பிரதமர் அலுவலகம்

பள்ளிக் குழந்தைகளுடன் பிரதமர் கலந்துரையாடல்:வாரணாசி மேம்பாட்டுப் பணிகளை மதிப்பீடு செய்தார்.

Posted On: 17 SEP 2018 11:15PM by PIB Chennai

  பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தமது சொந்த தொகுதியான  வாரணாசியில் பள்ளிக் குழந்தைகளுடன் சுமார் 90 நிமிடங்கள் நெருங்கி கலந்துரையாடினார்.

    நரூர் என்ற கிராமத்தில் உள்ள பள்ளிக்கு பிரதமர் சென்றடைந்த பொது  குழந்தைகள்  அவரை உற்சாகமாக வரவேற்றனர். பிரதமரும் விஷ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு குழந்தைகளுக்கு வாழத்துத் தெரிவித்தார்பல்வேறு திறன்களை கற்றுக் கொள்வது அவசியம் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

   மாணவர்கள் என்ற முறையில் கேள்விகள் கேட்பது மிகவும் முக்கியமானது என்று பிரதமர் கூறினார். இளம் மாணவர்கள்  கேள்வி கேட்க பயப்படக்கூடாது என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். கேள்வி கேட்பது கற்றலின் முக்கிய அம்சம் என்று  அவர் வலியுறுத்தினார்.

    ”படிப்பதற்கான அறைஎன்ற   தொண்டு நிறுவனத்தின் உதவி பெறும்  இந்தக் குழந்தைகளுடன் பிரதமர் சிறிது நேரத்தை செலவிட்டார்.

     பின்னர் வாரணாசி டீசல் ரயில் என்ஜின் தொழிற்சாலைக்கு சென்ற பிரதமர் ஏழை மற்றும் வாய்ப்பு வசதிகள் அற்ற பிரிவினரின் குழந்தைகளுடன் கலந்துரையாடினார்இந்தக் குழந்தைகள் காசி வித்யாபீடம் மாணவர்களின் உதவியைப்  பெறுபவர்கள்மாணவர்கள்  கவனத்துடன் படித்து விளையாட்டுகளில் ஆர்வம் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

 பின்னர்  மாலையில் வாரணாசி  தெருக்களில் காரில் பயணம் செய்து நகரத்தின் மேம்பாட்டு பணிகளை மதிப்பீடு செய்தார்காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் சென்று வழிபட்டார். மாண்டோடி ரயில் நிலையத்திற்கும் அவர் திடீர் விஜயம் செய்தார்.

-------



(Release ID: 1546487) Visitor Counter : 82