மத்திய அமைச்சரவை

சுவாசிலாந்திற்கு வரி உதவி அளிப்பதற்கான குறிப்பு விதிமுறைகளில் (டி.ஓ.ஆர்.) கையெழுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இடுகை இடப்பட்ட நாள்: 10 JAN 2019 8:48PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவை, இந்தியா மற்றும் இஸ்வாதினி இடையேயான எல்லைகளற்ற வரி ஆய்வாளர்கள் திட்டத்தின் கீழ் சுவாசிலாந்திற்கு (முன்பு இஸ்வாதினி என அழைக்கப்பட்டது) வரி உதவி அளிப்பதற்காக இந்திய நிபுணரை பணி நியமிப்பது குறித்த குறிப்பு விதிமுறைகளில் கையெழுத்திடுவதற்கு ஒப்புதல் வழங்கியது.

 

புள்ளி-வாரியான விபரங்கள்

  1. எல்லைகளற்ற வரி ஆய்வாளர்கள் திட்டத்தின் கீழ் இந்திய அரசு மற்றும் இஸ்வாதினி அரசுகளால் இந்திய நிபுணர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
  2. எல்லைகளற்ற வரி ஆய்வாளர்கள் திட்டத்தின் கீழ் இஸ்வாதினிக்கு வரி உதவி அளிப்பதற்கான இந்திய நிபுணரை பணியமர்த்துவதற்கான நிபந்தனைகளை குறிப்பு விதிமுறைகள் முறைப்படுத்தும்.

பெருந்தாக்கம்

எல்லைகளற்ற வரி ஆய்வாளர்கள் திட்டத்தின் கீழ் இந்திய நிபுணரை பணியமர்த்துவது, வளரும் நாடுகளின் வரி விஷயங்களில் திறன் வளர்ப்பில் இந்தியாவின் உதவியை ஊக்கப்படுத்தும்.

பின்னணி

ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் (யு.என்.டி.பி.) மற்றும் பொருளாதார கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (ஓ.இ.சி.டீ.) ஆகியவற்றால் கூட்டாக துவங்கப்பட்ட எல்லைகளற்ற வரி ஆய்வாளர்கள் திட்டம் (டி.ஐ.டபிள்யு.பீ.), வளரும் நாடுகளுக்கு உதவும் வகையில், திறன் வளர்ப்பு மூலம் தேசிய வரி நிர்வாகங்களை வலுப்படுத்துவதையும் மற்றும் அதன் அறிவை பிற நாடுகளுடன் பகிர்வதையும் குறிக்கோளாக கொண்டது. வளரும் நாடுகளில் வரி நிர்வாகங்களை வலுப்படுத்தும் வகையில், தொழில்நுட்ப அறிவு மற்றும் திறன்களை அதன் தணிக்கையாளர்களுக்கு அளித்தல் மற்றும் பொதுவான தணிக்கை முறைகளை பகிர்தல் மற்றும் அவர்களுக்கு அறிவுப் பொருட்களை பரப்புதல் ஆகியவற்றை எல்லைகளற்ற வரி ஆய்வாளர்கள் திட்டம் (டி.ஐ.டபிள்யு.பீ.) நோக்கமாக கொண்டுள்ளது. எல்லைகளற்ற வரி ஆய்வாளர்கள் திட்டம் (டி.ஐ.டபிள்யு.பீ.), வரி விவகாரங்களில் கூட்டுறவை வலுப்படுத்தும் சர்வதேச சமூகத்தின் முயற்சிகளை முன்னெடுத்து, வளரும் நாடுகளின் உள்நாட்டு வரி திரட்டும் முயற்சிகளுக்கு பங்காற்றும். வளரும் நாடுகளில் வரி விவகாரங்களின் திறன் வளர்ப்பிற்கு இந்தியா எப்போதும் உதவி வருகிறது. இவ்வகையில், உலகளாவிய தலைவரான இந்தியா, வரி விவகாரங்களில் தென்-தென் கூட்டுறவில் மிக முக்கிய பங்காற்ற வேண்டியுள்ளது.   

 

******


(வெளியீட்டு அடையாள எண்: 1559515) வருகையாளர் எண்ணிக்கை : 249
இந்த வெளியீட்டை படிக்க: Malayalam , English , Urdu , Marathi , Bengali , Gujarati , Telugu , Kannada