பிரதமர் அலுவலகம்

விவசாயிகளின் வாழ்க்கையைப் பாதுகாப்போம் விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தைப் பிரதமர் செப்டம்பர் 12 அன்று தொடங்கிவைக்கிறார்


ஜார்க்கண்டில் 400 ஏகலைவா மாதிரி உறைவிடப்பள்ளிகள் தொடங்கப்பட உள்ளன
ராஞ்சியில் புதிய ஜார்க்கண்ட் சட்டமன்ற கட்டடத்தை நரேந்திர மோடி திறந்து வைப்பார்

Posted On: 09 SEP 2019 5:07PM by PIB Chennai

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் செப்டம்பர் 12-அன்று  விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

 

 60 வயதை எட்டிய ஐந்து கோடி சிறு, குறு விவசாயிகளுக்கு மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்குவதன் மூலம், அவர்களின் வாழ்க்கையை இந்தத் திட்டம் பாதுகாக்கும்.

 

அடுத்த 3 ஆண்டுகளுக்கு இந்தத் திட்டத்திற்கு ரூ.10,774 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 

 

தற்போது 18 வயதுக்கும், 40 வயதுக்கும் இடைப்பட்ட அனைத்து சிறு, குறு விவசாயிகளும் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.   

 

 

விவசாயிகளின் மாதாந்தர பங்களிப்பை பிஎம் – கிசான் தவணைத் தொகை அல்லது பொதுச் சேவை மையங்கள் மூலம் செலுத்தலாம்.

 

பழங்குடியினர் அதிகம் வாழும் பகுதிகளில், பழங்குடியின மாணவர்களுக்குத் தரமான, உயர்தொடக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலைக் கல்வி வழங்க 400 ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளையும், பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைப்பார். 

 

ராஞ்சியில், புதிய ஜார்க்கண்ட் சட்டமன்றக் கட்டடத்தைத் திறந்து வைக்கும் பிரதமர் நரேந்திர மோடி, புதிய தலைமைச் செயலக கட்டடத்திற்கும் அடிக்கல் நாட்டுவார்.

 

இந்தப் பயணத்தின்போது, சாஹேப்கஞ்ஜில் பலவகைப் போக்குவரத்து முனையத்தையும் அவர்  தொடங்கிவைப்பார்.        

-----


 


(Release ID: 1584573) Visitor Counter : 158