மத்திய அமைச்சரவை

இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இருதரப்பு தொழில்நுட்ப கூட்டுறவிற்கான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 10 JAN 2019 8:50PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவை, இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இருதரப்பு தொழில்நுட்ப கூட்டுறவிற்கான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு ஒப்புதல் வழங்கியது. இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை 2018, அக்டோபர், 3 அன்று கையெழுத்தானது.

சிறப்பம்சங்கள்

      இருதரப்பிற்கும் நன்மை, சமத்துவம் மற்றும் பரிமாற்றம் அடிப்படையில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இருதரப்பு தொழில்நுட்ப கூட்டுறவினை ஊக்குவிக்குவிக்கும் வகையில், கூட்டுறவு நிறுவன உறவிற்கான அடித்தளத்தை ஏற்படுத்தவதே இந்தியா மற்றும் பிரான்சின் குறிக்கோளாகும். கூட்டு ஆராய்ச்சி பணிக் குழுக்கள், சோதனைத் திட்டங்கள், திறன் வளர்ப்புத் திட்டங்கள், கல்வி சார்ந்த சுற்றுலா, வழக்கு ஆய்வுகள் மற்றும் அனுபவம்/நிபுணத்துவ பகிர்வு போன்றவை இந்த தொழில்நுட்ப கூட்டுறவில் அடங்கும்.

நன்மைகள்

      இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையேயான இருதரப்பு கூட்டுறவை வலுப்படுத்திட இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை உதவும்.



(Release ID: 1559520) Visitor Counter : 109