மத்திய அமைச்சரவை

ஜம்மு கஷ்மீரில் இடம் பெயர்ந்த 5,300 குடும்பங்களை மறுவாழ்வு திட்டத்தில் இணைத்துக் கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 09 OCT 2019 2:39PM by PIB Chennai

ஜம்மு கஷ்மீருக்கு இடம் பெயர்ந்த 5,300 குடும்பங்களை மறுவாழ்வு திட்டத்தில் இணைத்துக் கொள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

1947-ஆம் ஆண்டு இந்தக் குடும்பங்கள் முதலில் ஜம்மு கஷ்மீரிலிருந்து வெளியே செல்ல விருப்பம் தெரிவித்தன. ஆனால், ஜம்மு கஷ்மீருக்கான 2015-ஆம் ஆண்டு பிரதமரின் வளர்ச்சித் திட்டத்தின்கீழ், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு கஷ்மீர் மற்றும் சாம்ப் பகுதிகளில் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு 30.11.2016 அன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்ட மறுவாழ்வு திட்டத்தின்படி, இவர்கள் ஜம்மு கஷ்மீர் மாநிலத்திற்குத் திரும்பி வந்து குடியமர்ந்தனர்.

பயன்கள்:

இந்த ஒப்புதல் மூலம் தற்போதுள்ள திட்டத்தின்கீழ், இந்தக் குடும்பங்கள் ரூ.5.5 லட்சம் ஒருமுறை நிதியுதவி பெறும் தகுதியை அடைகின்றன. மேலும், தற்போதுள்ள திட்டத்தின்மூலம் நீடித்த வருவாயையும் ஈட்ட முடியும்.

 

போர்களாலும், வன்முறைகளாலும் பாதிக்கப்பட்ட 5,300 இடம்பெயர்ந்த குடும்பங்கள் தற்போது இணைக்கப்பட்டு, முதன்மைப் பொருளாதார நடவடிக்கைக்குள் வருவதால் மாதந்தோறும் கணிசமான வருவாயை ஈட்ட முடியும். மேலும், இந்தக் குடும்பங்களின் நிதித்தேவைக்கு அரசின் உதவியையும் பெற முடியும். தற்போதுள்ள திட்டத்திற்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள நிதியும் இவர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும்.

                  •••••••••


(Release ID: 1587596) Visitor Counter : 203