மத்திய அமைச்சரவை

தேசிய வடிவமைப்புக் கல்வி நிறுவன (என் ஐ டி) சட்டம் 2014-ல் திருத்தம் செய்ய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 12 SEP 2018 4:22PM by PIB Chennai

ஆந்திரபிரதேசத்தில்  அமராவதி / விஜயவாடா தேசிய வடிவமைப்புக் கல்வி நிறுவனம், மத்தியப்பிரதேச மாநிலம் போபால் தேசிய வடிவமைப்புக் கல்வி நிறுவனம்அசாம் மாநிலம் ஜோர்ஹட் தேசிய வடிவமைப்புக் கல்வி நிறுவனம், அரியானா மாநிலம்  குருக்ஷேத்ரா தேசிய வடிவமைப்புக் கல்வி நிறுவனம் ஆகிய நான்கு புதிய தேசிய  வடிவமைப்புக் கல்வி நிறுவனங்களை தேசிய வடிவமைப்புக் கல்வி நிறுவனச் சட்டம் 2014-ன்  அதிகார எல்லைக்குள் கொண்டுவரவும், அகமதாபாதில் உள்ள தேசிய வடிவமைப்புக் கல்வி நிறுவனத்திற்கு இணையாக  இவற்றை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களாக  அறிவிக்கவும், வகை செய்யும் என்.ஐ.டி சட்டம் 2014 திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் அனுமதி வழங்கியுள்ளது. என்.ஐ.டி விஜயவாடா என்பதை என்.ஐ.டி அமராவதி என பெயர் மாற்றம் செய்தல், முதன்மை வடிவமைப்பாளர் என்பதை பேராசிரியருக்கு இணையாக நிலை உயர்த்துதல் உள்ளிட்ட சில சிறிய திருத்தங்களை மேற்கொள்ளவும், மசோதா வகை செய்கிறது.

   நாட்டின்  பல்வேறு பகுதிகளில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களாக புதிய தேசிய வடிவமைப்புக் கல்வி நிறுவனங்களை அமைப்பது, வடிவமைப்புத் துறையில் உயர்ந்த திறன் படைத்த மனிதசக்தியை உருவாக்க உதவும், இதன் பயனாக  கைவினை தொழில்கள், கைத்தறி, ஊரகத் தொழில்நுட்பம், சிறு, நடுத்தர மற்றும் பெரும் தொழில்நிறுவனங்களில் நீடித்த வடிவமைப்பு தலையீடுகளை  செய்வதன் மூலம்  நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகள் உருவாகும். மேலும் திறன் மற்றும் நிறுவன வளர்ச்சிக்கான  திட்டங்களும், மக்களைச்  சென்றடையும்.

------



(Release ID: 1545832) Visitor Counter : 115