்மைதங்கிய ஜோசப் போரெல் ஃபான்டெல்ஸ் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்

Posted On: 17 JAN 2020 10:20PM by PIB Chennai

ஐரோப்பிய உயர்நிலைப் பிரதிநிதியும், துணைத் தலைவருமான (ஹெச்ஆர்விபி) மேன்மை தங்கிய ஜோசப் போரெல் ஃபான்டெல்ஸ் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று (17.01.2020) சந்தித்தார்.  2020 ரெய்சினா பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக ஜனவரி 16-லிருந்து, 18 வரை திரு போரெல் இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ளார்.  இவர் நேற்று (16.01.2020) இந்தக் கூட்டத்தில் நிறைவுரையாற்றினார்.  2019 டிசம்பர் 1 அன்று  உயர்நிலைப் பிரதிநிதி / துணைத் தலைவராக பொறுப்பேற்ற பின் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே இவர் மேற்கொண்டுள்ள முதலாவது பயணமாகும் இது. 

 

ஹெச்ஆர்விபி போரெலுக்கு அன்பான  வரவேற்பு அளித்த பிரதமர், ஹெச்ஆர்விபி ஆக பொறுப்பேற்றிருப்பதற்கு பாராட்டு தெரிவித்தார். இதற்கான பதவிக்காலத்தை வெற்றிகரமாக தமது நல்வாழ்த்துக்களையும் அவர்  தெரிவித்துக் கொண்டார்.  ரெய்சினா பேச்சுவார்த்தையில் ஹெச்ஆர்விபி-யின் தொடர்ச்சியான பங்கேற்புக்கும் பிரதமர் பாராட்டு தெரிவித்தார். 

 

இந்தியாவும், ஐரோப்பிய ஒன்றியமும் இயற்கையான பங்குதாரர்கள்  என்று குறிப்பிட்ட பிரதமர், 2020 மார்ச் மாதத்தில் நடைபெறும் ஆக்கப்பூர்வமான இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகக் கூறினார்.  ஐரோப்பிய ஒன்றியத்துடனான பணிகளை குறிப்பாக பருவநிலை மாற்றம், வர்த்தகம், பொருளாதார உறவுகள்  ஆகிய துறைகளிலான பணிகளை ஆழப்படுத்தும் இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதமர் வலியுறுத்தினார்.  ஐரோப்பிய ஆணையம் மற்றும் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர்களுடன் முந்தைய தமது உரையாடல்களைப் பிரதமர் நினைவுகூர்ந்தார். 

 

வெகு விரைவில் இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டை பிரெஸ்ஸல்ஸில் நடத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாக ஹெச்ஆர்விபி போரெல் தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியமும், இந்தியாவும் ஜனநாயகம், பன்முகத்தன்மை, சட்டங்கள் அடிப்படையிலான சர்வதேச முறைமை உள்ளிட்டவற்றில் உறுதிபூண்டிருப்பதையும், முன்னுரிமைகளை பகிர்ந்து கொண்டிருப்பதையும் அவர் எடுத்துரைத்தார்.

*****************



(Release ID: 1599761) Visitor Counter : 137