மத்திய அமைச்சரவை

தேர்தல் மேலாண்மை மற்றும் நிர்வாகத்துறையில் ஒத்துழைப்புக்கான இந்தியா – சுரிநாம் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்பதல்

प्रविष्टि तिथि: 16 MAY 2018 3:45PM by PIB Chennai

தேர்தல் மேலாண்மை மற்றும் நிர்வாகத்துறையில் ஒத்துழைப்புக்கான இந்தியா – சுரிநாம் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்பதல் அளித்தது. இந்த ஒப்பந்தத்தில் தேர்தல் நடைமுறை தொடர்பான அமைப்பு சார்ந்த தொழில்நுட்ப மேம்பாடு, தகவல் பரிவர்த்தனை ஆதரவு, நிறுவன வலுப்படுத்துதல் மற்றும் திறன்மேம்பாடு, பணியாளர்களுக்கான பயிற்சி, அடிக்கடி ஆலோசனைகள் நடத்துதல் போன்ற துறைகள் அறிவு மற்றும் அனுபவ பரிமாற்றத்திற்கும் இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.

    இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தினால் இருதரப்பு ஒத்துழைப்பு வலுப்படும். சுரிநாமுக்கு  தொழில்நுட்ப உதவி அளித்தல், திறன்மேம்பாட்டு ஆதரவளித்தல் போன்ற துறைகளில் ஒத்துழைப்பு வழங்குவதை இந்த ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

-------


(रिलीज़ आईडी: 1532520) आगंतुक पटल : 131
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Marathi , Assamese , Bengali , Gujarati , Telugu , Kannada , Malayalam