மத்திய அமைச்சரவை
இந்தியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையில் ரயில்வே துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல்
प्रविष्टि तिथि:
12 JUN 2019 8:11PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் உள்ள ஆராய்ச்சி வடிவமைப்புகள் மற்றும் தரப்படுத்தல் அமைப்பு, ரஷிய ரயில்வே ஆராய்ச்சி நிலையம் மற்றும் தகவல் தொழில்நுட்பம், சிக்னல் வசதி ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு நிலையம் மற்றும் ரஷிய ரயில்வே போக்குவரத்து தொலைத் தொடர்புத் துறைகளுக்குள் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது.
கூட்டாக ஒப்புக்கொள்ளப்பட்ட ஒத்துழைப்புத் திட்டங்களில் தகவல் பரிமாற்றம், நிபுணர் கூட்டங்கள், கருத்தரங்குகள், தொழில்நுணுக்கப் பயணங்கள் நடப்பதற்கு இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகுக்கும்.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏப்ரல் 2019ல் கையெழுத்திடப்பட்டது.
****
(रिलीज़ आईडी: 1574226)
आगंतुक पटल : 150