பிரதமர் அலுவலகம்

பங்குதாரர்கள் விவாத அரங்கு 2018-ஐ பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

Posted On: 11 DEC 2018 12:19PM by PIB Chennai

நான்காவது பங்குதாரர்கள் விவாத அரங்கை பிரதமர் திரு. நரேந்திர மோடி, புதுதில்லியில் டிசம்பர் 12 அன்று தொடங்கி வைக்கிறார். கருவில் இருக்கும் குழந்தைகள், புதிதாகப் பிறந்த பச்சிளம் குழந்தைகள் மற்றும் குழந்தைகள் ஆரோக்கியத்திற்கான பங்குதாரர் அமைப்புடன் இணைந்து மத்திய அரசு இந்த இரண்டு நாள் சர்வதேச மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது. டிசம்பர் 12 முதல் 13 வரை நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், 85 நாடுகளில் இருந்து வரும் சுமார் 1,500 பிரதிநிதிகள் பங்கேற்று பெண்கள், குழந்தைகள் மற்றும் வளர் இளம்பருவத்தினரின் ஆரோக்கியம் மற்றும் நலத்தை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கவுள்ளனர். உலகின் அனைத்து பிராந்தியங்கள் மற்றும் வருமான அளவுகோல் அடிப்படையில் நாடுகள் தேர்வு செய்யப்பட்டு இந்த மாநாட்டிற்கு அழைக்கப்பட்டுள்ளன. சர்வதேச மற்றும் பிராந்திய அளவிலான அமைப்புகளின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் (உ-ம். ஜி-7, ஜி-20, பிரிக்ஸ் போன்ற) நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

பல்வேறு நாடுகள், பல்வேறு தரப்பினர் பங்கேற்கும் சர்வதேச அளவிலான இந்த உயர்மட்ட மாநாடு 4-வது முறையாக நடைபெறவுள்ளது. பெண்கள், குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினர் தொடர்பான பிரச்சினைகளுக்கு சர்வதேச அளவில் நிலையான தீர்வு காணும் நோக்கில் இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பங்குதாரர்கள் விவாத அரங்கிற்கு முன்னோடியாக, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் திரு. ஜெ.பி.நட்டா, சிலி நாட்டின் முன்னாள் அதிபர் டாக்டர் மிச்சல் பாச்லே மற்றும் கருவில் இருக்கும் குழந்தைகள், புதிதாகப் பிறந்த பச்சிளம் குழந்தைகள் மற்றும் குழந்தைகள் ஆரோக்கியத்திற்கான பங்குதாரர் அமைப்பின் முன்னாள் நிர்வாகக் குழுத் தலைவர் மற்றும் பிரபல நடிகையும், யுனிசெஃப் நல்லெண்ணத்தூதருமான பிரியங்கா சோப்ரா ஆகியோர் அடங்கிய பிரதிநிதிகள் குழு, கருவில் இருக்கும் குழந்தைகள், புதிதாகப் பிறந்த பச்சிளம் குழந்தைகள் மற்றும் குழந்தைகள் ஆரோக்கியத்திற்கான பங்குதாரர் அமைப்பு 2018 ஏப்ரல் 11 அன்று நடத்திய முன்னோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்த அமைப்பின் புரவலரான பிரதமரை சந்தித்தனர்.

குழந்தைகள் மற்றும் பேறுகால உயிரிழப்புகளை குறைக்கவும், வளர் இளம் பருவத்தினர், குழந்தைகள், பச்சிளம் குழந்தைகள் மற்றும் கருவில் இருக்கும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதை விரைவுப்படுத்தும் நோக்கில், இந்த பங்குதாரர்கள் விவாத அரங்கு எனப்படும் சர்வதேச சுகாதார ஒத்துழைப்பு அமைப்பு செப்டம்பர் 2015-ல் தொடங்கப்பட்டது.  இந்த பங்குதாரர்கள்  அமைப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், 10 தொகுதிகளைச் சேர்ந்த 92 நாடுகள் இடம்பெற்றுள்ளன : கல்வி, ஆராய்ச்சி மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள்; நன்கொடையாளர்கள் மற்றும் அறக்கட்டளைகள்; சுகாதார சேவை வல்லுனர்கள்; பன்னாட்டு அமைப்புகள்; தொண்டு நிறுவனங்கள்; பங்குதாரர் நாடுகள்; சர்வதேச நிதி உதவி அமைப்புகள் மற்றும் தனியார் துறையினர் இடம்பெற்றுள்ளனர்.

