மத்திய அமைச்சரவை

உயிரி தொழில்நுட்பத்துறையில் இந்தியா – பிரேசில் இடையேயான ஒப்பந்தம் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது

प्रविष्टि तिथि: 15 APR 2019 12:32PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியா – பிரேசில் இடையே மே 2018-ல் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்தியா – பிரேசில் இடையேயான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் கையெழுத்திடப்பட்டுள்ளது. உயிரி மருத்துவம் மற்றும் சுகாதாரம், குறிப்பாக, உயிரி தொழில்நுட்பம் சார்ந்த பொருட்கள் தயாரிப்பு, வேளாண்மை, உயிரி எரிபொருள் மற்றும் உயிரி எரிசக்தி, நானோ தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படவும் இந்த ஒப்பந்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

                             *******


(रिलीज़ आईडी: 1570651) आगंतुक पटल : 171
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Gujarati