மத்திய அமைச்சரவை

உயிரி தொழில்நுட்பத் துறையில் இந்தியாவுக்கும் பின்லாந்துக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 06 FEB 2019 9:47PM by PIB Chennai

உயிரி தொழில்நுட்பத் துறையில்  இந்தியாவுக்கும் பின்லாந்துக்கும் இடையே பரஸ்பர ஆர்வத்தின் அடிப்படையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது, ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் புதுமைப் படைப்பு  என்ற  விரிவான தலைப்பின் கீழ் தொழில்கள் சார்ந்த புதுமைப் படைப்பு மற்றும் நாடுகளுக்கு இடையிலான பெரிய திட்டங்களை நிதி அளித்து அமல்படுத்துவதற்கானது.

பயன்கள்:

      இந்திய மற்றும் பின்லாந்து நிறுவனங்களுக்கு இடையே ஒத்துழைப்பு கட்டமைப்பை உருவாக்கி வலுப்படுத்தவும், நீண்ட கால ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புதுமைப் படைப்பு ஒத்துழைப்பு அமைப்புகளை ஏற்படுத்தவும் இந்த ஒப்பந்தம் ஆதரவளிக்கும்.  உயர் தரமுள்ள சர்வதேச கூட்டுத் திட்டங்களுக்கு தேவை அடிப்படையில் நிதி உதவி செய்வதன் மூலம் இரு நாடுகளும், பரஸ்பர நன்மை பயக்கும் உலகத்தர புதுமைப் படைப்புகளை அடைய இந்த ஒப்பந்தம் உதவும். இருநாடுகளின் விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்துறையினரிடையே அறிவுப் பெருக்கம், அறிவுப் பகிர்வு ஆகியவற்றுக்கும் இது வசதி ஏற்படுத்தித் தரும்.

விவரங்கள்:

  1. பரஸ்பர ஆர்வத்தின் அடிப்படையில் இந்திய உயிரி தொழில்நுட்பத் துறையும், பிசினஸ் பின்லாந்து நிறுவனமும் இணைந்து கீழ்கண்ட ஆராய்ச்சித் திட்டங்களுக்கு உதவ முடிவு செய்துள்ளன. 
  • புதுமைப் படைப்பு, உயிரி எதிர்கால மேடை, உயிரி எரிபொருட்கள், உயிரி எரிசக்தி, உயிரிகூழ்  அடிப்படையிலான பொருட்கள்.
  • உயிரி தொழில்நுட்பம் சார்ந்த சுற்றுச்சூழல் மற்றும் எரிசக்தி செயல்பாடுகள்
  • தொடக்கநிலை மற்றும் வளர்ச்சி நிலை நிறுவனங்களின் வர்த்தக மேம்பாடு
  • கல்வி தொழில்நுட்பங்கள் மற்றும் உயிரியல் சார்ந்த விளையாட்டுக்கள்.
  • அறிவியல் தொழில்களின் இதரத் துறைகள்

பின்னணி:

      பின்லாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையே அறிவியல் தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்து 2008 மார்ச் 28-ம் தேதி ஹெல்சிங்கி நகரில் கையெழுத்தான உடன்பாட்டுக்கு ஏற்ப இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

-------------



(Release ID: 1563252) Visitor Counter : 109