மத்திய அமைச்சரவை

சுரங்கப் பணியாளர்களின் தேசிய சுகாதார நிறுவனத்தை, ஐசிஎம்ஆர்-தொழில்சார்ந்த சுகாதாரத்திற்கான நிறுவனத்துடன் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 24 JUL 2019 4:19PM by PIB Chennai

மத்திய சுரங்கங்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான, சுரங்கப்பணியாளர்கள் ஆரோக்கியத்திற்கான  தேசிய நிறுவனத்தைக் கலைத்து, அதன் சொத்துக்கள் மற்றும் கடன் பொறுப்புகளுடன் அதனை சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ் அகமதாபாதில் உள்ள ஐசிஎம்ஆர் – தொழில்சார் சுகாதாரத்திற்கான தேசிய நிறுவனத்துடன் இணைக்க / ஒன்றுசேர்க்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  மேலும், அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவரும் அதே பதவியிலும் / அதே ஊதியத்திலும் இணைப்பு நிறுவனத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.  இந்த இணைப்புக்குத் தேவையான நடவடிக்கைகளை இரு நிறுவனங்களும், மேற்கொள்ளும்.

     இந்த இணைப்பின் மூலம் மக்களின்  பணம் திறமையாக நிர்வகிக்கப்படுவதோடு, தொழில்சார்ந்த சுகாதாரத்துறையின் நிபுணத்துவமும் விரிவுப்படுத்தப்படும்.

                                *****


(வெளியீட்டு அடையாள எண்: 1580103) வருகையாளர் எண்ணிக்கை : 169