பிரதமர் அலுவலகம்

ஐந்தாவது இந்திய சர்வதேச அறிவியல் விழாவைப் பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார்

Posted On: 05 NOV 2019 3:02PM by PIB Chennai

ஐந்தாவது இந்திய சர்வதேச அறிவியல் விழாவைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பிற்பகல் 4 மணிக்குத் தொடங்கி வைப்பார்.     கொல்கத்தாவில் நடைபெறும் இந்த விழாவில் கூடியிருப்போரிடையே காணொலி காட்சி மூலம் அவர் உரையாற்றவுள்ளார்.

     மக்களிடையே அறிவியல் உணர்வைத் தூண்டுவதும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின் பங்களிப்பை எடுத்துக்காட்டுவதும் இவற்றின் பயன்கள் மக்களுக்கு மாற்றப்படுவதை ஊக்குவிப்பதும் இந்த விழாவின் முதன்மை நோக்கமாகும். அனைத்தையும் உள்ளடக்கிய அறிவியல் தொழில்நுட்பத்தின் முன்னேற்ற உத்தியைக் கட்டமைப்பதும் இதன் நோக்கமாகும்.

     ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்பு, அறிவியல் ஆகியவை தேசத்தை வலுவாக்குகிறது என்பதைக் குறிக்கும் வகையில், ரைசென் இந்தியா என்பது இந்த ஆண்டு நடைபெறும் விழாவின் மையப் பொருளாக உள்ளது.

ஐந்தாவது இந்திய சர்வதேச அறிவியல் விழாவைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பிற்பகல் 4 மணிக்குத் தொடங்கி வைப்பார். கொல்கத்தாவில் நடைபெறும் இந்த விழாவில் கூடியிருப்போரிடையே காணொலி காட்சி மூலம் அவர் உரையாற்றவுள்ளார். @narendramodi

 

 

மக்களிடையே அறிவியல் உணர்வைத் தூண்டுவதும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின் பங்களிப்பை எடுத்துக்காட்டுவதும் இவற்றின் பயன்கள் மக்களுக்கு மாற்றப்படுவதை ஊக்குவிப்பதும் இந்த விழாவின் முதன்மை நோக்கமாகும்.

அனைத்தையும் உள்ளடக்கிய அறிவியல் தொழில்நுட்பத்தின் முன்னேற்ற உத்தியைக் கட்டமைப்பதும் இதன் நோக்கமாகும். (@PMOIndia)

 

 

 

ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்பு, அறிவியல் ஆகியவை தேசத்தை வலுவாக்குகிறது என்பதைக் குறிக்கும் வகையில், ரைசென் இந்தியா என்பது இந்த ஆண்டு நடைபெறும் விழாவின் மையப் பொருளாக உள்ளது. (@PMOIndia)

 

*******



(Release ID: 1590567) Visitor Counter : 138