மத்திய அமைச்சரவை

மருத்துவ துறையில் இந்திய மற்றும் உஸ்பெகிஸ்தான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய- அமைச்சரவை ஒப்புதல்

இடுகை இடப்பட்ட நாள்: 26 SEP 2018 4:12PM by PIB Chennai

இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தான் இடையே மருத்துவ துறையில் வர்த்தகம், தொழிற்சாலை, ஆய்வு மற்றும் வளர்ச்சி ஆகியவை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில கையெழுத்திட பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், உஸ்பெகிஸ்தான் அதிபர் அக்டோபர் 1, 2018 இந்தியா வரும் போது கையெழுத்திட உள்ளார்.

 இரு நாடுகளிலும் மருந்து துறையின் வளர்ச்சி மற்றும் மருந்து துறையில் வர்த்தகம், உற்பத்தி, ஆய்வு மற்றும் வளர்ச்சியில் இருதரப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை கருதி இரு நாடுகளும் அதிகாரபூர்வ ஒத்துழைப்பை ஏற்படுத்த முயன்று வந்தன. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், இரு நாடுகளிலும் உள்ள பல்வேறு மருத்துவ முறைகளில் பயன்டுத்தப்படும்,  செயல் திறன்மிக்க மருந்துக்கான மூலப் பொருட்கள் உள்ளிட்ட உற்பத்தி மருந்து உற்பத்திகான வாய்ப்புகளை ஆராய வகை செய்கிறது. இந்த ஒப்பந்தம் வர்த்தகம் மற்றும் பதிவு முறைகள், செயல் திறன்மிக்க மருந்து மற்றும் மருந்து பொருட்களுக்கான ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான சட்ட மற்றும் ஒழுங்குமுறை தேவைகள் தொடர்பான தகவல்களை பரிமாறிக் கொள்ள உதவும். இந்த ஒப்பந்தம் உஸ்பெகிஸ்தான் குடியரசுடன் மருந்து பொருட்களின் வர்த்தகம், தொழிற்சாலை, ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கான ஒத்துழைப்பை அதிகரிக்கும்.   

 

 

*********


(வெளியீட்டு அடையாள எண்: 1547483) வருகையாளர் எண்ணிக்கை : 234
இந்த வெளியீட்டை படிக்க: English , Marathi , Assamese , Gujarati , Telugu , Kannada , Malayalam