மத்திய அமைச்சரவை

புனல் மின் துறையை முன்னெடுத்துச் செல்வதற்கான வழிமுறைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 07 MAR 2019 2:46PM by PIB Chennai

புனல் மின்துறையை முன்னெடுத்துச் செல்லும் வழிமுறைகளுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சூரிய சக்தி அல்லாத புதுப்பிக்கக்கூடிய வணிக ஒப்பந்தத்தின்  ஒரு பகுதியாக பெரிய புனல் மின் நிலையங்கள் அறிவிக்கப்படுவது இதில் அடங்கும்.

விவரங்கள்:

  1. பெரிய  அளவிலான புனல் மின் நிலையங்களை புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி ஆதாரமாக பிரகடனப்படுத்துவது. (தற்போதைய வழக்கத்தின்படி 25 மெகாவாட்டுக்கு குறைவான புனல் மின் நிலையங்கள் மட்டுமே புதுப்பிக்கப்படக்கூடிய எரிசக்தி பிரிவில் சேர்க்கப்படுகின்றன).
  2. புனல் மின் துறை தனித்தன்மையோடு கூடியதாக கருதப்பட்டு, பெரிய அளவிலான புனல் மின் நிலையங்கள் குறித்த வழிமுறைகளின் அறிவிக்கைக்குப் பிறகு  சூரிய சக்தி அல்லாத புதுப்பிக்கப்பட்ட வணிக ஒப்பந்தத்திற்குள் கொண்டுவரப்படுகின்றன. புனல் மின் துறையின் வருடாந்திர இலக்குகளின் பாதை புனல்மின் துறையில் முன்வைக்கப்பட்டுள்ள கூடுதலான திட்டங்களின் அடிப்படையில் மின்சக்தித் துறையால் அறிவிக்கப்படும். இதற்கு கட்டண கொள்கை மற்றும் புனல் மின் துறையில் செயல்படுத்தப்பட வேண்டிய கட்டண கட்டுப்பாடுகளிலும், தேவையான திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
  3. முதலீட்டாளர்கள் கட்டண நிர்ணயம் செய்வதற்கு உரிய எளிமையான சூழலை உருவாக்குவதற்கான கட்டணப் பட்டியலை உருவாக்குவதில் திட்டத்தின் காலத்தை 40 ஆண்டு காலத்திற்கு நீட்டித்து, கடன்களை செலுத்த வேண்டிய காலகட்டத்தை 18 ஆண்டுகளாக உயர்த்தி, 2 சதவீத விலை உயர்த்தலும் அறிமுகப்படுத்தப்படும்.
  4. புனல் மின் திட்டங்களின் வெள்ளப் பிரச்சினையை சமாளிப்பதற்கான நிதி ஆதாரத்திற்கு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்வது;
  5. உள்கட்டமைப்பு அதாவது சாலைகள் மற்றும் பாலங்களுக்கான நிதி ஆதாரத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு, 200 மெகாவாட் திட்டங்கள் வரை ஒரு மெகாவாட்டிற்கு 1.5 கோடி ஒதுக்கீடு மற்றும் 200 மெகாவாட்டுக்கு மேற்பட்ட திட்டங்களுக்கு 1 மெகாவாட்டிற்கு 1.0 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

******(Release ID: 1568124) Visitor Counter : 329