பிரதமர் அலுவலகம்
சவுதி அரேபியாவின் சுற்றுச்சூழல், நீர்வளம் மற்றும் விவசாயத் துறை அமைச்சருடன் பிரதமர் சந்திப்பு
Posted On:
29 OCT 2019 10:19PM by PIB Chennai
பிரதமர் திரு.நரேந்திர மோடி சவுதி அரேபியாவின் சுற்றுச்சூழல், நீர்வளம் மற்றும் விவசாயத்துறை அமைச்சர் திரு.அப்துல்ரகுமான் அல்- ஃபத்லியை சந்தித்தார். சுற்றுச்சூழல், நீர்வளம், வேளாண்மை ஆகிய துறைகளில் ஒத்துழைப்புக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என்று பிரதமர் கூறினார். நமது சுற்றுச்சூழலை சிறப்பானதாகவும், நீராதாரங்களைத் திறம்படவும் பயன்படுத்துவது தொடர்பாக ஒருங்கிணைந்து பணியாற்ற தாங்கள் உறுதிபூண்டுள்ளதாக அவர் கூறினார்.
சுற்றுச்சூழல், நீர்வளம், விவசாயத்துறை அமைச்சர் மேன்மை தங்கிய அல்-ஃபத்லியுடனான சந்திப்பு அருமையாக இருந்தது. இந்தத் துறைகளில் ஒத்துழைப்புக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.
நமது சுற்றுச்சூழலை சிறப்பானதாகவும், நீராதாரங்களைத் திறம்படவும் பயன்படுத்துவது தொடர்பாக ஒருங்கிணைந்து பணியாற்ற நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
-நரேந்திர மோடி
*****
(Release ID: 1589581)
Visitor Counter : 131