பிரதமர் அலுவலகம்
குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 குறித்து பிரதமரின் முக்கிய செய்தி
Posted On:
16 DEC 2019 2:28PM by PIB Chennai
குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியாவின் எந்த மதத்தையும், குடிமகனையும் பாதிக்காது என இந்திய மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். தொடர்ச்சியான டுவிட்டர்களில் அவர் கூறியிருப்பதாவது:
“குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான வன்முறைகள் துரதிருஷ்டமானவை, கவலை அளிக்கக்கூடியவை.
விவாதம், கலந்துரையாடல், எதிர்க்கருத்து ஆகியவை ஜனநாயகத்தின் முக்கியக்கூறுகள். ஆனால், பொதுச்சொத்தை சேதப்படுத்துவதற்கும், இயல்பான வாழ்விற்கு இடையூறு செய்வதற்கும் இடமில்லை என்பது நமது பண்பாட்டின் நெறியாகும்.
குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 நாடாளுமன்ற இருஅவைகளிலும் அமோக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இது நிறைவேற பல அரசியல் கட்சிகளும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர். இந்தச் சட்டம் இந்தியாவின் நூற்றாண்டு பழமையான ஏற்பு, இணக்கம், கருணை, சகோதரத்துவம் என்ற கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது.
குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியாவின் எந்த மதத்தினரையோ, குடிமகனையோ, பாதிக்காது என்று திட்டவட்டமாக நான் உறுதியளிக்கிறேன். இந்தச் சட்டம் தொடர்பாக இந்தியர் எவரும் கவலைப்பட எதுவுமில்லை. பல ஆண்டுகளாக இன்னல்களை சந்தித்து, புகலிடம் பெறுவதற்கு இந்தியாவைத் தவிர வழியில்லை என்ற நிலை ஏற்பட்டவர்களுக்கு மட்டுமே இந்தச் சட்டம்.
நம் அனைவருக்கும் இந்தத் தருணத்தின் தேவை இந்திய வளர்ச்சிக்கும், ஒவ்வொரு இந்தியருக்கும் குறிப்பாக ஏழைகள், நலிந்தோர், விளிம்பு நிலையினருக்கு அதிகாரமளிக்கவும் ஒன்றுசேர்ந்து உழைப்பதாகும்.
நம்மைப் பிளவுப்படுத்தும், இடையூறு செய்யும் சுயநலக் கும்பலை நாம் அனுமதிக்க முடியாது.
அமைதி, ஒற்றுமை, சகோதரத்துவத்தைப் பராமரிக்க வேண்டிய தருணம் இது. வதந்திகள் மற்றும் பொய்ப் பிரச்சாரத்தில் இருந்து அனைவரும் விலகியிருக்க வேண்டும் என்பது அனைவருக்குமான எனது வேண்டுகோள்”.
குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான வன்முறைகள் துரதிருஷ்டமானவை, கவலை அளிக்கக்கூடியவை. விவாதம், கலந்துரையாடல், எதிர்க்கருத்து ஆகியவை ஜனநாயகத்தின் முக்கியக்கூறுகள். ஆனால், பொதுச்சொத்தை சேதப்படுத்துவதற்கும், இயல்பான வாழ்விற்கு இடையூறு செய்வதற்கும் இடமில்லை என்பது நமது பண்பாட்டின் நெறியாகும். @narendramodi
|
குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 நாடாளுமன்ற இருஅவைகளிலும் அமோக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இது நிறைவேற பல அரசியல் கட்சிகளும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர். இந்த சட்டம் இந்தியாவின் நூற்றாண்டு பழமையான ஏற்பு, இணக்கம், கருணை, சகோதரத்துவம் என்ற கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது. @narendramodi
|
குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியாவின் எந்த மதத்தினரையோ, குடிமகனையோ, பாதிக்காது என்று திட்டவட்டமாக நான் உறுதியளிக்கிறேன். இந்தச் சட்டம் தொடர்பாக இந்தியர் எவரும் கவலைப்பட எதுவுமில்லை. பல ஆண்டுகளாக இன்னல்களை சந்தித்து, புகலிடம் பெறுவதற்கு இந்தியாவைத் தவிர வழியில்லை என்ற நிலை ஏற்பட்டவர்களுக்கு மட்டுமே இந்தச் சட்டம். @narendramodi
|
நம் அனைவருக்கும் இந்தத் தருணத்தின் தேவை இந்திய வளர்ச்சிக்கும், ஒவ்வொரு இந்தியருக்கும் குறிப்பாக ஏழைகள், நலிந்தோர், விளிம்பு நிலையினருக்கு அதிகாரமளிக்கவும் ஒன்றுசேர்ந்து உழைப்பதாகும்.
நம்மைப் பிளவுப்படுத்தும், இடையூறு செய்யும் சுயநலக் கும்பலை நாம் அனுமதிக்க முடியாது. @narendramodi
|
அமைதி, ஒற்றுமை, சகோதரத்துவத்தைப் பராமரிக்க வேண்டிய தருணம் இது. வதந்திகள் மற்றும் பொய்ப் பிரச்சாரத்தில் இருந்து அனைவரும் விலகியிருக்க வேண்டும் என்பது அனைவருக்குமான எனது வேண்டுகோள். @narendramodi
|
***************
(Release ID: 1596601)
|