மத்திய அமைச்சரவை

சீர்மரபினர், நாடோடி இனத்தவர் நலன் மற்றும் வளர்ச்சி வாரியம் அமைப்பதற்கான திட்ட முன்வடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 19 FEB 2019 8:57PM by PIB Chennai

சீர்மரபினர் மற்றும் நாடோடி இனத்தவரின் நலனுக்கும், வளர்ச்சிக்குமான வாரியம் அமைப்பதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.

     இந்த நாட்டின் மிக ஒடுக்கப்பட்ட குடிமக்களை சென்றடைவதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு உறுதியுடன் இருக்கிறது.  சமுதாயத்தில், சீர்மரபினர் மற்றும் நாடோடி இன மக்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர்.  இவர்களை சென்றடைவது கடினமாக உள்ளதால், பெரும்பாலும் இவர்கள் விடுபட்டுவிடுகிறார்கள். சீர்மரபினரும்,  நாடோடியின மக்களும், பட்டியல் இனத்தவர், பழங்குடியின மக்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகிய பிரிவுகளில் பரந்துபட்டு இருக்கிறார்கள். சிலர் இந்த மூன்று பிரிவுகளிலும் வகைப்படுத்தப்படாமலும் உள்ளனர்.

     நித்தி ஆயோக்கின் துணைத் தலைவர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதால், இதுவரை வகைப்படுத்தப்படாமல் உள்ள சீர்மரபினர் மற்றும் நாடோடி இன மக்களை அடையாளம் காணும் பணியை செய்து முடிக்க முடியும்.

*****


(Release ID: 1565386) Visitor Counter : 214