மத்திய அமைச்சரவை

2019-ஆம் ஆண்டு மென்பொருட்கள் தேசியக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

प्रविष्टि तिथि: 28 FEB 2019 10:36PM by PIB Chennai

இந்தியாவை மென்பொருட்கள் நாடாக வளர்ச்சியடையச் செய்வதற்கான 2019 மென்பொருள் தேசியக் கொள்கைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மென்பொருள்  சுற்றுச் சூழலானது, கண்டுபிடிப்புகள், அறிவு சார்ந்த சொத்து உருவாக்கம் மற்றும் உற்பத்தியில் பெரிய அளவில் மதிப்பீட்டை அதிகப்படுத்தும் கூறுகளைக் கொண்டுள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் இத்துறையில் குறிப்பிடத்தக்க வருவாய் மற்றும் ஏற்றுமதியை அதிகப்படுத்துவதற்கான வாய்ப்புக்களைக் கொண்டிருப்பதோடு, வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில் முனைவோருக்கான வாய்ப்புக்களைக் கொண்டு உள்ளடக்கிய நீடித்த வளர்ச்சிக்கு உத்வேகம் அளிப்பதற்கும் இது வழி வகுக்கும்.

அடுத்த 7 ஆண்டுகளில் இக் கொள்கையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு 1,500 கோடி ரூபாய் செலவிடப்படும். இந்த 1,500 கோடி ரூபாய், மென்பொருள் வளர்ச்சி நிதியம் மற்றும் ஆராய்ச்சி கண்டுப்பிடிப்பு நிதியத்திற்கு பகிர்ந்து அளிக்கப்படும்.


(रिलीज़ आईडी: 1566897) आगंतुक पटल : 169
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , English , Urdu , Marathi , Bengali , Gujarati