மத்திய அமைச்சரவை

அடிமட்ட ஏய்ப்பு மற்றும் லாப மாற்றுதலை தடுத்தல் நடவடிக்கை தொடர்பான வரி ஒப்பந்த செயலாக்கத்திற்கான பல்வகைப்படுத்தப்பட்ட நடைமுறைக்கு ஏற்பளிப்பு

Posted On: 12 JUN 2019 8:04PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடிஅவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, அடிமட்ட ஏய்ப்பு மற்றும் லாப மாற்றுதலை தடுத்தல் (எம்.எல்.ஐ.) நடவடிக்கை தொடர்பான வரி ஒப்பந்த செயலாக்கத்திற்கான பல்வகைப்படுத்தப்பட்ட நடைமுறை ஏற்பளிப்புக்கு ஓப்புதல் வழங்கியது.

 

தாக்கம் :

உடன்படிக்கை மீறல் மற்றும் அடிமட்ட ஏய்ப்பு மற்றும் லாப பங்கீடு உத்திகள் மூலம் வருவாய் இழப்பை தடுத்திடும் வகையில் இந்தியாவின் உடன்படிக்கைகளில் இந்நடைமுறை மாற்றத்தை ஏற்படுத்துவதுடன், எங்கெல்லாம் நிலையான பொருளாதார நடவடிக்கைகள் மூலம் லாபங்கள் உருவாக்கப்படுகிறதோ மற்றும் மதிப்பு உருவாக்கப்படுகிறதோ, அங்கு லாபத்திற்கான வரி உறுதி செய்யப்படும்.

 

விபரங்கள் :

  1. இந்தியாவின் சார்பாக, 07.06.2017 அன்று பாரீஸில், நிதியமைச்சர் திரு.அருண்ஜெயிட்லி அவர்களால் கையெழுதிடப்பட்ட அடிமட்ட ஏய்ப்பு மற்றும் லாப மாற்றுதலை தடுத்தல் (நடவடிக்கை தொடர்பான வரி ஒப்பந்த செயலாக்கத்திற்கான பல்வகைப்படுத்தப்பட்ட நடைமுறைக்கு இந்தியா ஒப்புதல் வழங்கியுள்ளது.
  2. எந்த பொருளாதார நடவடிக்கையும் இல்லாத இடங்களை கொண்ட குறைந்த அல்லது  வரியில்லாத இடங்களுக்கு செயற்கையாக லாபத்தை மாற்றுதல் மூலமாக குறைந்த அல்லது வரி செலுத்தாமல் இருப்பதற்கு வழிசெய்யும் வரிச் சட்டங்களில் உள்ள ஓட்டைகள் மற்றும் ஏற்றத்தாழ்வுகளை கொண்டு வரி திட்ட உத்திகள் மூலம் வரி ஏய்ப்பு மற்றும் லாப மாற்றுதலை (தி பீ.இ.பி.எஸ். பிராஜக்ட்) எதிர்கொள்வதற்கான ஓ.இ.சி.டீ./ஜி.20 திட்டத்தின் வெளிப்பாடே பல்வகைப்படுத்தப்பட்ட நடைமுறையாகும். அடிமட்ட ஏய்ப்பு மற்றம் லாப மாற்றுதலுக்கு தீர்வு காண்பதற்காக விரிவான முறையில் 15 செயல்களை பீ.இ.பி.எஸ். திட்டம் கண்டறிந்துள்ளது.
  3. ஜி20, ஓ.இ.சி.டீ., பீ.இ.பி.எஸ். கூட்டமைப்புகள் மற்றும் இதர விருப்பமுள்ள நாடுகள் அடங்கிய 100 நாடுகள் கொண்ட தனிக் குழுவில் இந்தியா அங்கம் வகிக்கிறது. இக்குழு 2015 மே முதல் பல்வகைப்படுத்தப்பட்ட நடைமுறையை இறுதி செய்வதற்காக ஒருமுகத்துடன் பணியாற்றியது. இந்நடைமுறையின் உரை மற்றும் அதன் விளக்க அறிக்கையை 2016, நவம்பர் 24 அன்று தனிக் குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
  4. செயல் 6-ன் கீழ் வரி ஏய்ப்பு தடுத்தலுக்கான  குறைந்தபட்ச தரம் உள்ளிட்ட இறுதி பீ.இ.பி.எஸ். தொகுதியில் ஒரு பகுதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட உடன்படிக்கை தொடர்பான குறைந்தபட்ச தரங்களை இந்நடைமுறையில் கையெழுத்திட்டுள்ள அனைவரும், மற்றவற்றிற்கு இடையிலும், கடைபிடிக்க வேணடும்.
  5. இந்நடைமுறையில் உள்ள இரண்டு அல்லது அதிகமான நாடுகளுக்கு இடையேயான வரி உடன்படிக்கைகளில் மாற்றம் செய்திட இந்நடைமுறை செயல்படும். உள்ளடக்கிய வரி ஒப்பந்த உரையை நேரடியாக மாற்றம் செய்திட வழி செய்யும் தற்போதைய ஒற்றை  உடன்படிக்கைக்கான திருத்த நடைமுறையை போன்று இது செயல்படாது. மாறாக, பீ.இ.பி.எஸ் நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கான அதன் செயல்பாடுகளை திருத்தம் செய்யும் தற்போதுள்ள வரி உடன்படிக்கைகளுடன் இது செயல்படுத்தப்படும்.
  6. உடன்படிக்கை மீறல் மற்றும் அடிமட்ட ஏய்ப்பு மற்றும் லாப பங்கீடு உத்திகள் மூலம் வருவாய் இழப்பை தடுத்திடும் வகையில் இந்தியாவின் உடன்படிக்கைகளில் இந்நடைமுறை மாற்றத்தை ஏற்படுத்துவதுடன், எங்கெல்லாம் நிலையான பொருளாதார நடவடிக்கைகள் மூலம் லாபங்கள் உருவாக்கப்படுகிறதோ மற்றும் மதிப்பு உருவாக்கப்படுகிறதோ, லாபத்திற்கான வரி உறுதி செய்யப்படும்.

 

*****



(Release ID: 1574319) Visitor Counter : 164