மத்திய அமைச்சரவை

இந்தியா - பிரான்ஸ் இடையே எரிசக்தி பாதுகாப்புத் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இடுகை இடப்பட்ட நாள்: 06 DEC 2018 9:36PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு இந்தியா - பிரான்ஸ் இடையே எரிசக்தி பாதுகாப்புத் துறையில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.  இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் அக்டோபர் 17 2018 அன்று கையெழுத்திடப்பட்டது.

 

தாக்கம்

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்த இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அறிவுசார் பரிமாற்றம் மற்றும் தொழில்நுட்ப உதவித் துறையில் ஒத்துழைப்பு ஆகியவற்றை ஊக்குவிக்கும். இந்த ஒப்பந்தம் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் எரிசக்திப் பாதுகாப்பு தொடர்பான தொழில்நுட்பம் மற்றும் தேவை குறித்த மேலாண்மை தொடர்பான தகவல்களைப் பரிமாறிக்கொள்ள உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பலன்கள்

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும். இதன்மூலம் எரிசக்திப் பாதுகாப்புத் தொழில்நுட்பம் குறித்த ஆய்வு, வளர்ச்சி, செயல் முறை விளக்கம் ஆகியவற்றை ஊக்குவிக்கும். மின் வாகன போக்குவரத்துத் துறையில் கவனம் செலுத்தப்படும்.

 

*****


(வெளியீட்டு அடையாள எண்: 1555025) வருகையாளர் எண்ணிக்கை : 176
இந்த வெளியீட்டை படிக்க: Malayalam , English , Urdu , Marathi , Bengali , Assamese , Gujarati , Kannada