மத்திய அமைச்சரவை

இந்தியா மற்றும் டென்மார்க் இடையேயான கடற்சார் பிரச்சினைகள் குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 10 JAN 2019 8:53PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவை, இந்தியா மற்றும் டென்மார்க் இடையேயான கடற்சார் பிரச்சினைகள் குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு ஒப்புதல் வழங்கியது. இந்த ஒப்பந்தம் 2019, ஜனவரி மாதத்தில்  டென்மார்க்கிலிருந்து இந்தியாவிற்கு வருகை தரவுள்ள மிக முக்கிய பிரமுகரின் வருகையின்போது கையெழுதிடப்பட உள்ளது.

 

நன்மைகள்

 

      இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திடுவது, இருதரப்பு ஒத்துழைப்பிற்கான துறைகள் குறித்து இரு நாடுகளும் கண்டறிய வழிவகுக்கும்:

  • இந்தியா மற்றும் டென்மார்க் இடையே கடற்சார் துறைகளில் இரு நாடுகளுக்குமிடையே ஒத்துழைப்பு மற்றும் முதலீடுகளுக்கு வழி வகுத்தல்.
  • இரு நாடுகளும், தரமான கப்பல் தயாரிப்பை உறுதி செய்வதற்காக இரு தரப்பு திறன்களை மேம்படுத்தும் வகையில் நிபுணத்துவம், வெளியீடுகள், தகவல், தரவு மற்றும் புள்ளிவிபரங்களை பகிர்ந்துக் கொள்ளுதல்;  பசுமை கடற்சார் தொழில்நுட்பம் மற்றும் கப்பல் கட்டுமானத் துறையில் கூட்டுறவு; இந்திய கப்பல் பதிவிற்கு (ஐ.ஆர்.எஸ்.) அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு என்ற தகுதியை அளித்தல், கடற்சார் பயிற்சி மற்றும் கல்வித் துறைகளில் கூட்டுறவு;
  • வணிக கப்பல் மற்றும் கடற்சார் போக்குவரத்து விஷயங்கள் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறைகளில் நிலையான கூட்டுறவு; மற்றும்
  • இந்த ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும், இருதரப்பு மற்றும் சர்வதேச அளவில், பரஸ்பரம் நன்மையளிப்பதற்கான வாய்ப்புகள் குறித்த கூட்டுறவினை மேலும் விரிவுபடுத்தும்.  

பின்னணி

இந்தியாவின் முக்கிய வணிக பங்குதாரர்களில் டென்மார்க்கும் ஒன்றாகும். மருத்துவ/மருந்துப் பொருட்கள், எரிசக்தியை உருவாக்கும் இயந்திரங்கள், தொழிற்சாலை இயந்திரங்கள், உலோக தாதுகள், கரிம இரசாயணங்கள், போன்றவை டென்மார்க்கிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் முக்கிய பொருட்களாகும். ஆடைகள், ஜவுளிகள்/ துணிகள்/நூல்கள், சாலை வாகனங்கள் மற்றும் உதிரி பொருட்கள், உலோக பொருட்கள்,  இரும்பு மற்றும் எஃகு, காலணி மற்றும் பயணப் பொருட்கள் போன்றவை இந்தியாவிலிருந்து டென்மார்க்கிற்கு ஏற்றுமதி செய்யப்படும் முக்கிய பொருட்களாகும். இரு நாடுகளுக்குமிடையேயான இருதரப்பு வணிகத்தை மேம்படுத்தவும் மற்றும் கடற்சார் துறையில் கூட்டுறவு மற்றும் ஒத்துழைப்பை உறுதி செய்திடவும், டென்மார்க்குடன் இருதரப்பு புரிந்துணர்வு உடன்படிக்கை ஏற்படுத்திட முன்மொழியப்பட்டது.

 



(Release ID: 1559513) Visitor Counter : 148