மத்திய அமைச்சரவை

தில்லி அலிப்பூரில், சிறு விவசாயிகள் விவசாய, வர்த்தக கூட்டமைப்பு, விவசாய விற்பனை நிலையம் அமைப்பதற்கு தில்லி பால் திட்டத்திற்கு சொந்தமான 1.61 ஏக்கர் நிலத்தை குத்தகை விடுவதற்கான திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

Posted On: 13 FEB 2019 9:28PM by PIB Chennai

தில்லி அலிப்பூரில், சிறு விவசாயிகள் விவசாய, வர்த்தக கூட்டமைப்பு விவசாய விற்பனை நிலையம் அமைப்பதற்கு தில்லி பால் திட்டத்திற்கு சொந்தமான 91/15 எண் உள்ள 1.61 ஏக்கர் நிலத்தை குத்தகை விடுவதற்கான திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

10.9.2014 முதல்  9.9.2044 வரையிலான 30 ஆண்டு காலத்திற்கான இந்த குத்தகைக்கு மாதம் ஒன்றுக்கு 100 ரூபாய் குத்தகை வாடகையாகவும் 10.9.2014 முதல் இது வருடம் ஒன்றுக்கு 10 சதவீதமாக உயர்த்தப்படும்.  ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் 31ஆம் தேதிக்குள் வருடம் முழுவதுக்குமான குத்தகை வாடகையை முன்னதாகவே செலுத்த வேண்டியிருக்கும்.

தாக்கம்:

சிறு விவசாயிகள், விவசாய வர்த்தகக் கூட்டமைப்பால் அமைக்கப்படும் இந்த விவசாய விற்பனைக் கூடம் தில்லி மற்றும் தேசிய தலைநகர் மண்டலத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் நாடெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் கூடுதல் சந்தை வழித்தடங்கள் மற்றும் பழங்கள் மற்றும் காய்கறிகளை மொத்தமாகவும், சில்லறையாகவும் நேரடியாக உற்பத்தி செய்ய உற்பத்தியாளர் சங்கங்களுக்கும் ஒரு வாய்ப்பினை வழங்கும்.

விவசாய விற்பனைக் கூடத்தின் சிறப்பியல்புகள் :

  1. பதிவு செய்யப்பட்ட வேளாண் உற்பத்தியாளர்கள்/ விளைப்பொருட்கள் சங்கங்கள் ஆகியவை மட்டுமே இந்த தளத்தில் தங்களது உற்பத்திப் பொருட்களை வழங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
  2. முகவர்கள் மற்றும் இடைத்தரகர்கள் இல்லாமல் சில்லரை வியாபாரிகள், மொத்த வியாபாரிகள், தங்கும் விடுதிகள், உணவகங்கள், குடியிருப்போர் நலச் சங்கங்கள் மற்றும் சாதாரண வாடிக்கையாளர்கள் இந்த தளத்திலிருந்து பொருட்களை வாங்கலாம்.
  3. விவசாய விற்பனைக் கூடத்தில் செய்யப்படும் வரிவர்த்தனைகளுக்கு விற்பனையாளர்களிடமோ, வாங்குவோரிடமோ எந்தவிதக் கட்டணமும் வசூலிக்கப்படாது. எனினும், கிடங்குகள் மற்றும் குளிர்சாதன வசதியைப் பயன்படுத்துவதற்கு வேளாண் உற்பத்தியாளர்கள் சிறிய அளவிலான சேவைக் கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும்.
  4. தனி உரிமை கிளைகளை மாதிரியாகக் கொண்ட சில்லரை விற்பனையகங்களின் மூலமாக விவசாய விற்பனைக் கூடம் நேரடியாகவும் பொருட்களை விநியோகம் செய்யும். இதற்ககான ஆரம்பமாக, தில்லி பால் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட விற்பனையகங்களில் பிரதான விளைப்பொருட்களான உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் ஆகியவை விற்கப்படும். விவசாய விற்பனைக்கூடத்தின்  அழைப்பு மையங்களின் மூலமாக வலைதள விற்பனைக்கும்,  நேரடி சந்தைக்கும் வழி வகை செய்யப்பட்டுள்ளது.

-----



(Release ID: 1564423) Visitor Counter : 105