மத்திய அமைச்சரவை

சுற்றுசூழல் ஒத்துழைப்பு துறையில் இந்தியா - பின்லாந்து இடையேயான ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 10 OCT 2018 1:34PM by PIB Chennai

சுற்றுசூழல் ஒத்துழைப்பு துறையில் இந்தியா - பின்லாந்து இடையேயான ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு,  இயற்கை வளங்களின் மேலாண்மை ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும்  இடையே நெருக்கமான மற்றும் நீண்ட கால ஒத்துழைப்பை ஏற்படுத்தவும், ஊக்குவிக்கவும் இந்த ஒத்துழைப்பு ஒப்பந்தம் வழிவகுக்கும். இது இரு நாடுகளின் சட்ட விதிகளை கருத்தில் கொண்டு  சமபங்கு, பரஸ்பர பரிமாற்றம் மற்றும் பரஸ்பர நன்மைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒப்பந்தம் செயல்படுத்தப்படும்.

சிறந்த சூழல் பாதுகாப்பு, சிறந்த பாதுகாப்பு, பருவநிலை மாற்றத்தில் சிறந்த மேலாண்மை, வன விலங்குகள் பாதுகாப்பு ஆகியவற்றில் நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளை இந்த ஒப்பந்தம்  கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் அடைப்படையில் கீழ்கண்ட துறைகளில் ஒத்துழைப்பு ஏற்படுத்தப்படும்:

 

  1. காற்று மற்றும் நீர் மாசுபாடு தடுப்பு மற்றும் சுத்திகரிப்பு, மாசுபடுத்தப்பட்ட மண்ணை சரிசெய்தல்
  2. அபாயகரமான கழிவுகள் உட்பட்ட  கழிவுகள் மேலாண்மை மற்றும் கழிவுகளில் இருந்து எரிசக்தி உற்பத்திசெய்யும் தொழில்நுட்பங்கள்
  3. மறுசுழற்சி பொருளாதாரம், கரியமிலம் குறைவான தீர்வுகள், வனங்கள் உள்ளிட்ட இயற்கை வளங்களின் நிலையான மேலாண்மை
  4. பருவநிலை மாற்றம்
  5. சுற்றுசூழல் மற்றும் வன கண்காணிப்பு மற்றும் தரவு மேலாண்மை
  6. கடல் மற்றும் கரையோர வளங்கள் பாதுகாப்பு
  7. கடல் / கடல் தீவுகளில்  ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை
  8. இருதரப்பும் இனணந்து முடிவுசெய்யும் பிற துறைகள்

 

*****



(Release ID: 1549206) Visitor Counter : 130