மத்திய அமைச்சரவை

ஜாம்நகரில் உள்ள குஜராத் ஆயுர்வேத பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஆயுர்வேத கல்வி நிறுவனங்கள் தொகுப்புக்கு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவன அந்தஸ்து வழங்க அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 08 JAN 2020 3:11PM by PIB Chennai

ஜாம்நகரில் உள்ள குஜராத் ஆயுர்வேத பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கும் (1) முதுநிலை ஆயுர்வேத பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கான கல்விக்கழகம் (2) ஸ்ரீ குலாப்குன்வெர்பா ஆயுர்வேத மகாவித்யாலயா (3) மருந்துப் பிரிவு உள்ளிட்ட ஆயுர்வேத மருந்துகள் விஞ்ஞான கல்விக்கழகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்தும், யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான  மகரிஷி பதஞ்சலி கல்வி நிறுவனத்தை ஆயுர்வேதத் துறையில் உள்ள கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான ஸ்வத்விருத்தா கல்வி நிறுவனத்துக்கு உட்படுத்தியும், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவன அந்தஸ்து வழங்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

 

ஜாம்நகரில் உள்ள ஆயுர்வேத பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக் கல்விக் கழகத்தை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனமாக அறிவிப்பதற்கான மசோதா வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யப்படும்.

 

இந்தியாவில் பொது சுகாதார சவால்களை எதிர்கொள்ள ஆயுஷ் முறைகளின் பங்களிப்பு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அந்தஸ்து அளிப்பது பொது சுகாதாரத்தில் ஆயுர்வேதத்தின் பங்களிப்பை அதிகப்படுத்த உதவும். ஆயுர்வேத முறைகளின் தடுப்பு மற்றும் குணப்படுத்தும் அணுகுமுறைகளால் குறைந்த செலவில் ஆரோக்கியம் கிடைக்கும். இதனால் ஆயுர்வேதத்தை வலுப்படுத்துவது, அரசின் செலவினத்தையும் குறைக்கும்.

 

------



(Release ID: 1598791) Visitor Counter : 129