மத்திய அமைச்சரவை

விண்வெளியை அமைதி நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவது மற்றும் ஆய்வு செய்வதில் ஒத்துழைப்பதற்கு இந்தியா – பஹ்ரைன் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 31 JUL 2019 3:37PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், விண்வெளியை அமைதி நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவது மற்றும் ஆய்வு செய்வதில் ஒத்துழைப்பதற்கு இந்தியா – பஹ்ரைன் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

     பெங்களூருவில் 11.03.2019-அன்று இந்தியாவும், 28.03.2010 அன்று மனாமாவில் பஹ்ரைனும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

விவரங்கள்

     விண்வெளி அறிவியல், தொழில்நுட்பம், புவியின் தொலையுணர்வு உள்ளிட்ட பயன்பாடுகள்; செயற்கைக்கோள் அடிப்படையில் கடற்பாதையை அறிதல்; விண்வெளி அறிவியல் மற்றும் கோள்கள் கண்டறிதல்; விண்கலம், விண்வெளி மற்றும் நிலம் சார்ந்த செயல்பாடுகள்; விண்வெளி தொழில்நுட்பப் பயன்பாடு போன்ற  முக்கிய நலன் சார்ந்த துறைகளில் ஒத்துழைக்க  இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறது.

     இந்தியாவின் விண்வெளித்துறை / இஸ்ரோ, பஹ்ரைனின் தேசிய விண்வெளி அறிவியல் முகமை ஆகியவற்றின் உறுப்பினர்களைக் கொண்டு கூட்டுப் பணிக்குழு அமைக்க இது வகை செய்கிறது.  இந்தக் குழு குறிப்பிட்ட காலத்தில் ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கான செயல்திட்டத்தை வகுக்கும்.

 

*****


(Release ID: 1580893) Visitor Counter : 103