இதற்கு முந்தைய விவாத அரங்குகள் தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் (2014), இந்தியாவின் புதுதில்லி (2010) மற்றும் தான்ஸானியாவின் தர் ஏஸ் சலாம் (2007) ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. தற்போது இந்தியா இரண்டாவது முறையாக இந்த பங்குதாரர்கள் விவாத அரங்கை நடத்தவுள்ளது.

நீடித்த வளர்ச்சிக்கான இலக்கு, குறிப்பாக, ‘ஒவ்வொரு பெண், ஒவ்வொரு குழந்தை’ இயக்கத்தின் ஆதரவுடன் பெண்கள், குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினரின் சுகாதாரம் சார்ந்த நிலைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள சுகாதாரம் சார்ந்த நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை அடைவதே, கருவில் இருக்கும் குழந்தைகள், புதிதாகப் பிறந்த பச்சிளம் குழந்தைகள் மற்றும் குழந்தைகள் ஆரோக்கியத்திற்கான பங்குதாரர் அமைப்பின் நோக்கம் ஆகும்.

வாழ் – செழித்தோங்கு – மாற்றத்தை உருவாக்கு என்ற சர்வதேச நிலைப்பாட்டின் குறிக்கோளையொட்டிய இந்தப் பங்குதாரர் விவாத அரங்கின் நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டுள்ளது. நான்கு முழுமையான உயர்மட்ட கூட்டங்கள் உள்ளிட்ட இந்த நிகழ்ச்சிகள், அரசியல் தலைமைப் பண்பு, பல்துறை நடவடிக்கை, பொறுப்புணர்வு மற்றும் பங்குதாரரின் வலிமை போன்றவற்றில் கவனம் செலுத்தும். ஒவ்வொரு உயர்மட்ட கருத்தரங்குகளின் தொடர்ச்சியாக, ஒரே நேரத்தில்  ஆறு  அரங்குகளும், இந்த அமைப்பின் முக்கிய நோக்கங்கள் குறித்து விரிவான விவாதம் நடத்துவதற்கான வாய்ப்பை வழங்கும்.

பெண்கள், குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினரின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பல்வேறு நாடுகளும், பல்வேறு துறைகளுடன் எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்படுகின்றன என்பதை சித்தரிக்கக்கூடிய 12 வெற்றிச் சரித்திரங்கள் பற்றிய உண்மையையும் இந்த அமைப்பு எடுத்துரைக்கும். இந்த ஆய்வு அறிக்கைகள் பங்குதாரர் அமைப்பின் சிறப்பு இதழில் (British Medical Journal) வெளியிடப்படும்.

இந்த பங்குதாரர் விவாத அரங்கில் ஆப்பிரிக்கா, கிழக்கு மத்திய தரைகடல் பகுதி, ஐரோப்பா, அமெரிக்கா, தென்கிழக்காசியா மற்றும் மேற்கு பசிபிக் ஆகிய ஆறு பிராந்தியங்களின் கீழ்க்கண்ட ஆறு சிறப்பு அம்சங்களின் அனுபவங்களை எடுத்துரைக்கும்:

  1. முன்பருவ குழந்தைப்பருவம் வளர்ச்சி (ஜெர்மனி & சிலி);
  2. வளர் இளம் பருவ சுகாதாரம் மற்றும் நலவாழ்வு (அமெரிக்கா  & இந்தோனேஷியா);
  3. சேவையில் தரம் சமத்துவம் மற்றும் கண்ணியம் (இந்தியா & கம்போடியா);
  • இந்தியாவிலிருந்து, விரைவுபடுத்தப்பட்ட இந்திரதனுஷ் இயக்கம் இந்தப் பிரிவின் கீழ், ஆய்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
  1. பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் (மலாவி & மலேசியா) மற்றும்;
  2. பெண்கள், சிறுமிகள் மற்றும் சமுதாயத்திற்கு அதிகாரம் அளித்தல்  (தென்னாப்பிரிக்கா & கவுதமாலா); மற்றும்
  3. மனிதாபிமானமற்ற மற்றும் எளிதில் உடையக்கூடிய  (சியரா லியோன் & ஆப்கானிஸ்தான்)

*******

 வி.கீ/எம்எம்./கோ



(Release ID: 1555541) Visitor Counter : 196