பிரதமர் அலுவலகம்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் நினைவாக செங்கோட்டையில் சுபாஷ் சந்திரபோஸ் அருங்காட்சியகத்தைப் பிரதமர் திறந்து வைத்தார்

தில்லியில் உள்ள யாத்- இ - ஜாலியன் அருங்காட்சியகம், 1857 குறித்த அருங்காட்சியகம் மற்றும் த்ரிஷ்யகலா அருங்காட்சியகம் ஆகியவற்றைப் பிரதமர் பார்வையிட்டார்
இந்த நான்கு அருங்காட்சியகங்களுக்கும் க்ரந்தி மந்திர் எனப் பெயர்சூட்டப்பட்டுள்ளது

Posted On: 23 JAN 2019 1:46PM by PIB Chennai

சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவுகூர்ந்து மலரஞ்சலி  செலுத்திய பிரதமர் திரு நரேந்திர மோடி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 122-வது பிறந்த ஆண்டினைக் குறிக்கும் வகையில் செங்கோட்டையில் இன்று (23.01.2019) அருங்காட்சியகத்தையும் திறந்து வைத்தார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் இந்திய தேசிய ராணுவத்தின் அருங்காட்சியகத்தை அவர் பார்வையிட்டார். “நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளில் அவருக்கு நான் தலை வணங்குகிறேன். இந்திய சுதந்திரத்தை உறுதி செய்து கவுரவமான வாழ்க்கை நடத்த தம்மை அர்ப்பணித்துக்கொண்ட மாவீரராக அவர் விளங்கினார். அவரது எண்ணங்களை ஈடேற்றவும், வலுவான இந்தியாவை உருவாக்கவும் நாம் உறுதிபூண்டுள்ளோம்” என்று பிரதமர் கூறினார்.  இந்த சுவர்களிலிருந்து வரலாறு எதிரொலிக்கிறது என்றும் அவர் கூறினார். இதே கட்டிடத்தில் இந்தியாவின் வீரப்புதல்வர்களான கலோனெல் பிரேம் சகல், கலோனெல் குர்பக்ஷ் சிங் தில்லான், மேஜர் ஜென்ரல் ஷா நவாஸ்கான் ஆகியோர் காலனி ஆட்சியாளர்களால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.  சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் இந்திய தேசிய ராணுவத்தின் வரலாறு குறித்த விரிவான தகவல்களையும், புகைப்படங்களையும் பிரதமர் பார்வையிட்டார். நேதாஜியால் பயன்படுத்தப்பட்ட மர நாற்காலி, வாள், பதக்கங்கள், பதவிப் பட்டைகள் (பேட்ஜ்கள்),.என்.. சீருடைகள் போன்ற நேதாஜி மற்றும் ஐ.என்.ஏ-வுடன் தொடர்புடைய கலைப் பொருட்களையும் பிரதமர் பார்வையிட்டார்.

யாத்-இ-ஜாலியன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பந்தமான ஆதாரபூர்வ புகைப்படங்கள், ஓவியங்கள், செய்திகளின் தொகுப்பு ஆகியவற்றைப் பிரதமர் தொட்டுணர்ந்தார். 1919-ல் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை, முதலாம் உலக யுத்தத்தில் இந்திய ராணுவ வீரர்கள் செய்த தியாகங்கள் ஆகியவற்றின் வரலாற்றைப் பார்வையாளர்களுக்கு உணர்த்துவது இந்த அருங்காட்சியகத்தின் நோக்கமாகும்.

இந்தியாவின் முதலாவது சுதந்திரப்போர் தொடர்பான 1857 குறித்த அருங்காட்சியகத்தையும் அவர் பார்வையிட்டார். இந்தியர்கள் அந்தத் தருணத்தில் வெளிக்காட்டிய வீரத்தையும், தியாகங்களையும் 1857 சுதந்திரப் போராட்டம் குறித்த வரலாற்றுப் பூர்வமான சித்தரிபுகளையும் அவர் பார்வையிட்டார்.

 

இதே வளாகத்தில் த்ரிஷ்யகலா அருங்காட்சியகத்தில் ஏற்பாடு செய்திருந்த இந்தியக் கலை கண்காட்சியையும் பிரதமர் பார்வையிட்டார். ‘த்ரிஷ்யகலாவில் குருதேவ் தாகூரின் படைப்புகளைக் காண்பது கலையின் காதலர்களுக்கு ஒரு விருந்தாகும். குருதேவ் தாகூர் ஒரு சிறந்த எழுத்தாளர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், அவருக்குக் கலை உலகத்தோடும் தொடர்பு இருந்தது. பலவித தலைப்புகளில் ஏராளமான படைப்புகளை அவர் உருவாக்கியுள்ளார். குருதேவின் படைப்புகள் சர்வதேச ரீதியாகவும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன’ என்று அவர் கூறினார். ‘இந்திய கலை, கலாச்சாரத்தின் நுட்பமான அம்சங்கள் மூலம் வசீகரிக்கும் த்ரிஷ்யகலாவுக்கு கலையின் காதலர்கள் வருகை தர வேண்டும் என்று நான்  வலியுறுத்துகிறேன். ராஜா ரவிவர்மா, குருதேவ் தாகூர், அம்ரிதா ஷெர் கில், அபனீந்திரநாத் தாகூர், நந்தலால் போஸ், ககனேந்திரநாத் தாகூர், சைலோஸ் முகர்ஜியா, ஜாமினி ராய் போன்ற இந்தியாவின் புகழ்பெற்ற கலைஞர்களின் படைப்புகள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன’ என்றும் பிரதமர் டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

 

அருங்காட்சியகங்களைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர், இந்தியாவின் வளமான வரலாறு மற்றும் கலாச்சாரம் தொடர்பான நான்கு அருங்காட்சியகங்களைத் தொடங்கி வைப்பது மிகவும் பெருமைக்குரியது என்றார். அனைத்து நான்கு அருங்காட்சியகங்களும் க்ரந்தி மந்திர் என பெயரிடப்பட்டுள்ளது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் இந்திய தேசிய ராணுவம் பற்றிய அருங்காட்சியகங்கள், யாத்-இ-ஜாலியன் அருங்காட்சியகம், (ஜாலியன் வாலாபாக் மற்றும் முதலாம் உலகப்போர் பற்றியது) இந்தியாவின் முதலாவது சுதந்திரப் போராட்டமான 1857 குறித்த அருங்காட்சியகம், இந்தியக் கலை சார்ந்த த்ரிஷ்யகலா அருங்காட்சியகம் உள்ளிட்ட இந்த வளாகம் 450-க்கும் அதிகமான கலைப்படைப்புகளைக் கொண்ட 300 ஆண்டுகள்  தொடர்புடையவை!

 

நமது மகத்தான விடுதலைப் போராட்ட வீரர்களின் புரட்சிகரப் பெருமிதத்திற்கும், துணிவுக்கும் க்ரந்தி மந்திர் புகழ் சேர்ப்பதாகும். குடியரசு தின விழா கொண்டாடவிருக்கும் வேளையில், நமது புகழ்மிக்க வரலாற்றுக்கும் இளைஞர்களுக்கும் இடையேயான தொடர்பை இவை ஆழப்படுத்துவதோடு குடிமக்களிடையே தேசபக்த உணர்வையும் வளர்க்கும்.

 

                                *****



(Release ID: 1561103) Visitor Counter : 370