மத்திய அமைச்சரவை
மருத்துவக் கட்டமைப்பு வசதிகளுக்கு ஊக்கம் பிரதமரின் சுகாதார பாதுகாப்புத் திட்டம் 2019-20 வரை தொடர அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
02 MAY 2018 3:31PM by PIB Chennai
நாட்டில் மருத்துவ கட்டமைப்பு வசதி விரிவாக்கத்திற்கு பெரிய அளவில் வேகம் அளிக்கும் வகையில் பிரதமரின் சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை 12 ஆவது ஐந்தாண்டு திட்ட காலத்திற்கு பிறகும், 2019-20 வரை நீடிக்க பிரதமர் திரு நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக ரூ.14,832 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளை உருவாக்கவும், அரசு மருத்துவக் கல்லூரிகளை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
நோக்கங்கள்
இந்தத் திட்டம் நாடெங்கும் மூன்றாம் நிலை மருத்துவ வசதிகள் கிடைப்பதை சீராக்குவதையும், இதுவரை மருத்துவ வசதிகள் அதிகம் இல்லாத மாநிலங்களில் மருத்துவக் கல்விக்கான வசதிகளை மேம்படுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளது.
தாக்கம்
புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் உருவாக்கப்படுவதால் மருத்துவக் கல்வி மாற்றியமைக்கப்படுவதுடன் சம்பந்தப்பட்ட மண்டலங்களில் மருத்துவ பராமரிப்பு பணியாளர்களின் பற்றாக்குறை பிரச்சினை தீர்த்து வைக்கப்படும். புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளை அமைக்கும் திட்டம் முற்றிலும் மத்திய அரசு நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும். மேலும், இந்த புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு செலவினங்களையும் முழுவதுமாக மத்திய அரசே ஏற்றுக் கொள்ளும்.
மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், அதிசிறப்பு மருத்துவ சிகிச்சை பிரிவுகள் / அவசர சிகிச்சை மையங்கள் போன்றவை அமைப்பதன் மூலம் மருத்துவ அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். புதிதாக அமைக்கப்படவுள்ள மருத்துவமனைகளின் இயக்க, பராமரிப்பு செலவுகளை மத்திய அரசே ஏற்கும். அதிசிறப்பு மருத்துவப் பிரிவுகள், விபத்து பிரிவுகளை தொடங்கவும், கருவிகளை வாங்கவும் ஆகும் செலவை மத்திய-மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ளும்.
வேலை வாய்ப்பு உருவாக்கம்
புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படுவதால், மருத்துவத் துறை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் என சுமார் மூவாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அங்காடி மையங்கள், சிற்றுண்டி நிலையங்கள் போன்றவை புதிய எய்ம்ஸ் மருத்துவமனை பகுதிகளில் ஏற்படும் போது மறைமுக வேலைவாய்ப்புகளும் உருவாகும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரிகளில் மேம்பாட்டுத் திட்டங்கள் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட முகமைகள் மூலம் மத்திய அரசின் நேரடி மேற்பார்வையில் நடைபெறும். பட்டமேற்படிப்பு இடங்கள், கூடுதல் ஆசிரியர் பதவியிடங்கள் போன்றவை நெறிமுறைகளின் படி உருவாக்கப்படும். இந்த அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்த பணியிடங்களை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் நிரப்பிக் கொள்ளும்.
புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரிகளை மேம்படுத்தும் திட்ட கட்டுமானப் பணிகள் காரணமாகவும் குறிப்பிடத்தக்க அளவு வேலை வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பின்னணி
பிரதமரின் சுகாதார காப்பீட்டுத் திட்டம் 2003 ஆம் ஆண்டு மூன்றாம் நிலை மருத்துவ பராமரிப்பு சேவைகள் கட்டுப்படியாகும் விலைகளில் நம்பத்தகுந்த முறையில் கிடைப்பதில் உள்ள மண்டல சமச்சீரின்மைகளை சரிசெய்யும் நோக்கத்துடன் அறிவிக்கப்பட்டது. நாட்டில் தரமான மருத்துவக் கல்விக்கு உரிய வசதிகளை மேம்படுத்துவதும் இதன் நோக்கமாகும். பிரதமரின் சுகாதார காப்பீட்டுத் திட்டம் கீழ்கண்ட இரு பகுதிகளை கொண்டது:
- எய்ம்ஸ் போன்ற மருத்துவ நிறுவனங்களை உருவாக்குதல்.
- தற்போதுள்ள மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளை தரம் உயர்த்துதல்.
பிரதமர் சுகாதார காப்பீடு திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள்
பிரதமர் சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பல்வேறு கட்டங்களில் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்களாவன
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட கட்டமும், ஆண்டும்
|
எய்ம்ஸ் போன்ற நிறுவனங்கள்
|
மாநில அரசு மருத்துவக் கல்லூரிகள் மேம்பாடு
|
கட்டம்- 1 (2006)
|
போபால், புவனேஸ்வர், ஜோத்பூர், பட்னா, ராய்பூர், ரிஷிகேஷ் (6 எய்ம்ஸ் நிறுவனங்கள்)
|
13 மருத்துவக் கல்லூரிகள்
|
கட்டம் -II (2009)
|
மேற்குவங்க எய்ம்ஸ் (கட்டம் IV-க்கு மாற்றப்பட்டது), ரேபரேலி உத்தரப்பிரதேசம் (1 எய்ம்ஸ்)
|
6 அரசு மருத்துவக் கல்லூரிகள்
|
கட்டம் - III (2013)
|
புதிய எய்ம்ஸ் ஏதுமில்லை
|
39 அரசு மருத்துவக் கல்லூரிகள்
|
கட்டம் -IV (2014-15)
|
மேற்கு வங்கம், ஆந்திரப்பிரதேசம், மகாராஷ்டிரம், உத்தரப்பிரதேசத்தில் பூர்வாஞ்சல் (04 எய்ம்ஸ்)
|
13 அரசு மருத்துவக் கல்லூரிகள்.
|
கட்டம் - V (2015-16)
|
ஜம்மு, காஷ்மீர், பஞ்சாப், தமிழ்நாடு, இமாச்சலப்பிரதேசம், அஸ்ஸாம், பீஹார் (07 எய்ம்ஸ்)
|
இல்லை
|
கட்டம் - V(A) (2016-17)
|
இல்லை
|
பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்திலும், கேரளாவில் ஸ்ரீசித்ரா திருநாள் மருத்துவ விஞ்ஞான தொழில்நுட்ப நிறுவனத்திலும் இந்திய மருத்துவ முறை மருத்துவமனையில் உயர் சிறப்பு சிகிச்சை பிரிவு அமைத்து மேம்படுத்த அமைச்சரவை ஒப்புதல்.(02)
|
கட்டம் -Vl (2017-18)
|
குஜராத், ஜார்க்கண்ட் (02 எய்ம்ஸ்)
|
இல்லை
|
மொத்தம்
|
20 எய்ம்ஸ்
|
73 மேம்படுத்தும் திட்டங்கள்
|
(Release ID: 1530991)
Visitor Counter : 254