மத்திய அமைச்சரவை
மரபுசாரா ஹைட்ரோ கார்பன் துரப்பணப்பணி மற்றும் பயன்படுத்துவதற்கான கொள்கை விதிமுறைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
01 AUG 2018 6:10PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ஷேல் எண்ணெய் / எரிவாயு, மீத்தேன் எரிவாயு போன்ற மரபுசாரா ஹைட்ரோ கார்பன் பொருட்களின் துரப்பணப்பணி மற்றும் அவற்றை பயன்படுத்துவதற்கு அனுமதிக்க வகைசெய்யும் கொள்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இவை தற்போது நடைமுறையில் உள்ள உற்பத்தி பகிர்வு ஒப்பந்தம், நிலக்கரிப் படுகை மீத்தேன் ஒப்பந்த அடிப்படையில், குறியீடு செய்யப்பட்ட இடங்களில், உரிமம் பெற்ற / குத்தகைக்கு விடப்பட்ட பகுதிகளில் இதுவரை எடுக்கப்படாமல் உள்ள மரபுசாரா ஹைட்ரோ கார்பன் பொருட்களை எடுப்பதற்கு தற்போதுள்ள ஒப்பந்ததாரர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள்.
பலன்கள்:
- தற்போதைய ஒப்பந்தப் பகுதிகளில், இதுவரை எடுக்கப்படாமல் மற்றும் பயன்படுத்தப்படாமல் உள்ள ஹைட்ரோ கார்பன் வளங்களை அறிவதற்கு இந்தக் கொள்கை உதவும்.
- இந்தக் கொள்கை முடிவு மூலம் துரப்பணப் பணி மற்றும் உற்பத்தியை மேற்கொள்ளவும், புதிய ஹைட்ரோ கார்பன் வளங்களை கண்டறிவதற்கு புதிய முதலீடுகள் செய்யப்படுவதுடன், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும் வழிவகை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கூடுதல் ஹைட்ரோ கார்பன் வளங்களை தோண்டியெடுத்து, அவற்றை பயன்படுத்துவதன் மூலம், புதிய முதலீடுகள் அதிகரிப்துடன், பொருளாதார நடவடிக்கைகள், கூடுதல் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு வழிவகுப்பதோடு, சமுதாயத்தின் பல்வேறு தரப்பினருக்கு பலனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- மரபுசாரா ஹைட்ரோ கார்பன்களை பயன்படுத்துவதில், புதிய, புதுமையான மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை மேற்கொள்ளவும் இது வகை செய்கிறது.
பின்னணி:
தற்போது நடைமுறையில் உள்ள உற்பத்தி பகிர்வு ஒப்பந்தத்தின்படி, ஏற்கனவே ஒப்பந்தம் / குத்தகைக்கு விடப்பட்ட பகுதியில், ஏற்கனவே உள்ள ஒப்பந்ததாரர்கள், புதிதாக நிலக்கரிப் படுகை மீத்தேன் அல்லது பிற மரபுசாரா ஹைட்ரோ கார்பன்களை எடுக்கவோ, பயன்படுத்தவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதேபோன்று, நிலக்கரிப்படுகை ஒப்பந்ததார்கள், நிலக்கரிப்படுகை மீத்தேன் தவிர, வேறு எந்த ஹைட்ரோ கார்பனை எடுக்கவும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். உற்பத்தி பகிர்வு ஒப்பந்தம் மற்றும் நிலக்கரிப் படுகை மீத்தேன் படுகைகள் மற்றும் தேசிய தேசிய எண்ணெய் நிறுவனங்களின் ஒப்பந்ததாரர்கள் வசம் தற்போதுள்ள இடங்களில், நியமன முறை இந்தியாவின் வண்டல்மண் படுகையில் குறிப்பிடத்தக்கதாக உள்ளது.
தொடக்க நிலை ஆய்வுகளின்படி, இந்தியாவின் வண்டல்மண் படுகையில், ஷேல் எரிவாயு 100-200 டி.சி.எஃப் அளவிற்கு இருப்பதாக பல்வேறு சர்வதேச அமைப்புகளால் கண்டறியப்பட்டுள்ளது. ஷேல் எண்ணெய் / எரிவாயு, காம்பே, கிருஷ்ணா-கோதாவரி மற்றும் காவிரிப்படுகை உள்ளிட்ட இடங்களில் அதிகளவில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. உற்பத்தி பகிர்வு ஒப்பந்ததாரர் வசம் உள்ள 72,027 சதுர கிலோமீட்டர் பரப்பளவு இடம், புதிய துரப்பண உரிமக் கொள்கை அடிப்படையிலும் 5,269 சதுர கிலோமீட்டர் பரப்பளவு நிலக்கரிப்படுகை மீத்தேன் குத்தகைக்கும் அனுமதிக்கப்பட்டு, மரபுசார்ந்த அல்லது மரபுசாராத ஹைட்ரோ கார்பன்களை எடுக்கவும், பயன்படுத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய புதிய கொள்கைக்கு ஒப்புதல் அளித்திருப்பதன் மூலம், ஒற்றை ஹைட்ரோ கார்பன் வளம் என்ற நிலையிலிருந்து ஒரே சீரான உரிமக் கொள்கைக்கு மாற வழிவகை ஏற்பட்டுள்ளது. இந்தக் கொள்கை தற்போதுள்ள ஹைட்ரோ கார்பன் துரப்பண மற்றும் உரிமக் கொள்கைக்கும், கண்டறியப்பட்ட சிறிய எண்ணெய் வயல் கொள்கைக்கும் பொருந்தும்.
இந்த புதிய கொள்கையின் நிதி மற்றும் ஒப்பந்த நடைமுறைகள், பெட்ரோலிய செயல்பாடுகளுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்க வகை செய்வதுடன், உற்பத்தி பகிர்வு ஒப்பந்த வட்டங்களில் புதிய ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான செலவுகளை ஈடுகட்டவும் வகைசெய்யும். இதுதவிர, பெட்ரோலியம் / உற்பத்தி அளவு செலவினத்திற்கு, நிலக்கரிப்படுகை மீத்தேன் ஒப்பந்தத்தில் கூடுதலாக பத்து சதவீத லாபம் அளிக்கக் கூடியதாகவும் இருக்கும். மேலும், புதிய கண்டுபிடிப்புகளுக்கான தற்போதைய பெட்ரோலியம் / உற்பத்தி அளவு பட்டுவாடா செலவுகள் அரசுடன் பகிர்ந்து கொள்ளப்படும். நியமனப் பகுதிகளில் தேசிய எண்ணெய் நிறுவனங்கள் துரப்பணப் பணிகளை மேற்கொள்ளவும், மரபுசாரா ஹைட்ரோ கார்பன்களை பயன்படுத்தவும், தற்போதைய துரப்பண மற்றும் ஒப்பந்த உரிமம் சார்ந்த நிதி மற்றும் ஒப்பந்த நடைமுறைகளின்படி மேற்கொள்ளப்படும்.
(Release ID: 1541150)
Visitor Counter : 309