மத்திய அமைச்சரவை

உஸ்பெகிஸ்தான் ஆண்டிஜன் பகுதியில் உஸ்பெகிஸ்தான்-இந்தியா இடையேயான தடையற்ற மருந்து மண்டலம் உருவாக்குதல் குறித்து இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தான் இடையேயான ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 26 SEP 2018 4:16PM by PIB Chennai

உஸ்பெகிஸ்தான் ஆண்டிஜன் பகுதியில் உஸ்பெகிஸ்தான்-இந்தியா இடையேயான தடையற்ற மருந்து மண்டலம் உருவாக்குதல் குறித்து இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தான் இடையேயான ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அக்டோபர் 1, 2018 அன்று உஸ்பெகிஸ்தான் அதிபர் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளும்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

இருநாடுகளிலும் மருந்தியல் துறை மற்றும் உயிரி மருந்தியல் தொழில்துறை  ஆகியவற்றில் வளர்ச்சி முக்கியத்துவம் மற்றும் இருநாடுகளிலும் மருந்தியல் மற்றும் உயிரி மருந்தியல் துறைகளில் வர்த்தகம், தொழித்துறை மற்றும் உற்பத்தி ஆகியவற்றில் பரஸ்பர ஒத்துழைப்பின் முக்கியத்துவம் ஆகியவற்றை மனதில் கொண்டு இருதரப்பு ஒத்துழைப்பு உறவிற்கான  முறையான வழிமுறையை உருவாக்க இருநாடுகளும் முயற்சித்து வருகிறது.  உஸ்பெகிஸ்தான் ஆண்டிஜன் பகுதியில் உஸ்பெகிஸ்தான்-இந்தியா இடையேயான தடையற்ற மருந்து மண்டலம் உருவாக்குதல் குறித்த ஒத்துழைப்பிற்கான கட்டமைப்பை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தும். ஆண்டிஜான் பகுதியில் உள்ள உஸ்பெகிஸ்தான்- இந்தியா இடையேயான தடையற்ற மருந்து மண்டலத்தில் மருந்து பொருட்களை தயாரிக்க இந்திய நிறுவனங்களை முதலீடு செய்வும், மருந்து உற்பத்தி ஆலைகளை அமைக்கும் வசதிகளையும் இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தும்.

*****



(Release ID: 1547417) Visitor Counter : 116