மத்திய அமைச்சரவை
2019 நிறுவனங்கள் (2-வது திருத்த) அவசரச் சட்டத்தை பிறப்பிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
19 FEB 2019 8:53PM by PIB Chennai
நிறுவனங்கள் (2-வது திருத்த) அவசரச் சட்டம் 2019-ஐ பிறப்பிக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. இந்த அவசரச் சட்டத்திற்கு பதிலாக நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவை தாக்கல் செய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் சட்டம் 2013-ன்கீழ், வரும் குற்றங்களை ஆய்வு செய்த குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் நிர்வாகத்தில் உள்ள சிக்கலான இடைவெளிகளை சரிசெய்யவும், நிறுவனங்கள் சட்டம் 2013-ல் குறிப்பிடப்பட்டுள்ள கட்டமைப்பை நடைமுறைப்படுத்தவும் இது உதவும்.
*****
(Release ID: 1565492)
Visitor Counter : 107