மத்திய அமைச்சரவை

தேசிய துப்புரவு தொழிலாளர்கள் ஆணையத்தில் ஒரு துணை தலைவர் மற்றும் உறுப்பினர் பதவியை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 04 JUL 2018 2:26PM by PIB Chennai

தேசிய துப்புரவு தொழிலாளர்கள் ஆணையத்தில் ஒரு துணை தலைவர் மற்றும் உறுப்பினர் பதவியை உருவாக்க பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஆணையத்தின் நடவடிக்கையை மேம்படுத்துதல் மற்றும் இலக்கு குழுவின் நலன் மற்றும் வளர்ச்சியை உறுதிசெய்தல் ஆகியவற்றிற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பின்னணி:

துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் மனித கழிவுகளை அகற்றும் துப்புரவு தொழிலாளர்கள் ஆகியோர்களின் நலனுக்காக தேசிய துப்புரவு தொழிலாளர்கள் ஆணைய பணிபுரிந்துவருகிறது. துப்புரவு தொழிலாளர்களுக்கு சமூக நிலை மற்றும் வாய்ப்புகளில் ஏற்படும் ஏற்றத்தாழ்வினை முழுமையாக அகற்றுவதை கட்டாயமாக கொண்டு இந்த ஆணையம் பணிபுரிந்துவருகிறது. மேலும், குறிப்பிட்ட காலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதக் கழிவுகளை அகற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படுவதை உறுதிசெய்வதிலும் இந்த ஆணையத்திற்கு முக்கிய பங்கு உண்டு. மனிதக் கழிவுகளை அகற்றுவதற்காக துப்புரவு தொழிலாளர்கள் நியமனத்தில் சமமற்ற தன்மையை நீக்குதல் மற்றும் அவர்களின் மறுவாழ்வு சட்டம் 2013 கீழ் உள்ள பிரிவு 31-ன் படி இந்த ஆணையம் கீழ்கண்ட பணிகளை மேற்கொண்டுவருகிறது:-

  1. இந்த சட்டம் நடைமுறைப் படுத்தப்படுவதை கண்காணித்தல்
  2. இந்த சட்டத்தின் விதிகளை மீறுதல் குறித்த புகார்களை விசாரித்தல்; மற்றும்
  3. இந்த சட்டத்தை இன்னும் சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு ஆலோசனை வழங்குதல்.

(Release ID: 1537594)