தேர்தல் ஆணையம்

மக்களவை தேர்தல் 2019-ன் முதல் கட்ட வாக்குப்பதிவு, 11 ஏப்ரல் 2019 அன்று நடைபெறவுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 09 APR 2019 2:49PM by PIB Chennai

2019 பொதுத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு, 11 ஏப்ரல் 2019 அன்று நடைபெறவுள்ளது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில், 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அடங்கிய 91 மக்களவை தொகுதிகள் முதல் கட்ட வாக்குப்பதிவை சந்திக்கின்றன.

ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா, அருணாச்சலப்பிரதேசம், மேகாலயா, உத்தராகண்ட், மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், லட்சத்தீவு, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் 11ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

அசாம், பீகார், சத்தீஸ்கர், ஜம்மு-காஷ்மீர், மகாராஷ்டிரா, மணிப்பூர், ஒடிசா, திரிபுரா, உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் உள்ள சில தொகுதிகளிலும் கீழ்க்கண்ட விவரப்படி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள்

முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளின் எண்ணிக்கை

ஆந்திரப்பிரதேசம்

25

அருணாச்சல பிரதேசம்

2

அசாம்

5

பீகார்

4

சத்தீஸ்கர்

1

ஜம்மு மற்றும் காஷ்மீர்

2

மகாராஷ்டிரா

7

மணிப்பூர்

1

மேகாலயா

2

மிசோரம்

1

நாகாலாந்து

1

ஒடிசா

4

சிக்கிம்

1

தெலங்கானா

17

திரிபுரா

1

உத்தரப்பிரதேசம்

8

உத்தராகண்ட்

5

மேற்கு வங்கம்

2

லட்சத்தீவுகள்

1

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்

1

இரண்டாவது முதல் ஏழாவது கட்டம் வரையிலான வாக்குப்பதிவுகள் ஏப்ரல் 18, 23, 29, மே 6, 12 மற்றும் 19ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. 17ஆவது மக்களவைத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை மே 23 அன்று மேற்கொள்ளப்படும்.

                                    *******


(வெளியீட்டு அடையாள எண்: 1570276) வருகையாளர் எண்ணிக்கை : 238
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Kannada , Malayalam