மத்திய அமைச்சரவை

மருந்துப் பொருட்கள் தயாரிப்புத் துறையில் ஒத்துழைப்பு அளிப்பதற்கான இந்தியா-இந்தோனேஷியா இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 18 JUL 2018 5:36PM by PIB Chennai

மருந்துப் பொருட்கள் தயாரிப்பு, உயிரியல் உற்பத்தி, அழகு சாதனப் பொருட்கள் ஒழுங்குமுறை குறித்த துறையில் இந்தியா-இந்தோனேஷியா இடையே,  ஜகார்த்தாவில் இந்த ஆண்டு மே 29ஆம் தேதி கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

  இரு நாடுகளுக்கும் பயனளிக்கக் கூடிய, பரஸ்பர ஒழுங்குமுறை தேவைகள் குறித்த புரிதலை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம்  ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

   சமத்துவம், பரஸ்பர பகிர்வு மற்றும் பயன்கிட்டும் வகையில், மருந்துப் பொருட்கள் உற்பத்தியில் கட்டுப்பாடுகள் குறித்த விஷயங்களில் பலனளிக்கக்கூடிய ஒத்துழைப்பு மற்றும் தகவல் பரிமாற்றத்தை இது ஏற்படுத்தும். மேலும் இருநாடுகளின் ஒழுங்குமுறை அமைப்புகளுக்கு இடையே சிறந்த புரிந்துணர்வையும் இது வலுப்படுத்தும்.

பின்புலம்:

   மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறையின்கீழ் இயங்கும் பொது சுகாதார சேவை இயக்ககத்தின் துணை அமைப்பாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு செயல்படுகிறது.    இந்தியாவில் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், அழகு சாதனப் பொருட்களுக்கான தேசிய ஒழுங்கு முறை ஆணையமாகவும் இது செயல்படுகிறது. தேசிய மருந்து மற்றும் உணவு கட்டுப்பாட்டு முகமை இந்தப் பொருட்களை இந்தோனேஷியாவில் ஒழுங்குமுறைப்படுத்துகிறது. 1961ஆம் ஆண்டின் இந்திய அரசின் தொழில் பரிவர்த்தனை பிரிவு 12-ன்கீழ் பிரதமரின் ஒப்புதல் பெறப்பட்டு, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

=============



(Release ID: 1539184) Visitor Counter : 169