மத்திய அமைச்சரவை

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டம் தர் சாலையில் 2 ஆம் எண் கேந்திரிய வித்யாலயாவை கட்ட பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான 7.118 ஏக்கர் நிலத்தை கேந்திரிய வித்யாலய சங்கதத்திற்கு மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

Posted On: 04 JUL 2018 2:40PM by PIB Chennai

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டம் தர் சாலையில் 2 ஆம் எண்  கேந்திரிய வித்யாலயாவை கட்ட பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான 7.118 ஏக்கர் நிலத்தை கேந்திரிய வித்யாலய சங்கதத்திற்கு மாற்ற பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் படி 7.118 ஏக்கர் நிலம் 30 வருடத்திற்கு குத்தகையாக அளிக்கப்படும். இதற்கு வருடத்திற்கு ரூ. 1/- வாடகையாக வசூலிக்கப்படும். இந்த குத்தகையை 30 ஆண்டுகளுக்கு இரண்டு முறை நீட்டித்துக்கொள்ளலாம்.

பின்னணி:

1985 ஆண்டு நிறுவப்பட்டதிலிருந்து தற்போது உதம்பூர் தர் சாலையில் உள்ள கேந்திரிய வித்யாலயா எண் 2 தற்காலிக கட்டிடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தற்போது 851 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். பாதுகாப்புத் துறையில் சேவை புரிந்துவரும் பணியாளர்களின் குழந்தைகள் படித்துவரும் இந்த பள்ளிக்கு சொந்த கட்டிட வசதி அமைந்தால் இந்த பள்ளி தேவையான அனைத்து உள்கட்டமைப்புகளையும் அமைத்து மேலும் தரமான கல்வியை அளிக்க முடியும்.

****



(Release ID: 1537681) Visitor Counter : 171