பிரதமர் அலுவலகம்

500 பில்லியன் டாலர் என்ற பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையிலான வர்த்தக இலக்கை எட்ட பிரிக்ஸ் வர்த்தகக் குழு திட்டம்: பிரதமர்


பேரிடர் சமாளிப்பு உள்கட்டமைப்பு முன்முயற்சிகளுக்கான கூட்டணியில் பிரிக்ஸ் நாடுகளும் புதிய வளர்ச்சி வங்கியும் சேரவேண்டும் என பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்
பிரிக்ஸ் வர்த்தக கவுன்சில் மற்றும் புதிய வளர்ச்சி வங்கி குறித்த தலைவர்களின் பேச்சுவார்த்தையில் பிரதமர் கலந்து கொண்டார்

Posted On: 14 NOV 2019 10:23PM by PIB Chennai

பிரிக்ஸ் வர்த்தக கவுன்சில் மற்றும் புதிய வளர்ச்சி வங்கி  குறித்த பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற பேச்சுவார்த்தையில், பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், பிரிக்ஸ் வர்த்தக கவுன்சில், பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை அடுத்த உச்சிமாநாட்டுக்குள் 500 பில்லியன் டாலர் என்ற இலக்கை எட்டும்  வகையில், திட்டம் ஒன்றை வகுத்துள்ளதாகத் தெரிவித்தார். இந்த முயற்சியில், பிரிக்ஸ் நாடுகளிடையே பொருளாதார ஒத்துழைப்பில் அடையாளம் காணுதல் மிகவும் அவசியமாகும் என்று அவர் கூறினார். புதிய வளர்ச்சி வங்கி மற்றும் பிரிக்ஸ் வர்த்தக கவுன்சில் இடையிலான ஒத்துழைப்பு ஒப்பந்தம், இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் பயனுள்ளதாக அமையும் என்று அவர் தெரிவித்தார்.

பேரிடரைச் சமாளிப்பது குறித்த உள்கட்டமைப்பு முன்முயற்சிகளுக்கான கூட்டணியில் பிரிக்ஸ் நாடுகளும் புதிய வளர்ச்சி வங்கியும் சேரவேண்டும் என பிரதமர் கேட்டுக் கொண்டார்.  புதிய வளர்ச்சி வங்கியின் மண்டல அலுவலகத்தை இந்தியாவில் அமைப்பதற்கான பணியை விரைவில் முடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இது, முன்னுரிமை பிரிவில் திட்டங்களுக்கு ஊக்கமளிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

     வர்த்தக கவுன்சில் மற்றும் புதிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றின் முழுமையாக ஒத்துழைப்பு மூலமே, பிரிக்ஸ் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்ற கனவை நனவாக்க முடியும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

*******



(Release ID: 1591701) Visitor Counter : 165