மத்திய அமைச்சரவை

அமிர்தசரஸ், புத்த கயா, நாக்பூர், சம்பல்பூர், சிர்மாவூர், விசாகப்பட்டினம் மற்றும் ஜம்மு ஆகிய ஏழு இடங்களில் புதிதாக இந்திய மேலாண்மைக் கழகத்தின் நிரந்தர வளாகங்களை ஏற்படுத்தவும், செயல்பாட்டிற்கு கொண்டுவரவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 05 SEP 2018 9:08PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அமிர்தசரஸ், புத்த கயா, நாக்பூர், சம்பல்பூர், சிர்மாவூர், விசாகப்பட்டினம் மற்றும் ஜம்மு ஆகிய  இடங்களில், ரூ.3,775.42 கோடி (தொடரா செலவினமாக ரூ.2999.96 கோடி மற்றும் தொடர் செலவினமாக ரூ.775.46 கோடி) செலவில்  புதிதாக ஏழு இந்திய மேலாண்மைக் கழகத்தின் நிரந்தர வளாகங்களை ஏற்படுத்தவும், செயல்பாட்டிற்கு கொண்டுவரவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த மேலாண்மைக் கழகங்கள் 2015-16/2016-17-ஆம் ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்டவையாகும். இந்த நிறுவனங்கள் தற்போது தற்காலிக வளாகங்களில் இயங்கி வருகின்றன.

மொத்த செலவினமாக மதிப்பிடப்பட்டுள்ள ரூ. 3,775.42 கோடியில் ரூ.2,804.09 கோடி கீழ்காணும் விவரப்படி நிரந்தர வளாக கட்டுமானப் பணிக்கு செலவிடப்படும்.  

 

 

வ.எண்

 

இந்திய மேலாண்மை கழகத்தின் பெயர்

 

தொகை (ரூ. கோடியில்)

  1.  

ஐ.ஐ.எம். அமிர்தசரஸ்

 

348.31

 

  1.  

ஐ.ஐ.எம். புத்த கயா

 

411.72

 

  1.  

ஐ.ஐ.எம். நாக்பூர்

 

379.68

 

  1.  

ஐ.ஐ.எம். சம்பல்பூர்

 

401.94

 

  1.  

ஐ.ஐ.எம்.  சிர்மாவூர்

 

392.51

 

  1.  

ஐ.ஐ.எம்.  விசாகப்பட்டினம்

 

445.00

 

  1.  

ஐ.ஐ.எம்.  ஜம்மு

424.93

 

 

 

மொத்தம்

 

2804.09

 

 

இந்த இந்திய மேலாண்மைக் கழகங்கள் ஒவ்வொன்றும் 60,384 ச.மீ. பரப்பளவில் கட்டப்படும். ஒவ்வொரு இந்திய மேலாண்மைக் கழகத்திலும் தலா 600 மாணவர்களுக்கான முழுமையான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வீதம் ஐந்தாண்டுகளுக்கு இந்த நிறுவனங்களுக்கு தொடர் மானியமாக வழங்கப்படும். அதன் பிறகு, இந்த நிறுவனங்கள் தங்களது செலவினங்கள் / பராமரிப்பு செலவுகளை, தாங்களே திரட்டிக் கொள்ள வேண்டும்.

இந்த புதிய வளாகங்கள் கட்டுமானப்பணி 2021 ஜூன் மாதத்திற்குள்  முடிக்கப்படும். இவற்றையும் சேர்த்து, அனைத்து 20 இந்திய மேலாண்மைக் கழகங்களும் தத்தமது சொந்த நிரந்தர வளாகங்களைக் கொண்டதாக இருக்கும்.

தொழில் ரீதியான மேலாளர்களாக பணிபுரியத்தக்க கல்வியை,   இந்திய மேலாண்மைக் கழகங்கள்  மாணவர்களுக்கு வழங்கும். அமைச்சரவையின் இந்த முடிவு நாட்டின் பொருளாதார மற்றும் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதாக அமையும்.

                           *******(Release ID: 1545076) Visitor Counter : 54