மத்திய அமைச்சரவை

பல்வேறு துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான கொள்கையை மறு ஆய்வு செய்யும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி

Posted On: 28 AUG 2019 7:35PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பல்வேறு துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான கொள்கையை மறு ஆய்வு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.

     

அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கை சீர்திருத்தத்தால் ஏற்படக்கூடிய முக்கிய விளைவுகள் மற்றும் பலன்கள்

  1. அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கைகளில் மேற்கொள்ளப்படும் மாற்றம், அந்நிய நேரடி முதலீடுகளை அதிகளவில் ஈர்க்கக் கூடிய நாடாக இந்தியாவை மாற்றுவதற்கும், முதலீடு, வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சியை அதிகரிக்கவும் வழிவகுக்கும்.

 

  1. நிலக்கரித் துறையில், நிலக்கரி விற்பனை, நிலக்கரி சுரங்கப் பணிகளில் தானியங்கி முறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டிற்கு வழிவகுப்பதோடு, நிலக்கரி சந்தையில் வலுவான போட்டியை ஏற்படுத்தி, சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்க்க உதவும்.

 

  1. மேலும், ஒப்பந்த அடிப்படையிலான உற்பத்தி, இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தின் நோக்கத்தை அடையவும் உதவும். ஒப்பந்த அடிப்படையிலான உற்பத்திக்கு தானியங்கி முறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது, இந்தியாவின் உற்பத்தித் துறைக்கு பெரும் வரப்பிரசாதமாக அமையும்.

 

  1. பட்ஜெட் உரையில் நிதியமைச்சரால் அறிவிக்கப்பட்ட ஒற்றை குறியீட்டில் சில்லரை வணிகத்திற்கான அந்நிய நேரடி முதலீட்டுக்குத் தேவையான நிதி ஆதாரத்தை உள்நாட்டிலேயே திரட்டிக் கொள்வதற்கான நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படும். போக்குவரத்து, டிஜிட்டல் பணப்பட்டுவாடா, நுகர்வோர் நலன், பயிற்சி மற்றும் உற்பத்தித் திறன் போன்ற துறைகளில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க ஆன்லைன் விற்பனை உதவிகரமாக இருக்கும்.

 

  1. அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில், மேற்குறிப்பிட்ட திருத்தங்களைக் கொண்டு வருவதன் மூலம், அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கை எளிமைப்படுத்தப்பட்டு, நாட்டில் வர்த்தகம் செய்வதை எளிதாக்குவதுடன், பெருமளவில் அந்நிய நேரடி முதலீடுகள் கிடைக்கவும், அதன் மூலம் முதலீடு வருவாய் மற்றும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கவும் வழிவகுக்கும். 

 

கூடுதல் விவரங்களுக்கு www.pib.nic.in. என்ற இணையதளத்தைக் காணவும்.          

*****

     

 


(Release ID: 1583387) Visitor Counter : 335