பிரதமர் அலுவலகம்
2018 ஜூலை 7 அன்று பிரதமர் ராஜஸ்தான் செல்கிறார்
Posted On:
06 JUL 2018 4:04PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி 2018 ஜுலை 7 அன்று, ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜெய்பூருக்குச் செல்கிறார்.
மிகப் பெரிய பொதுக்கூட்டம் ஒன்றில், இந்திய அரசு மற்றும் ராஜஸ்தான் அரசு ஆகியவற்றின் திட்டங்களால் பயன் பெற்ற 12 பயனாளிகளின் அனுபவங்கள் கொண்ட ஒலி – ஒளி காட்சி ஒன்றைப் பிரதமர் பார்வையிடுவார். ராஜஸ்தான் முதல்வர் திருமதி வசுந்தரா ராஜே இந்த நிகழ்ச்சியை வழங்குவார்.
இந்தத் திட்டங்கள் பின்வருமாறு :
- பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம்
- பிரதம மந்திரி முத்ரா திட்டம்
- பிரதம மந்திரி ஆவாஸ் திட்டம்
- திறன் இந்தியா
- ராஷ்ட்ரிய பால ஸ்வஸ்திய செயல்திட்டம்
- முக்கிய மந்திரி ராஜ்ஸ்ரீ திட்டம்
- பாமஷா ஸ்வத்யா பீமா திட்டம்
- முக்கிய மந்திரி ஜல் ஸ்வலாம்பன் அபியான்
- ஷ்ராமிக் கல்யாண் கார்ட்
- முக்கிய மந்திரி பலான்ஹார் திட்டம்
- சத்ரா ஸ்கூட்டி விதாரண் திட்டம்
- தீன் தயாள் உபாத்யாய வரிஷித் நாக்ரிக் தீர்த்த யாத்திரை திட்டம்
பிரதமர் ரூ. 2,100 கோடி செலவிலான பதிமூன்று நகர்ப்புற உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார். இந்தத் திட்டங்களில் முக்கியமானவை பின்வருமாறு :
- உதய்ப்பூர் கோட்டை நகர ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு
- அஜ்மீருக்கான உயர்சாலைத் திட்டம்
- அஜ்மீர், பில்வாரா, பிஹானிர், ஹனுமன் காட், சிகார், மவுண்ட் அபு ஆகியவற்றுக்கான குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் திட்டங்கள்
- தோல்புர், நகார், அல்வர், ஜோத்பூர் ஆகியவற்றின் மேம்பாடு
- தசரா மைதானம் (கட்டம் 2)
பிரதமர் பொதுக்கூட்டத்திலும் உரையாற்றுகிறார்.
***
(Release ID: 1538055)
Visitor Counter : 182